ஏசாயா 57
Tamil Bible (BSI 1957) • 21 verses
1நீதிமான் மடிந்து போகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.
RelatedII இராஜாக்கள் 22:20 · சங்கீதம் 12:1 · II நாளாகமம் 34:28 · மீகா 7:2 · ஏசாயா 42:25 · ஏசாயா 47:7
2நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 14:13 · II கொரிந்தியர் 5:1 · யோபு 3:17 · லூக்கா 2:29 · II கொரிந்தியர் 5:8 · பிரசங்கி 12:7
3நாள் பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் வேசிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே கிட்டிவாருங்கள்.
Relatedமத்தேயு 16:4 · I யோவான் 3:10 · ஓசியா 1:2 · யாக்கோபு 4:4 · ஏசாயா 45:20 · வெளிப்படுத்தின விசேஷம் 17:1-5
4நீங்கள் யாரைப் பரியாசம்பண்ணுகிறீர்கள்? யாருக்கு விரோதமாய் வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்பண்ணுகிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ?
5நீங்கள் பச்சையான சகல மரத்தின்கீழும், விக்கிரக தேவர்களோடே மோகாக்கினியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ்ப் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள்.
Relatedஏசாயா 1:29 · எசேக்கியேல் 16:20 · II இராஜாக்கள் 16:3-4 · எரேமியா 3:13 · எரேமியா 2:20 · எரேமியா 7:31
6பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை வார்த்து, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ?
7நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்.
Relatedஎசேக்கியேல் 16:16 · எசேக்கியேல் 23:41 · எரேமியா 2:20 · எசேக்கியேல் 20:28-29 · எரேமியா 3:6 · எசேக்கியேல் 16:25
8கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் மஞ்சத்தை அகலமாக்கி, அவர்களோடே உடன்படிக்கைபண்ணினாய்; அவர்களுடைய மஞ்சத்தைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய்.
Relatedஎசேக்கியேல் 23:41 · எசேக்கியேல் 16:32 · எசேக்கியேல் 23:2-20 · எசேக்கியேல் 8:8-12 · எசேக்கியேல் 16:25-28
9நீ தைலத்தைப் பூசிக்கொண்டு ராஜாவினிடத்தில் போகிறாய்; உன் பரிமளங்களை மிகுதியாக்கி, உன் ஸ்தானாபதிகளைத் தூரத்துக்கு அனுப்பி, உன்னைப் பாதாளமட்டும் தாழ்த்துகிறாய்.
Relatedஎசேக்கியேல் 23:16 · எசேக்கியேல் 23:40 · ஏசாயா 30:1-6 · ஏசாயா 31:1-3 · கொலோசெயர் 2:18 · எசேக்கியேல் 16:33
10வழிதூரமானதால் உழன்றுபோகிறாய்; அது விருதாவென்று நீ சொல்லுகிறதில்லை; உன் கைபெலத்தைக் கண்டுபிடித்தாய்; ஆகையால் நீ ஆயாசப்படவில்லை.
Relatedஎரேமியா 2:25 · எரேமியா 18:12 · எரேமியா 5:3 · எரேமியா 44:17-18 · எசேக்கியேல் 24:12 · II நாளாகமம் 28:22-23
11நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்லுகிறாயே; நீ என்னை நினையாமலும், உன் மனதிலே வைக்காமலும்போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய்.
Relatedஏசாயா 51:12-13 · நீதிமொழிகள் 29:25 · சங்கீதம் 50:21 · எரேமியா 3:21 · ஏசாயா 26:10 · எரேமியா 2:32
12உன் நீதியையும் உன் கிரியைகளையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது.
13நீ கூப்பிடும்போது, உன் கணங்கள் உன்னைத் தப்புவிக்கட்டும்; காற்று அவைகளையெல்லாம் பறக்கடித்து, மாயை அவைகளைக் கொண்டுபோகும்; என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சுதந்தரித்து, என் பரிசுத்த பர்வதத்திலே காணியாட்சிக்காரனாயிருப்பான்.
14வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, இடறல்களை என் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும்.
15நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.
Relatedசங்கீதம் 34:18 · ஏசாயா 66:1-2 · சங்கீதம் 138:6 · சங்கீதம் 147:3 · யாத்திராகமம் 15:11 · தானியேல் 4:34
16நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.
Relatedமீகா 7:18 · எரேமியா 10:24 · சங்கீதம் 103:9-16 · சங்கீதம் 85:5 · எபிரெயர் 12:9 · சங்கீதம் 78:38-39
17நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே.
18அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்.
Relatedஎரேமியா 33:6 · வெளிப்படுத்தின விசேஷம் 7:17 · எரேமியா 3:22 · ஓசியா 14:4-8 · எரேமியா 31:3 · எரேமியா 13:17
19தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 2:39 · எபிரெயர் 13:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:36 · லூக்கா 10:5-6 · எபேசியர் 6:19 · லூக்கா 2:14
20துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.
Relatedநீதிமொழிகள் 4:16-17 · ஏசாயா 3:11 · யோபு 18:5-14 · யோபு 15:20-24 · சங்கீதம் 73:18-20 · யூதா 1:12
21துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.
📖 ஏசாயாAll 66 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS