மத்தேயு 10
Tamil Bible (BSI 1957) • 42 verses
1அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
Relatedலூக்கா 9:1-6 · மாற்கு 3:13-15 · மாற்கு 6:7-13 · லூக்கா 10:19 · மாற்கு 16:17-18 · லூக்கா 24:49
2அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:13 · மத்தேயு 4:21 · மத்தேயு 4:18 · யோவான் 6:8 · யோவான் 12:22 · லூக்கா 5:10
3பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:13 · மாற்கு 3:18 · யோவான் 1:43-46 · மாற்கு 2:14 · மத்தேயு 9:9 · யோவான் 21:2
4கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
5இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
Relatedயோவான் 4:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:21-23 · II இராஜாக்கள் 17:24-41 · ரோமர் 15:8-9 · I தெசலோனிக்கேயர் 2:16 · யோவான் 4:22-24
6காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
Relatedஎரேமியா 50:6 · எசேக்கியேல் 34:6 · ஏசாயா 53:6 · I பேதுரு 2:25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:46 · சங்கீதம் 119:176
7போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 28:31 · மத்தேயு 3:2 · மத்தேயு 4:17 · லூக்கா 9:60 · லூக்கா 16:16 · லூக்கா 10:9-11
8வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 3:6 · லூக்கா 10:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:30 · மத்தேயு 10:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:33-35 · மாற்கு 16:18
9உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
10வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது,. பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.
Relatedலூக்கா 10:7-12 · I தீமோத்தேயு 5:17-18 · லூக்கா 3:11 · கலாத்தியர் 6:6-7 · I கொரிந்தியர் 9:4-14 · I சாமுவேல் 9:7
11எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
Relatedலூக்கா 10:7-8 · யோபு 31:32 · I இராஜாக்கள் 17:9-24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:1-3 · நியாயாதிபதிகள் 19:16-21 · மாற்கு 6:10
12ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
RelatedI சாமுவேல் 25:6 · லூக்கா 10:5-6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:36 · II கொரிந்தியர் 5:20 · III யோவான் 1:14
13அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
14எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 18:6 · லூக்கா 10:10-11 · நெகேமியா 5:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:51 · லூக்கா 9:5 · மாற்கு 6:11
15நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Relatedயோவான் 15:22-24 · II பேதுரு 2:6 · I யோவான் 4:17 · லூக்கா 10:11-12 · மத்தேயு 11:22-24 · எசேக்கியேல் 16:48-56
16ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடமற்றவர்களுமாய் இருங்கள்.
Relatedபிலிப்பியர் 2:15 · லூக்கா 10:3 · I கொரிந்தியர் 14:20 · கொலோசெயர் 4:5 · எபேசியர் 5:15-17 · ரோமர் 16:18-19
17மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.
Relatedமாற்கு 13:9 · மத்தேயு 23:34 · யோவான் 16:2 · லூக்கா 12:11 · மத்தேயு 5:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:11
18அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
Relatedமாற்கு 13:9 · மத்தேயு 8:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:1-26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:25-27 · சங்கீதம் 2:1-6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1-4
19அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
Relatedயாத்திராகமம் 4:12 · மாற்கு 13:11-13 · II தீமோத்தேயு 4:17 · லூக்கா 21:12-17 · லூக்கா 12:11 · யாத்திராகமம் 4:15
20பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
RelatedII சாமுவேல் 23:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:10 · லூக்கா 21:15 · லூக்கா 12:12 · II பேதுரு 1:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:4
21சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.
Relatedலூக்கா 21:16-17 · மீகா 7:5-6 · மாற்கு 13:12-13 · மத்தேயு 24:10 · லூக்கா 12:51-53 · சகரியா 13:3
22என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
Relatedமத்தேயு 24:13 · யாக்கோபு 1:12 · வெளிப்படுத்தின விசேஷம் 2:10 · மாற்கு 13:13 · மத்தேயு 10:39 · I யோவான் 3:13
23ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Relatedமத்தேயு 16:28 · யோவான் 11:53-54 · மாற்கு 13:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:1 · லூக்கா 4:29-31
24சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல.
25சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
26அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
27நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 5:20 · யோவான் 16:13 · யோவான் 16:1 · நீதிமொழிகள் 1:20-23 · லூக்கா 8:10 · மத்தேயு 13:1-17
28ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
Relatedலூக்கா 12:4-5 · ஏசாயா 8:12-13 · வெளிப்படுத்தின விசேஷம் 2:10 · யாக்கோபு 4:12 · ரோமர் 8:35-39 · பிரசங்கி 8:12-13
29ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.
30உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
Relatedலூக்கா 12:7 · I சாமுவேல் 14:45 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:34 · லூக்கா 21:18 · II சாமுவேல் 14:11 · I இராஜாக்கள் 1:52
31ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
32மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 3:5 · ரோமர் 10:9-10 · லூக்கா 12:8-9 · I யோவான் 4:15 · II தீமோத்தேயு 1:8 · I சாமுவேல் 2:30
33மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
RelatedII தீமோத்தேயு 2:12 · லூக்கா 9:26 · லூக்கா 12:9 · I யோவான் 2:23 · II பேதுரு 2:1 · மாற்கு 14:30
34பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
Relatedலூக்கா 12:49-53 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:45-50 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:2 · யோவான் 7:40-52 · எரேமியா 15:10
35எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
36ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
37தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
Relatedலூக்கா 14:26 · மத்தேயு 22:37 · பிலிப்பியர் 3:7-9 · II கொரிந்தியர் 5:14-15 · உபாகமம் 33:9 · யோவான் 21:15-17
38தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
39தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
Relatedயோவான் 12:25 · மாற்கு 8:35-36 · லூக்கா 17:33 · மத்தேயு 16:25-26 · லூக்கா 9:24 · வெளிப்படுத்தின விசேஷம் 2:10
40உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
41தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.
RelatedIII யோவான் 1:5-8 · எபிரெயர் 6:10 · II இராஜாக்கள் 4:16-17 · II இராஜாக்கள் 4:8-10 · லூக்கா 14:13-14 · II யோவான் 1:8
42சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
📖 மத்தேயுAll 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS