பிரசங்கி 5
Tamil Bible (BSI 1957) • 20 verses
1நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.
Relatedயாக்கோபு 1:19 · எபிரெயர் 12:28-29 · நீதிமொழிகள் 15:8 · ஏசாயா 1:12-20 · I பேதுரு 2:1-2 · நீதிமொழிகள் 21:27
2தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.
Relatedமத்தேயு 6:7 · நீதிமொழிகள் 10:19 · ஏசாயா 55:9 · மத்தேயு 6:9 · ஆதியாகமம் 18:27 · எண்ணாகமம் 30:2-5
3தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.
4நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய்.
Relatedஎண்ணாகமம் 30:2 · சங்கீதம் 76:11 · உபாகமம் 23:21-23 · மத்தேயு 5:33 · சங்கீதம் 66:13-14 · சங்கீதம் 50:14
5நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற் போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்.
6உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?
Relatedயாக்கோபு 1:26 · II யோவான் 1:8 · யாக்கோபு 3:2 · பிரசங்கி 5:1-2 · மல்கியா 2:7 · லேவியராகமம் 5:4-6
7அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும், வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.
Relatedமத்தேயு 12:36 · பிரசங்கி 12:13 · பிரசங்கி 8:12 · பிரசங்கி 5:3 · நீதிமொழிகள் 23:17 · ஏசாயா 50:10-11
8ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.
Relatedசங்கீதம் 12:5 · பிரசங்கி 4:1 · பிரசங்கி 3:16 · சங்கீதம் 58:10-11 · வெளிப்படுத்தின விசேஷம் 17:6-7 · I இராஜாக்கள் 21:19-20
9பூமியில் விளையும் பலன் யாவருக்குமுரியது; ராஜாவும் வயலின் பலனால் ஆதரிக்கப்படுகிறான்.
Relatedசங்கீதம் 115:16 · I இராஜாக்கள் 4:7-23 · சங்கீதம் 104:14-15 · ஆதியாகமம் 1:29-30 · நீதிமொழிகள் 28:19 · I சாமுவேல் 8:12-17
10பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.
11பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதைக் காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?
RelatedI யோவான் 2:16 · ஆபகூக் 2:13 · சங்கீதம் 119:36-37 · நீதிமொழிகள் 23:5 · பிரசங்கி 6:9 · யோசுவா 7:21-25
12வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும், அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.
13சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
Relatedபிரசங்கி 6:1-2 · லூக்கா 18:22-23 · ஆதியாகமம் 19:14 · லூக்கா 16:22-23 · யாக்கோபு 5:1-4 · பிரசங்கி 4:8
14அந்த ஐசுவரியம் விக்கினத்தால் அழிந்துபோகிறது; அவன் ஒரு புத்திரனைப் பெறுகிறான்; அவன் கையில் யாதொன்றும் இல்லை.
Relatedபிரசங்கி 2:26 · நீதிமொழிகள் 23:5 · யோபு 5:5 · யோபு 20:15-29 · ஆகாய் 2:16-17 · மத்தேயு 6:19-20
15தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை.
16அவன் வந்த பிரகாரமே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்குப் பிரயாசப்பட்டதினால் அவனுக்கு லாபம் என்ன?
Relatedநீதிமொழிகள் 11:29 · பிரசங்கி 1:3 · மாற்கு 8:36 · யோவான் 6:27 · பிரசங்கி 5:13 · I சாமுவேல் 12:21
17அவன் தன் நாட்களிலெல்லாம் இருளிலே புசித்து, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான்.
Relatedசங்கீதம் 127:2 · எசேக்கியேல் 4:16-17 · யோபு 21:25 · II நாளாகமம் 16:10-12 · I கொரிந்தியர் 11:30-32 · ஆதியாகமம் 3:17
18இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு.
Relatedபிரசங்கி 2:24 · பிரசங்கி 3:22 · பிரசங்கி 3:12-13 · பிரசங்கி 9:7 · I தீமோத்தேயு 6:17 · பிரசங்கி 8:15
19தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன்அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.
Relatedஉபாகமம் 8:18 · பிரசங்கி 3:13 · பிரசங்கி 6:2 · II நாளாகமம் 1:12 · பிரசங்கி 2:24-26 · I இராஜாக்கள் 3:13
20அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு அநுக்கிரகம் பண்ணுகிறபடியினால், அவன் தன் ஜீவனுள்ள நாட்களை அதிகமாய் நினையான்.
Relatedசங்கீதம் 37:16 · ஏசாயா 65:21-24 · ஏசாயா 65:13-14 · சங்கீதம் 4:6-7 · ரோமர் 5:1 · உபாகமம் 28:47
📖 பிரசங்கிAll 12 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS