யோவான் 1
Tamil Bible (BSI 1957) • 51 verses
1ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
Relatedஆதியாகமம் 1:1 · யோவான் 17:5 · வெளிப்படுத்தின விசேஷம் 19:13 · கொலோசெயர் 1:17 · யோவான் 1:14 · I யோவான் 1:1-2
2அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
Relatedகொலோசெயர் 1:16-17 · I கொரிந்தியர் 8:6 · வெளிப்படுத்தின விசேஷம் 4:11 · சங்கீதம் 33:6 · ஆதியாகமம் 1:26 · யோவான் 1:10
4அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
Relatedயோவான் 3:19-20 · யோவான் 12:36-40 · I கொரிந்தியர் 2:14 · யோபு 24:13-17 · யோவான் 1:10 · ரோமர் 1:28
6தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.
Relatedமல்கியா 3:1 · யோவான் 3:28 · ஏசாயா 40:3-5 · யோவான் 1:33 · லூக்கா 1:76 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:24
7அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 19:4 · யோவான் 1:36 · யோவான் 1:12 · யோவான் 1:32-34 · யோவான் 5:33-35 · யோவான் 1:9
8அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
9உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
10அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
Relatedயோவான் 17:25 · I யோவான் 3:1 · I கொரிந்தியர் 2:8 · I கொரிந்தியர் 1:21 · மத்தேயு 11:27 · எபிரெயர் 11:3
11அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
Relatedலூக்கா 19:14 · ஏசாயா 53:2-3 · யோவான் 3:32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51-52 · லூக்கா 20:13-15 · மத்தேயு 15:24
12அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
Relatedகலாத்தியர் 3:26 · ரோமர் 8:14 · I யோவான் 3:1 · II கொரிந்தியர் 6:17-18 · கலாத்தியர் 4:6 · யோவான் 3:18
13அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
14அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
15யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
16அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
Relatedகொலோசெயர் 1:19 · ரோமர் 5:2 · எபேசியர் 2:5-10 · எபேசியர் 4:7-13 · கொலோசெயர் 2:9-10 · எபேசியர் 3:19
17எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
18தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
Relatedகொலோசெயர் 1:15 · யோவான் 6:46 · மத்தேயு 11:27 · லூக்கா 10:22 · I யோவான் 4:12 · I தீமோத்தேயு 6:16
19எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
Relatedயோவான் 10:24 · லூக்கா 3:15-18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:4 · யோவான் 5:33-36 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:25 · மத்தேயு 21:23-32
20அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
21அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.
Relatedஉபாகமம் 18:15-18 · மல்கியா 4:5 · மத்தேயு 11:14 · யோவான் 1:25 · மத்தேயு 17:10-12 · மத்தேயு 16:14
22அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
RelatedII சாமுவேல் 24:13
23அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
24அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.
Relatedலூக்கா 11:53 · மத்தேயு 23:13-15 · லூக்கா 11:39-44 · லூக்கா 16:14 · லூக்கா 7:30 · யோவான் 3:1-2
25அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங்கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
Relatedஉபாகமம் 18:18 · உபாகமம் 18:15 · யோவான் 1:20-22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:28 · மத்தேயு 21:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:5-7
26யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.
Relatedயோவான் 1:10-11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:5 · லூக்கா 3:16 · மாற்கு 1:8 · மத்தேயு 3:11 · யோவான் 8:19
27அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.
Relatedலூக்கா 3:16 · மத்தேயு 3:11 · யோவான் 1:30 · மாற்கு 1:7 · யோவான் 1:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:4
28இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.
29மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
Relatedஏசாயா 53:7 · I யோவான் 2:2 · I யோவான் 3:5 · I பேதுரு 1:19 · II கொரிந்தியர் 5:21 · I பேதுரு 2:24
30எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
31நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கவந்தேன் என்றான்.
32பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.
33நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:5 · மத்தேயு 3:11 · லூக்கா 3:16 · தீத்து 3:5-6 · யோவான் 3:34 · மாற்கு 1:7-8
34அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்.
35மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது,
36இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
37அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
Relatedரோமர் 10:17 · வெளிப்படுத்தின விசேஷம் 22:17 · யோவான் 1:43 · சகரியா 8:21 · யோவான் 4:39-42 · எபேசியர் 4:29
38இயேசு திரும்பி, அவர்கள் பின் செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
39அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையதினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.
40யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
Relatedமாற்கு 1:16-20 · மத்தேயு 4:18-22 · யோவான் 1:40-42 · லூக்கா 5:2-11 · மத்தேயு 10:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:13
41அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.
Relatedயோவான் 4:25 · யோவான் 1:45 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:32-33 · ஏசாயா 2:3-5 · சங்கீதம் 89:20 · யோவான் 1:36-37
42பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.
RelatedI கொரிந்தியர் 3:22 · யோவான் 21:15-17 · I கொரிந்தியர் 15:5 · I கொரிந்தியர் 1:12 · கலாத்தியர் 2:9 · மத்தேயு 10:2
43மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.
44பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான்.
45பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
46அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
Relatedயோவான் 7:52 · யோவான் 7:41-42 · யோவான் 4:29 · I தெசலோனிக்கேயர் 5:21 · லூக்கா 12:57 · லூக்கா 4:28-29
47இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 14:5 · சங்கீதம் 32:2 · சங்கீதம் 73:1 · யோவான் 8:39 · ரோமர் 9:4 · ரோமர் 9:6
48அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.
Relatedஏசாயா 65:24 · யோவான் 2:25 · சங்கீதம் 139:1-2 · மத்தேயு 6:6 · வெளிப்படுத்தின விசேஷம் 2:18-19 · I கொரிந்தியர் 14:25
49அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
50இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.
51பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
📖 யோவான்All 21 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS