வெளிப்படுத்தின விசேஷம் 3
Tamil Bible (BSI 1957) • 22 verses
1சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.
RelatedI தீமோத்தேயு 5:6 · யாக்கோபு 2:26 · கொலோசெயர் 2:13 · வெளிப்படுத்தின விசேஷம் 1:4 · யூதா 1:12 · வெளிப்படுத்தின விசேஷம் 2:19
2நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 16:15 · II தீமோத்தேயு 4:1-4 · I பேதுரு 5:8 · I பேதுரு 4:7 · ஏசாயா 35:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28-31
3ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 2:5 · II பேதுரு 3:10 · I தெசலோனிக்கேயர் 5:2 · வெளிப்படுத்தின விசேஷம் 16:15 · மத்தேயு 24:42-43 · லூக்கா 12:39-40
4ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 7:9 · வெளிப்படுத்தின விசேஷம் 3:5 · பிரசங்கி 9:8 · வெளிப்படுத்தின விசேஷம் 6:11 · வெளிப்படுத்தின விசேஷம் 7:13-14 · வெளிப்படுத்தின விசேஷம் 4:4
5ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
Relatedமத்தேயு 10:32 · வெளிப்படுத்தின விசேஷம் 21:27 · லூக்கா 12:8 · வெளிப்படுத்தின விசேஷம் 20:15 · வெளிப்படுத்தின விசேஷம் 17:8 · வெளிப்படுத்தின விசேஷம் 20:12
6ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 2:7
7பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
Relatedஏசாயா 22:22 · மத்தேயு 16:19 · வெளிப்படுத்தின விசேஷம் 1:18 · யோபு 12:14 · யோவான் 14:6 · லூக்கா 1:32
8உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
RelatedI கொரிந்தியர் 16:9 · கொலோசெயர் 4:3 · வெளிப்படுத்தின விசேஷம் 3:7 · பிலிப்பியர் 4:13 · II கொரிந்தியர் 2:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27
9இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
Relatedஏசாயா 60:14 · வெளிப்படுத்தின விசேஷம் 2:9 · ஏசாயா 49:23 · ஏசாயா 45:14 · ஏசாயா 43:4 · சகரியா 8:20-23
10என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
RelatedII பேதுரு 2:9 · வெளிப்படுத்தின விசேஷம் 14:12 · தானியேல் 12:10 · சகரியா 13:9 · I கொரிந்தியர் 10:13 · வெளிப்படுத்தின விசேஷம் 2:10
11இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
Relatedயாக்கோபு 1:12 · வெளிப்படுத்தின விசேஷம் 22:12 · வெளிப்படுத்தின விசேஷம் 2:10 · வெளிப்படுத்தின விசேஷம் 2:25 · II தீமோத்தேயு 4:8 · I பேதுரு 5:3-4
12ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 22:4 · வெளிப்படுத்தின விசேஷம் 21:2 · வெளிப்படுத்தின விசேஷம் 14:1 · கலாத்தியர் 2:9 · எரேமியா 1:18 · வெளிப்படுத்தின விசேஷம் 2:17
13ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 2:7
14லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
Relatedகொலோசெயர் 1:15 · வெளிப்படுத்தின விசேஷம் 1:5 · II கொரிந்தியர் 1:20 · கொலோசெயர் 1:18 · வெளிப்படுத்தின விசேஷம் 3:7 · வெளிப்படுத்தின விசேஷம் 22:13
15உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
Relatedரோமர் 12:11 · மத்தேயு 6:24 · I இராஜாக்கள் 18:21 · யாக்கோபு 1:8 · வெளிப்படுத்தின விசேஷம் 2:4 · சங்கீதம் 81:11-13
16இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
17நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;
Relatedநீதிமொழிகள் 13:7 · ரோமர் 7:24 · ஓசியா 12:8 · வெளிப்படுத்தின விசேஷம் 2:9 · வெளிப்படுத்தின விசேஷம் 16:15 · லூக்கா 1:53
18நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 16:15 · I பேதுரு 1:7 · ஏசாயா 55:1 · வெளிப்படுத்தின விசேஷம் 19:8 · மல்கியா 3:3 · மத்தேயு 13:44
19நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
Relatedநீதிமொழிகள் 3:11-12 · I கொரிந்தியர் 11:32 · எபிரெயர் 12:5-11 · யோபு 5:17 · வெளிப்படுத்தின விசேஷம் 2:5 · எரேமியா 31:18
20இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
Relatedலூக்கா 12:36-37 · வெளிப்படுத்தின விசேஷம் 19:9 · யோவான் 14:21-23 · மத்தேயு 24:33 · உன்னதப்பாட்டு 5:2-4 · லூக்கா 17:8
21நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
Relatedமத்தேயு 19:28 · II தீமோத்தேயு 2:12 · வெளிப்படுத்தின விசேஷம் 2:26-27 · யோவான் 16:33 · வெளிப்படுத்தின விசேஷம் 2:7 · I கொரிந்தியர் 6:2-3
22ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.
📖 வெளிப்படுத்தின விசேஷம்All 22 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS