சங்கீதம் 45
Tamil Bible (BSI 1957) • 17 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
2எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.
Relatedலூக்கா 4:22 · உன்னதப்பாட்டு 5:10-16 · சங்கீதம் 21:6 · யோவான் 7:46 · எபிரெயர் 7:26 · யோவான் 1:14
3சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,
Relatedஎபிரெயர் 4:12 · வெளிப்படுத்தின விசேஷம் 1:16 · ஏசாயா 49:2 · வெளிப்படுத்தின விசேஷம் 19:15 · ஏசாயா 63:1-6 · சங்கீதம் 96:6
4சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்.
Relatedசங்கீதம் 65:5 · வெளிப்படுத்தின விசேஷம் 19:11 · வெளிப்படுத்தின விசேஷம் 6:2 · ஏசாயா 59:17-18 · சகரியா 9:9 · மத்தேயு 11:29
5உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.
Relatedசங்கீதம் 21:12 · சங்கீதம் 38:2 · எண்ணாகமம் 24:8 · சங்கீதம் 22:27 · சகரியா 9:13-14 · சங்கீதம் 66:3-4
6தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
Relatedஎபிரெயர் 1:8-9 · சங்கீதம் 93:2 · யோவான் 1:1 · ஏசாயா 9:6-7 · எரேமியா 33:15-16 · எரேமியா 23:5-6
7நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.
Relatedஎபிரெயர் 1:9 · சங்கீதம் 21:6 · ஏசாயா 61:1-3 · சங்கீதம் 33:5 · எபேசியர் 1:3 · கொலோசெயர் 1:18-19
8தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.
Relatedஉன்னதப்பாட்டு 1:3 · II கொரிந்தியர் 2:14-16 · யோவான் 19:39 · உன்னதப்பாட்டு 4:6 · மத்தேயு 2:11 · யாத்திராகமம் 30:23-24
9உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு, ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 21:9 · I இராஜாக்கள் 2:19 · எபேசியர் 5:26-27 · வெளிப்படுத்தின விசேஷம் 19:7 · வெளிப்படுத்தின விசேஷம் 21:2 · யோவான் 3:29
10குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
Relatedஉன்னதப்பாட்டு 2:10-13 · ஆதியாகமம் 12:1 · மத்தேயு 10:37 · மத்தேயு 19:29 · II கொரிந்தியர் 6:17-7:1 · உபாகமம் 21:13
11அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.
Relatedசங்கீதம் 95:6 · ஏசாயா 54:5 · உன்னதப்பாட்டு 4:1-5 · செப்பனியா 3:17 · பிலிப்பியர் 2:10-11 · உன்னதப்பாட்டு 1:8
12தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஜசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.
13ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.
Relatedஏசாயா 61:10 · வெளிப்படுத்தின விசேஷம் 19:7-8 · லூக்கா 11:40 · மத்தேயு 5:16 · ரோமர் 3:22 · ரோமர் 13:14
14சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்.
RelatedII கொரிந்தியர் 11:2 · உன்னதப்பாட்டு 8:13 · யாத்திராகமம் 28:39 · உன்னதப்பாட்டு 1:3-5 · உன்னதப்பாட்டு 6:1 · உன்னதப்பாட்டு 6:8
15அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 7:15-17 · யூதா 1:24 · ஏசாயா 35:10 · ஏசாயா 61:10 · ஏசாயா 60:19-20 · ஏசாயா 56:5
16உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 5:10 · I பேதுரு 2:9 · வெளிப்படுத்தின விசேஷம் 1:6 · ஏசாயா 60:1-5 · மாற்கு 10:29-30 · ஏசாயா 49:21-22
17உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன்; இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS