நீதிமொழிகள் 28
Tamil Bible (BSI 1957) • 28 verses
1ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.
Relatedஉபாகமம் 28:7 · சங்கீதம் 53:5 · ஏசாயா 26:3-4 · சங்கீதம் 27:1-2 · சங்கீதம் 112:7 · I தெசலோனிக்கேயர் 2:2
2தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.
RelatedI இராஜாக்கள் 16:8-29 · ஆதியாகமம் 45:5-8 · யோபு 22:28-30 · I இராஜாக்கள் 15:28 · II இராஜாக்கள் 15:8-31 · தானியேல் 4:27
3ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.
Relatedமத்தேயு 18:28-30
4வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேத பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.
Relatedரோமர் 1:32 · எபேசியர் 5:11 · மத்தேயு 14:4 · மத்தேயு 3:7 · I இராஜாக்கள் 18:18 · சங்கீதம் 49:18
5துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.
6இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.
Relatedநீதிமொழிகள் 19:1 · நீதிமொழிகள் 28:18 · லூக்கா 16:19-23 · நீதிமொழிகள் 19:22 · நீதிமொழிகள் 16:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:24-27
7வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
Relatedநீதிமொழிகள் 29:3 · நீதிமொழிகள் 29:15 · I பேதுரு 4:3-4 · நீதிமொழிகள் 28:24 · நீதிமொழிகள் 19:26 · நீதிமொழிகள் 2:1-6
8அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.
Relatedயோபு 27:16-17 · நீதிமொழிகள் 13:22 · பிரசங்கி 2:26 · லேவியராகமம் 25:36 · யாத்திராகமம் 22:25 · எசேக்கியேல் 18:17
9வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
Relatedசங்கீதம் 66:18 · II தீமோத்தேயு 4:3-4 · சகரியா 7:11-13 · நீதிமொழிகள் 15:8 · சங்கீதம் 109:7 · ஏசாயா 1:15-16
10உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.
Relatedநீதிமொழிகள் 26:27 · சங்கீதம் 37:25-26 · சங்கீதம் 7:15-16 · நீதிமொழிகள் 15:6 · நீதிமொழிகள் 10:3 · மத்தேயு 6:33
11ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.
Relatedநீதிமொழிகள் 18:17 · பிரசங்கி 9:15-17 · நீதிமொழிகள் 19:1 · ரோமர் 12:16 · I கொரிந்தியர் 3:18-19 · லூக்கா 16:13-14
12நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்து கொள்ளுகிறார்கள்.
Relatedநீதிமொழிகள் 29:2 · நீதிமொழிகள் 11:10 · நீதிமொழிகள் 28:28 · எஸ்தர் 8:15-17 · யோபு 29:11-20 · எபிரெயர் 11:37-38
13தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
RelatedI யோவான் 1:8-10 · சங்கீதம் 32:3-5 · யோபு 31:33 · லூக்கா 15:18-24 · எரேமியா 3:12-13 · சங்கீதம் 51:1-5
14எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.
15ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.
RelatedI பேதுரு 5:8 · மத்தேயு 2:16 · நீதிமொழிகள் 19:12 · நீதிமொழிகள் 20:2 · யாத்திராகமம் 1:22 · யாத்திராகமம் 1:14-16
16பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.
Relatedயாத்திராகமம் 18:21 · நெகேமியா 5:15 · பிரசங்கி 4:1 · எரேமியா 22:15-17 · I இராஜாக்கள் 12:10 · ஏசாயா 3:12
17இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.
Relatedஆதியாகமம் 9:6 · யாத்திராகமம் 21:14 · I இராஜாக்கள் 21:19 · II நாளாகமம் 24:21-25 · எண்ணாகமம் 35:14-34 · மத்தேயு 27:4-5
18உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
Relatedநீதிமொழிகள் 10:9 · நீதிமொழிகள் 28:6 · வெளிப்படுத்தின விசேஷம் 3:3 · நீதிமொழிகள் 11:3-6 · சங்கீதம் 84:11 · எண்ணாகமம் 22:32
19தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.
Relatedநீதிமொழிகள் 12:11 · நீதிமொழிகள் 13:20 · நீதிமொழிகள் 27:23-27 · நியாயாதிபதிகள் 9:4 · நீதிமொழிகள் 23:20-21 · லூக்கா 15:12-17
20உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
Relatedலூக்கா 16:10-12 · நீதிமொழிகள் 13:11 · வெளிப்படுத்தின விசேஷம் 2:10 · சங்கீதம் 112:4-9 · நீதிமொழிகள் 10:6 · சங்கீதம் 101:6
21முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ் செய்வான்.
Relatedநீதிமொழிகள் 24:23 · நீதிமொழிகள் 18:5 · எசேக்கியேல் 13:19 · யாத்திராகமம் 23:8 · மீகா 3:5 · யாத்திராகமம் 23:2
22வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.
Relatedநீதிமொழிகள் 23:6 · I தீமோத்தேயு 6:9 · நீதிமொழிகள் 28:20 · யோபு 27:16-17 · மத்தேயு 20:15 · ஆதியாகமம் 13:10-13
23தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
Relatedநீதிமொழிகள் 27:5-6 · மத்தேயு 18:15 · சங்கீதம் 141:5 · II சாமுவேல் 12:7 · I இராஜாக்கள் 1:32-40 · நீதிமொழிகள் 29:5
24தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.
Relatedமத்தேயு 15:4-6 · நீதிமொழிகள் 18:9 · நீதிமொழிகள் 19:26 · நீதிமொழிகள் 28:7 · நியாயாதிபதிகள் 17:2 · நீதிமொழிகள் 13:20
25பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.
Relatedநீதிமொழிகள் 11:25 · I தீமோத்தேயு 6:6 · நீதிமொழிகள் 13:4 · நீதிமொழிகள் 29:25 · நீதிமொழிகள் 13:10 · நீதிமொழிகள் 10:12
26தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
27தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.
Relatedநீதிமொழிகள் 19:17 · சங்கீதம் 41:1-3 · நீதிமொழிகள் 11:24 · உபாகமம் 15:7 · உபாகமம் 15:10 · சங்கீதம் 112:5-9
28துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS