மத்தேயு 13
Tamil Bible (BSI 1957) • 58 verses
1இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
2திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.
3அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
Relatedமாற்கு 4:2-9 · மாற்கு 4:13 · சங்கீதம் 78:2 · மத்தேயு 13:34-35 · II சாமுவேல் 12:1-7 · மத்தேயு 13:53
4அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
Relatedமத்தேயு 13:18-19
5சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.
6வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.
Relatedயாக்கோபு 1:11-12 · மத்தேயு 13:21 · லூக்கா 8:13 · ஏசாயா 49:10 · எபேசியர் 3:17 · கொலோசெயர் 1:23
7சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
8சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
Relatedயோவான் 15:8 · லூக்கா 8:15 · ஆதியாகமம் 26:12 · மத்தேயு 13:23 · கலாத்தியர் 5:22-23 · பிலிப்பியர் 1:11
9கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 2:11 · வெளிப்படுத்தின விசேஷம் 2:7 · மத்தேயு 11:15 · வெளிப்படுத்தின விசேஷம் 2:17 · மாற்கு 7:14-15 · வெளிப்படுத்தின விசேஷம் 2:29
10அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
11அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
RelatedI கொரிந்தியர் 2:9-10 · I கொரிந்தியர் 2:14 · மத்தேயு 19:11 · யாக்கோபு 1:5 · I யோவான் 2:27 · I யோவான் 2:20
12உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
Relatedமத்தேயு 25:29 · மாற்கு 4:24-25 · லூக்கா 8:18 · லூக்கா 19:24-26 · யோவான் 15:2-5 · வெளிப்படுத்தின விசேஷம் 2:5
13அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
Relatedஎசேக்கியேல் 12:2 · எரேமியா 5:21 · ஏசாயா 42:18-20 · II கொரிந்தியர் 4:3-4 · உபாகமம் 29:3-4 · யோவான் 3:19-20
14ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
Relatedஏசாயா 6:9-10 · எசேக்கியேல் 12:2 · II கொரிந்தியர் 3:14 · லூக்கா 8:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:25-27 · மாற்கு 4:12
15இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
Relatedஏசாயா 6:10 · மாற்கு 4:12 · சகரியா 7:11 · யோவான் 8:43-44 · II தீமோத்தேயு 2:25-26 · ஏசாயா 29:10-12
16உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
Relatedலூக்கா 10:23-24 · எபேசியர் 1:17-18 · மத்தேயு 16:17 · யோவான் 20:29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18 · II கொரிந்தியர் 4:6
17அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Relatedயோவான் 8:56 · எபிரெயர் 11:13 · லூக்கா 10:24 · I பேதுரு 1:10-12 · எபிரெயர் 11:39-40 · எபேசியர் 3:5-6
18ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
19ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
20கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்;
Relatedஎசேக்கியேல் 33:31-32 · சங்கீதம் 106:12-13 · யோவான் 5:35 · II நாளாகமம் 24:2 · சங்கீதம் 78:34-37 · ஏசாயா 58:2
21ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.
22முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்து, உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.
RelatedI தீமோத்தேயு 6:17 · லூக்கா 8:14 · I தீமோத்தேயு 6:9-10 · மாற்கு 4:18-19 · லூக்கா 12:15 · II தீமோத்தேயு 4:10
23நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.
Relatedபிலிப்பியர் 1:11 · மத்தேயு 12:33 · யோவான் 15:16 · கலாத்தியர் 5:22-23 · யோவான் 15:1-8 · மத்தேயு 13:8
24வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.
25மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்.
RelatedI பேதுரு 5:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:30-31 · II பேதுரு 2:1 · மத்தேயு 13:39 · வெளிப்படுத்தின விசேஷம் 12:9 · எபிரெயர் 12:15
26பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
Relatedமாற்கு 4:26-29
27வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
Relatedரோமர் 16:17 · II கொரிந்தியர் 6:1 · II கொரிந்தியர் 5:18-20 · II கொரிந்தியர் 6:4 · I கொரிந்தியர் 12:28-29 · I கொரிந்தியர் 16:10
28அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.
RelatedI கொரிந்தியர் 5:3-7 · I தெசலோனிக்கேயர் 5:14 · லூக்கா 9:49-54 · II கொரிந்தியர் 2:6-11 · யூதா 1:22-23
29அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
30அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
Relatedமத்தேயு 3:12 · I தீமோத்தேயு 5:24 · I கொரிந்தியர் 4:5 · யோவான் 15:6 · மல்கியா 3:18-4:1 · மத்தேயு 25:32
31வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
32அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
Relatedஎசேக்கியேல் 31:6 · தானியேல் 4:12 · எசேக்கியேல் 17:23-24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:20 · சகரியா 8:20-23 · தானியேல் 2:44-45
33வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.
Relatedகலாத்தியர் 5:9 · I கொரிந்தியர் 5:6-7 · லூக்கா 13:21 · பிலிப்பியர் 2:13-15 · ஆதியாகமம் 18:6 · நீதிமொழிகள் 4:18
34இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை.
35என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
Relatedசங்கீதம் 78:2 · எபேசியர் 3:9 · ரோமர் 16:25-26 · I பேதுரு 1:20-21 · I கொரிந்தியர் 2:7 · யோவான் 17:24
36அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.
37அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்;
RelatedI கொரிந்தியர் 3:5-7 · லூக்கா 10:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8 · மத்தேயு 13:27 · மத்தேயு 13:41 · மத்தேயு 13:24
38நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;
Relatedயோவான் 8:44 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:10 · பிலிப்பியர் 3:18-19 · I யோவான் 3:8-10 · I பேதுரு 1:23 · ஆதியாகமம் 3:15
39அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 14:15-19 · மத்தேயு 13:49 · மத்தேயு 25:31 · யோவேல் 3:13 · வெளிப்படுத்தின விசேஷம் 19:20 · மத்தேயு 13:25
40ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
Relatedமத்தேயு 13:39
41மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்த்து,
Relatedமத்தேயு 24:31 · மத்தேயு 18:7 · வெளிப்படுத்தின விசேஷம் 21:27 · II பேதுரு 2:1-2 · வெளிப்படுத்தின விசேஷம் 5:11-12 · எபிரெயர் 1:14
42அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
Relatedமத்தேயு 13:50 · லூக்கா 16:23-24 · மத்தேயு 8:12 · வெளிப்படுத்தின விசேஷம் 20:14-15 · வெளிப்படுத்தின விசேஷம் 20:10 · வெளிப்படுத்தின விசேஷம் 19:20
43அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
Relatedதானியேல் 12:3 · லூக்கா 12:32 · மத்தேயு 11:15 · மத்தேயு 25:34 · I கொரிந்தியர் 15:41-54 · வெளிப்படுத்தின விசேஷம் 21:22-23
44அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக்கொள்ளுகிறான்.
Relatedநீதிமொழிகள் 2:2-5 · கொலோசெயர் 2:3 · பிலிப்பியர் 3:7-9 · மத்தேயு 6:21 · லூக்கா 14:33 · எபிரெயர் 11:24-26
45மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
Relatedநீதிமொழிகள் 8:10-11 · மத்தேயு 16:26 · நீதிமொழிகள் 3:13-18 · மத்தேயு 13:24 · யோபு 28:18 · நீதிமொழிகள் 8:18-20
46அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக்கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.
Relatedலூக்கா 18:28-30 · எபேசியர் 3:8 · நீதிமொழிகள் 2:4 · மத்தேயு 13:44 · கொலோசெயர் 2:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:24
47அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
Relatedயோவான் 15:6 · II தீமோத்தேயு 3:2-5 · மத்தேயு 22:9-10 · மாற்கு 1:17 · I யோவான் 4:1-6 · II தீமோத்தேயு 4:3-4
48அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.
49இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 20:12-15 · மத்தேயு 13:39 · மத்தேயு 24:31 · மத்தேயு 22:12-14 · II தெசலோனிக்கேயர் 1:7-10 · மத்தேயு 25:19-33
50அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
Relatedலூக்கா 13:27-28 · வெளிப்படுத்தின விசேஷம் 14:10-11 · மத்தேயு 13:42 · மத்தேயு 8:12 · மத்தேயு 24:50-51 · வெளிப்படுத்தின விசேஷம் 16:10-11
51பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள்.
52அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.
RelatedI யோவான் 2:7-8 · தீத்து 1:9 · II தீமோத்தேயு 3:16-17 · தீத்து 2:6-7 · II கொரிந்தியர் 3:4-6 · மத்தேயு 12:35
53இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு,
54தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
55இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?
56இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
57அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
58அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.
📖 மத்தேயுAll 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS