ஏசாயா 6
Tamil Bible (BSI 1957) • 13 verses
1உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.
Relatedயோவான் 12:41 · வெளிப்படுத்தின விசேஷம் 15:8 · வெளிப்படுத்தின விசேஷம் 7:15-17 · தானியேல் 7:9 · சங்கீதம் 113:5 · மத்தேயு 25:31
2சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன்தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன்தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 4:8 · எசேக்கியேல் 1:11 · சங்கீதம் 104:4 · சங்கீதம் 103:20 · ஏசாயா 6:6 · சகரியா 3:4
3ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 4:8-9 · சங்கீதம் 72:19 · எண்ணாகமம் 14:21 · எஸ்றா 3:11 · யாத்திராகமம் 15:11 · யாத்திராகமம் 15:20-21
4கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 15:8 · வெளிப்படுத்தின விசேஷம் 11:19 · I இராஜாக்கள் 8:10-12 · யாத்திராகமம் 40:34 · II நாளாகமம் 5:13-6:1 · எசேக்கியேல் 10:5
5அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
Relatedலூக்கா 5:8-9 · யாக்கோபு 3:6-10 · எரேமியா 9:3-8 · எரேமியா 1:6 · மத்தேயு 12:34-37 · யாத்திராகமம் 6:30
6அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்துவந்து,
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 8:3-5 · எபிரெயர் 9:22-26 · எசேக்கியேல் 10:2 · லேவியராகமம் 16:12 · ஏசாயா 6:2 · எபிரெயர் 1:7
7அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.
8பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
Relatedயாத்திராகமம் 4:10-13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:16-17 · எபேசியர் 3:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:21 · ஏசாயா 65:1 · மத்தேயு 4:20-22
9அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.
Relatedமத்தேயு 13:14-15 · லூக்கா 8:10 · மாற்கு 4:12 · யோவான் 12:40 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:26-27 · ரோமர் 11:8
10இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
Relatedமத்தேயு 13:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:27 · எரேமியா 5:21 · எரேமியா 6:10 · யோவான் 3:19-20 · சகரியா 7:11
11அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,
12கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும்வரைக்குமே.
Relatedஎரேமியா 4:29 · உபாகமம் 28:64 · எரேமியா 15:4 · எரேமியா 52:28-30 · புலம்பல் 5:20 · II இராஜாக்கள் 25:21
13ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளில் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.
📖 ஏசாயாAll 66 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS