I பேதுரு 5
Tamil Bible (BSI 1957) • 14 verses
1உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்:
Relatedலூக்கா 24:48 · கொலோசெயர் 3:3-4 · II யோவான் 1:1-15 · ரோமர் 8:17-18 · சங்கீதம் 73:24-25 · I பேதுரு 5:4
2உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
Relatedதீத்து 1:7 · I தீமோத்தேயு 3:8 · தீத்து 3:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:26-28 · I தீமோத்தேயு 3:3 · I கொரிந்தியர் 9:7
3சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.
RelatedII தெசலோனிக்கேயர் 3:9 · எசேக்கியேல் 34:4 · பிலிப்பியர் 3:17 · மத்தேயு 20:25-26 · II கொரிந்தியர் 1:24 · தீத்து 2:7
4அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
Relatedயாக்கோபு 1:12 · I கொரிந்தியர் 9:25 · ஏசாயா 40:11 · II தீமோத்தேயு 4:8 · I யோவான் 3:2 · சங்கீதம் 23:1
5அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
Relatedயாக்கோபு 4:6 · நீதிமொழிகள் 3:34 · எபேசியர் 5:21 · ரோமர் 12:10 · பிலிப்பியர் 2:3 · கொலோசெயர் 3:12
6ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
Relatedயாக்கோபு 4:10 · லூக்கா 14:11 · நீதிமொழிகள் 29:23 · மத்தேயு 23:12 · லூக்கா 18:14 · II நாளாகமம் 32:26
7அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
Relatedசங்கீதம் 55:22 · பிலிப்பியர் 4:6 · சங்கீதம் 37:5 · சங்கீதம் 56:3-4 · மத்தேயு 6:25-26 · மத்தேயு 6:33-34
8தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
9விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.
Relatedயாக்கோபு 4:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22 · எபேசியர் 6:11-13 · I பேதுரு 2:21 · I கொரிந்தியர் 10:13 · II தீமோத்தேயு 3:12
10கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
RelatedII கொரிந்தியர் 4:17 · II தெசலோனிக்கேயர் 3:3 · I பேதுரு 1:6-7 · யூதா 1:24 · சங்கீதம் 138:7 · I தீமோத்தேயு 6:12
11அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
12உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.
Relatedஎபிரெயர் 13:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:23 · II கொரிந்தியர் 1:19 · I கொரிந்தியர் 15:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:24 · II தெசலோனிக்கேயர் 1:1
13உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 12:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:25 · வெளிப்படுத்தின விசேஷம் 18:2 · சங்கீதம் 87:4 · II யோவான் 1:13 · வெளிப்படுத்தின விசேஷம் 17:5
14ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானமுண்டாவதாக. ஆமென்.
Relatedரோமர் 16:16 · எபேசியர் 6:23 · ரோமர் 8:1 · ரோமர் 1:7 · I கொரிந்தியர் 16:20 · I தெசலோனிக்கேயர் 5:26
📖 I பேதுருAll 5 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS