நீதிமொழிகள் 16
Tamil Bible (BSI 1957) • 33 verses
1மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.
Relatedநீதிமொழிகள் 19:21 · நீதிமொழிகள் 16:9 · லூக்கா 21:14-15 · பிலிப்பியர் 2:13 · நீதிமொழிகள் 20:24 · மத்தேயு 10:19-20
2மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
Relatedநீதிமொழிகள் 21:2 · I சாமுவேல் 16:7 · லூக்கா 16:15 · நீதிமொழிகள் 30:12 · எரேமியா 17:10 · நீதிமொழிகள் 24:12
3உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
Relatedசங்கீதம் 37:4-5 · நீதிமொழிகள் 3:6 · சங்கீதம் 55:22 · பிலிப்பியர் 4:6 · I பேதுரு 5:7 · யோபு 22:28
4கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
Relatedரோமர் 9:22 · II பேதுரு 2:9 · ஏசாயா 43:21 · ஏசாயா 43:7 · I பேதுரு 2:8 · வெளிப்படுத்தின விசேஷம் 4:11
5மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.
Relatedநீதிமொழிகள் 6:16-17 · நீதிமொழிகள் 11:21 · நீதிமொழிகள் 8:13 · ரோமர் 2:8-9 · யாக்கோபு 4:6 · யோபு 40:12
6கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
Relatedநீதிமொழிகள் 14:16 · யோபு 28:28 · II கொரிந்தியர் 7:1 · தானியேல் 4:27 · லூக்கா 11:41 · நீதிமொழிகள் 14:27
7ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
Relatedரோமர் 8:31 · I யோவான் 3:22 · II நாளாகமம் 17:10 · கொலோசெயர் 1:10 · எரேமியா 15:11 · எபிரெயர் 13:21
8அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.
Relatedநீதிமொழிகள் 15:16 · சங்கீதம் 37:16 · I தீமோத்தேயு 6:6-9 · எரேமியா 17:11 · நீதிமொழிகள் 21:6-7 · மீகா 6:10
9மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.
Relatedநீதிமொழிகள் 19:21 · சங்கீதம் 37:23 · நீதிமொழிகள் 16:1 · நீதிமொழிகள் 20:24 · எரேமியா 10:23 · நீதிமொழிகள் 21:30
10ராஜாவின் உதடுகளில் திவ்வியவாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.
Relatedஏசாயா 32:1-2 · ஆதியாகமம் 44:15 · ஆதியாகமம் 44:5 · I இராஜாக்கள் 3:28 · சங்கீதம் 45:6-7 · உபாகமம் 17:18-20
11சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
Relatedநீதிமொழிகள் 11:1 · நீதிமொழிகள் 20:10 · நீதிமொழிகள் 20:23 · லேவியராகமம் 19:35-36 · உபாகமம் 25:13-15 · எசேக்கியேல் 45:10
12அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
Relatedநீதிமொழிகள் 25:5 · நீதிமொழிகள் 29:14 · லூக்கா 12:48 · நீதிமொழிகள் 28:9 · வெளிப்படுத்தின விசேஷம் 19:11 · நீதிமொழிகள் 20:18
13நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
14ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
Relatedநீதிமொழிகள் 20:2 · நீதிமொழிகள் 19:12 · பிரசங்கி 10:4 · நீதிமொழிகள் 17:11 · தானியேல் 3:13-25 · மாற்கு 6:27
15ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
Relatedசங்கீதம் 72:6 · யோபு 29:23-24 · ஓசியா 6:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:28 · சங்கீதம் 4:6 · நீதிமொழிகள் 19:12
16பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியை சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!
Relatedநீதிமொழிகள் 8:10-11 · மத்தேயு 16:26 · நீதிமொழிகள் 8:19 · லூக்கா 12:21 · பிரசங்கி 7:12 · நீதிமொழிகள் 3:15-18
17தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.
Relatedஏசாயா 35:8 · நீதிமொழிகள் 19:16 · நீதிமொழிகள் 10:9 · யூதா 1:21 · நீதிமொழிகள் 4:24-27 · வெளிப்படுத்தின விசேஷம் 3:10
18அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
Relatedநீதிமொழிகள் 11:2 · ஏசாயா 2:11-12 · நீதிமொழிகள் 18:12 · ஒபதியா 1:3-4 · நீதிமொழிகள் 29:23 · I தீமோத்தேயு 3:6
19அகங்காரிகளோடே கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.
Relatedமத்தேயு 5:3 · சங்கீதம் 138:6 · ஏசாயா 57:15 · யாத்திராகமம் 15:9 · சங்கீதம் 34:18 · ஏசாயா 53:12
20விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.
21இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.
Relatedநீதிமொழிகள் 16:23-24 · நீதிமொழிகள் 15:7 · ஏசாயா 50:4 · நீதிமொழிகள் 27:9 · யாக்கோபு 3:17 · லூக்கா 4:22
22புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.
Relatedநீதிமொழிகள் 13:14 · யோவான் 6:63 · மத்தேயு 15:14 · யோவான் 5:24 · நீதிமொழிகள் 18:4 · நீதிமொழிகள் 10:11
23ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
Relatedநீதிமொழிகள் 15:28 · மத்தேயு 12:34-35 · கொலோசெயர் 3:16 · நீதிமொழிகள் 22:17-18 · சங்கீதம் 37:30-31 · சங்கீதம் 45:1
24இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.
Relatedநீதிமொழிகள் 12:18 · நீதிமொழிகள் 24:13-14 · நீதிமொழிகள் 4:22 · நீதிமொழிகள் 25:11-12 · நீதிமொழிகள் 23:16 · சங்கீதம் 119:103
25மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
Relatedநீதிமொழிகள் 14:12 · நீதிமொழிகள் 12:15 · II கொரிந்தியர் 13:5 · நீதிமொழிகள் 12:26 · ஏசாயா 28:15-19 · யோவான் 7:47-49
26பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
Relatedபிரசங்கி 6:7 · நீதிமொழிகள் 14:23 · நீதிமொழிகள் 9:12 · II தெசலோனிக்கேயர் 3:8-12 · I தெசலோனிக்கேயர் 4:11-12
27பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
Relatedயாக்கோபு 3:6 · நீதிமொழிகள் 6:14 · ஏசாயா 5:18 · நீதிமொழிகள் 6:12 · சங்கீதம் 17:14-15 · சங்கீதம் 57:4
28மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
Relatedநீதிமொழிகள் 17:9 · நீதிமொழிகள் 15:18 · யாக்கோபு 3:14-16 · நீதிமொழிகள் 18:8 · ரோமர் 1:29 · நீதிமொழிகள் 6:14
29கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.
Relatedநீதிமொழிகள் 2:12-15 · நீதிமொழிகள் 12:26 · II பேதுரு 3:17 · நீதிமொழிகள் 1:10-14 · நீதிமொழிகள் 3:31 · நெகேமியா 6:13
30அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.
Relatedநீதிமொழிகள் 6:12-14 · மத்தேயு 13:15 · நீதிமொழிகள் 16:27 · நீதிமொழிகள் 10:10 · மீகா 7:3 · யோவான் 3:20
31நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம்.
Relatedநீதிமொழிகள் 20:29 · லேவியராகமம் 19:32 · நீதிமொழிகள் 3:1-2 · I சாமுவேல் 12:2-5 · நீதிமொழிகள் 17:6 · பிரசங்கி 4:13
32பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
Relatedயாக்கோபு 1:19 · நீதிமொழிகள் 15:18 · நீதிமொழிகள் 25:28 · நீதிமொழிகள் 14:29 · நீதிமொழிகள் 19:11 · ரோமர் 12:21
33சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS