உன்னதப்பாட்டு 5
Tamil Bible (BSI 1957) • 16 verses
1என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.
Relatedஉன்னதப்பாட்டு 6:2 · உன்னதப்பாட்டு 4:16 · வெளிப்படுத்தின விசேஷம் 22:17 · உன்னதப்பாட்டு 4:9-14 · ஏசாயா 55:1-2 · உன்னதப்பாட்டு 8:13
2நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 3:20 · உன்னதப்பாட்டு 2:14 · சகரியா 4:1 · உன்னதப்பாட்டு 6:9 · சங்கீதம் 119:1 · ஏசாயா 53:3-5
3என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.
Relatedலூக்கா 11:7 · மத்தேயு 25:5 · நீதிமொழிகள் 22:13 · மத்தேயு 26:38-43 · ரோமர் 7:22-23 · நீதிமொழிகள் 3:28
4என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.
Relatedசங்கீதம் 110:3 · ஆதியாகமம் 43:30 · I இராஜாக்கள் 3:26 · II கொரிந்தியர் 8:1-2 · II கொரிந்தியர் 8:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:14
5என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
Relatedஉன்னதப்பாட்டு 5:13 · எபேசியர் 3:17 · II கொரிந்தியர் 7:9-11 · II கொரிந்தியர் 7:7 · லூக்கா 12:36 · வெளிப்படுத்தின விசேஷம் 3:20
6என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை.
Relatedஉன்னதப்பாட்டு 5:2 · வெளிப்படுத்தின விசேஷம் 3:19 · ஓசியா 5:15 · ஏசாயா 58:2 · I சாமுவேல் 28:6 · சங்கீதம் 22:1-2
7நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; அலங்கத்தின் காவற்காரர் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.
Relatedஉன்னதப்பாட்டு 3:3 · சங்கீதம் 141:5 · யோவான் 16:2 · மத்தேயு 23:29-36 · மத்தேயு 21:33-41 · I கொரிந்தியர் 4:10-13
8எருசலேமின் குமாரத்திகளே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.
Relatedஉன்னதப்பாட்டு 2:7 · உன்னதப்பாட்டு 2:5 · உன்னதப்பாட்டு 3:5 · சங்கீதம் 42:1-3 · சங்கீதம் 77:1-3 · ரோமர் 15:30
9ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?
Relatedஉன்னதப்பாட்டு 6:1 · உன்னதப்பாட்டு 1:8 · உன்னதப்பாட்டு 6:9-10 · மத்தேயு 16:13-17 · ஏசாயா 53:2 · சங்கீதம் 45:13
10என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.
Relatedசங்கீதம் 45:2 · பிலிப்பியர் 2:9-11 · உன்னதப்பாட்டு 2:1 · சங்கீதம் 45:17 · I சாமுவேல் 16:12 · கொலோசெயர் 1:18
11அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.
Relatedஉன்னதப்பாட்டு 7:5 · தானியேல் 7:9 · வெளிப்படுத்தின விசேஷம் 1:14 · எபேசியர் 1:21-22 · உன்னதப்பாட்டு 5:2 · தானியேல் 2:37-38
12அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.
13அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
Relatedஉன்னதப்பாட்டு 1:10 · உன்னதப்பாட்டு 6:2 · உன்னதப்பாட்டு 2:1 · உன்னதப்பாட்டு 3:6 · உன்னதப்பாட்டு 4:11 · சங்கீதம் 4:6-7
14அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
Relatedயாத்திராகமம் 24:10 · ஏசாயா 54:11 · எசேக்கியேல் 1:16 · யாத்திராகமம் 39:13 · எசேக்கியேல் 1:26-28 · ஏசாயா 9:7
15அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.
RelatedI இராஜாக்கள் 4:33 · வெளிப்படுத்தின விசேஷம் 1:15-16 · மத்தேயு 28:3 · உன்னதப்பாட்டு 4:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:28 · I தீமோத்தேயு 3:16
16அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவர் என் சிநேகிதர்.
Relatedசங்கீதம் 45:2 · உன்னதப்பாட்டு 7:9 · உன்னதப்பாட்டு 6:3 · I பேதுரு 2:6-7 · எரேமியா 15:16 · ஓசியா 3:1
📖 உன்னதப்பாட்டுAll 8 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS