எசேக்கியேல் 18
Tamil Bible (BSI 1957) • 32 verses
1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துச் சொல்லுகிறது என்ன?
Relatedஎரேமியா 31:29-30 · புலம்பல் 5:7 · எசேக்கியேல் 37:19 · எசேக்கியேல் 37:11 · ஏசாயா 3:15 · எசேக்கியேல் 17:12
3இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
Relatedஎசேக்கியேல் 18:19-20 · எசேக்கியேல் 18:30 · எசேக்கியேல் 33:11-20 · ரோமர் 3:19 · எசேக்கியேல் 36:31-32
4இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.
Relatedஎசேக்கியேல் 18:20 · ரோமர் 6:23 · எண்ணாகமம் 16:22 · எபிரெயர் 12:9 · கலாத்தியர் 3:10-13 · சகரியா 12:1
5ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,
Relatedஎசேக்கியேல் 33:14 · நீதிமொழிகள் 21:3 · I யோவான் 3:7 · I யோவான் 5:2-5 · யாக்கோபு 2:14-26 · சங்கீதம் 15:2-5
6மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும் தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுபடுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும்,
Relatedஎசேக்கியேல் 18:15 · உபாகமம் 4:19 · எசேக்கியேல் 20:24 · எசேக்கியேல் 22:9-11 · எசேக்கியேல் 18:11-12 · எசேக்கியேல் 6:13
7ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,
Relatedஎசேக்கியேல் 18:16 · யாத்திராகமம் 22:26 · எசேக்கியேல் 18:12 · உபாகமம் 24:12-13 · எசேக்கியேல் 33:15 · எசேக்கியேல் 18:18
8வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி, மனிதருக்குள்ளவழக்கை உண்மையாய்த் தீர்த்து,
Relatedயாத்திராகமம் 22:25 · சகரியா 8:16 · உபாகமம் 23:19-20 · லேவியராகமம் 25:35-37 · உபாகமம் 16:18-20 · எசேக்கியேல் 22:12
9என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
10ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல்,
Relatedயாத்திராகமம் 21:12 · I யோவான் 3:12 · ஆதியாகமம் 9:5-6 · மல்கியா 3:8-9 · யாத்திராகமம் 22:2 · யோவான் 18:40
11இவைகளில் ஒன்றுக்கொப்பானதைச் செய்கிறவனுமாயிருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி,
Relatedலூக்கா 11:28 · யோவான் 15:14 · எசேக்கியேல் 18:6-7 · வெளிப்படுத்தின விசேஷம் 22:14 · யோவான் 13:17 · யாக்கோபு 2:17
12சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாயிருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடாமல், நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து,
Relatedஎசேக்கியேல் 8:6 · எசேக்கியேல் 8:17 · ஆமோஸ் 4:1 · II இராஜாக்கள் 21:11 · சகரியா 7:10 · எசேக்கியேல் 18:6-7
13வட்டிக்குக் கொடுத்து, பொலிசை வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவே சாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.
Relatedயாத்திராகமம் 22:25 · எசேக்கியேல் 18:8 · லேவியராகமம் 20:9 · எசேக்கியேல் 18:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:6 · எசேக்கியேல் 18:28
14பின்னும், இதோ, அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் தன் தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,
RelatedII நாளாகமம் 34:21 · நீதிமொழிகள் 23:24 · ஆகாய் 1:7 · ஏசாயா 44:19 · எசேக்கியேல் 20:18 · II நாளாகமம் 29:3-11
15மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,
16ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும், கொள்ளையிடாமலும், தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து,
Relatedஎசேக்கியேல் 18:7 · நீதிமொழிகள் 25:21 · சங்கீதம் 41:1 · லூக்கா 11:41 · நீதிமொழிகள் 22:9 · பிரசங்கி 11:1-2
17சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
Relatedஎசேக்கியேல் 18:8-9 · எசேக்கியேல் 18:19-21 · நீதிமொழிகள் 14:31 · மத்தேயு 23:29-33 · எசேக்கியேல் 33:13 · எசேக்கியேல் 18:28
18அவன் தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன் ஜனங்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, இவன் தன் அக்கிரமத்திலே சாவான்.
Relatedஎசேக்கியேல் 3:18 · எசேக்கியேல் 18:4 · எசேக்கியேல் 18:26 · ஏசாயா 3:11 · எசேக்கியேல் 18:24 · எசேக்கியேல் 18:20
19இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.
Relatedயாத்திராகமம் 20:5 · சகரியா 1:3-6 · எசேக்கியேல் 20:18-20 · எரேமியா 15:4 · எசேக்கியேல் 18:2 · எசேக்கியேல் 18:9
20பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்.
RelatedII இராஜாக்கள் 14:6 · உபாகமம் 24:16 · எசேக்கியேல் 18:4 · எரேமியா 31:29-30 · II நாளாகமம் 25:4 · மத்தேயு 16:27
21துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
Relatedஎசேக்கியேல் 33:19 · தீத்து 2:11-14 · எசேக்கியேல் 18:27-28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:19 · ரோமர் 8:13 · நீதிமொழிகள் 28:13
22அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.
Relatedமீகா 7:19 · ஏசாயா 43:25 · எசேக்கியேல் 33:16 · சங்கீதம் 18:20-24 · எசேக்கியேல் 18:24 · ரோமர் 8:1
23துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Relatedஎசேக்கியேல் 33:11 · I தீமோத்தேயு 2:4 · II பேதுரு 3:9 · எசேக்கியேல் 18:32 · லூக்கா 15:32 · சங்கீதம் 147:11
24நீதிமான் தன் நீதியைவிட்டுவிலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.
Relatedஎசேக்கியேல் 33:18 · நீதிமொழிகள் 21:16 · II யோவான் 1:8 · எசேக்கியேல் 33:12-13 · II நாளாகமம் 24:17-22 · கலாத்தியர் 3:4
25நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.
Relatedஎசேக்கியேல் 33:17 · மல்கியா 3:13-15 · எசேக்கியேல் 33:20 · மல்கியா 2:17 · எரேமியா 12:1 · ஆதியாகமம் 18:25
26நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான்.
27துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான்.
Relatedஎசேக்கியேல் 18:21 · ஏசாயா 1:18 · ஏசாயா 55:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:19 · I தீமோத்தேயு 4:16 · எசேக்கியேல் 33:5
28அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
Relatedஉபாகமம் 32:29 · லூக்கா 15:17-18 · கொலோசெயர் 3:5-9 · யாக்கோபு 2:10-12 · எசேக்கியேல் 18:31 · எசேக்கியேல் 12:3
29இஸ்ரவேல் வம்சத்தாரோ: ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, என் வழிகள் செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.
30ஆகையால் இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை.
Relatedமத்தேயு 16:27 · எசேக்கியேல் 18:21 · மத்தேயு 3:2 · எசேக்கியேல் 14:6 · லூக்கா 13:3 · எசேக்கியேல் 7:3
31நீங்கள் துரோகம்பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்?
Relatedசங்கீதம் 51:10 · எசேக்கியேல் 36:26 · எசேக்கியேல் 11:19 · ரோமர் 8:13 · ஏசாயா 1:16-17 · ரோமர் 12:2
32மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புவதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
📖 எசேக்கியேல்All 48 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS