மத்தேயு 15
Tamil Bible (BSI 1957) • 39 verses
1அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:
Relatedமத்தேயு 5:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:9 · லூக்கா 5:30 · மாற்கு 3:22 · லூக்கா 5:21 · மத்தேயு 23:2
2உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம்பண்ணுகிறார்களே! என்றார்கள்.
3அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
4உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.
Relatedயாத்திராகமம் 20:12 · யாத்திராகமம் 21:17 · லேவியராகமம் 20:9 · உபாகமம் 21:18-21 · உபாகமம் 5:16 · நீதிமொழிகள் 23:22
5நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து,
Relatedமாற்கு 7:10-13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:29 · மத்தேயு 23:16-18 · லேவியராகமம் 27:9-34 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:19 · ஆமோஸ் 7:15-17
6உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
RelatedI தீமோத்தேயு 5:8 · எரேமியா 8:8 · சங்கீதம் 119:126 · மாற்கு 7:13 · மல்கியா 2:7-9 · சங்கீதம் 119:139
7மாயக்காரரே, உங்களைக்குறித்து:
8இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
Relatedஏசாயா 29:13 · எசேக்கியேல் 33:31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:21 · I பேதுரு 3:10 · எரேமியா 12:2 · நீதிமொழிகள் 23:26
9மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
Relatedஏசாயா 29:13 · மாற்கு 7:7 · தீத்து 1:14 · I தீமோத்தேயு 1:4 · கொலோசெயர் 2:18-22 · I தீமோத்தேயு 4:6-7
10பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.
11வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
Relatedமாற்கு 7:15 · மத்தேயு 15:18-20 · யாக்கோபு 3:5-8 · I தீமோத்தேயு 4:4-5 · மத்தேயு 12:34-37 · ரோமர் 14:17
12அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
RelatedI இராஜாக்கள் 22:13-14 · I கொரிந்தியர் 10:32-33 · யாக்கோபு 3:17 · கலாத்தியர் 2:5 · மத்தேயு 17:27 · II கொரிந்தியர் 6:3
13அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
14அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
15அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான்.
16அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
17வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
Relatedலூக்கா 6:45 · I கொரிந்தியர் 6:13 · மத்தேயு 7:19-20 · கொலோசெயர் 2:21-22 · யாக்கோபு 3:6 · II இராஜாக்கள் 10:27
18வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
Relatedநீதிமொழிகள் 15:28 · மத்தேயு 12:34 · மத்தேயு 15:11 · யாக்கோபு 3:6-10 · நீதிமொழிகள் 15:2 · நீதிமொழிகள் 10:32
19எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
Relatedமாற்கு 7:21-23 · கலாத்தியர் 5:19-21 · எரேமியா 17:9 · தீத்து 3:2-6 · யாக்கோபு 1:13-15 · நீதிமொழிகள் 4:23
20இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
Relatedமாற்கு 7:3-4 · I கொரிந்தியர் 6:18-20 · மத்தேயு 15:2 · மத்தேயு 23:25-26 · வெளிப்படுத்தின விசேஷம் 21:27 · I கொரிந்தியர் 3:16-17
21பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
Relatedமாற்கு 7:24-30 · மத்தேயு 11:21-23 · யோசுவா 19:28-29 · நியாயாதிபதிகள் 1:31 · யோசுவா 13:6 · மத்தேயு 10:5-6
22அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
Relatedமத்தேயு 9:27 · மாற்கு 7:25-26 · மத்தேயு 17:15 · சங்கீதம் 45:12 · லூக்கா 18:38-39 · சங்கீதம் 4:1
23அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
Relatedமத்தேயு 14:15 · ஆதியாகமம் 42:7 · சங்கீதம் 28:1 · புலம்பல் 3:8 · மாற்கு 10:47-48 · உபாகமம் 8:2
24அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார்.
Relatedமத்தேயு 10:5-6 · ரோமர் 15:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:46 · எரேமியா 50:6-7 · எசேக்கியேல் 34:5-6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:25-26
25அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
26அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
Relatedமாற்கு 7:27-28 · மத்தேயு 7:6 · பிலிப்பியர் 3:2 · எபேசியர் 2:12 · கலாத்தியர் 2:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:21-22
27அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
Relatedலூக்கா 16:21 · எபேசியர் 3:8 · யோபு 40:4-5 · ரோமர் 10:12 · லூக்கா 15:18-19 · I தீமோத்தேயு 1:13-15
28இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.
29இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
30அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.
Relatedலூக்கா 6:17-19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:15-16 · மத்தேயு 14:35-36 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:11-12 · ஏசாயா 35:5-6 · சங்கீதம் 103:3
31ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
32பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
Relatedமத்தேயு 9:36 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:33 · லூக்கா 12:29-30 · மத்தேயு 14:14-21 · மாற்கு 8:1-10 · லூக்கா 7:13
33அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்.
34அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
35அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
36அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
Relatedரோமர் 14:6 · லூக்கா 22:19 · யோவான் 6:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:35 · I தீமோத்தேயு 4:3-4 · I கொரிந்தியர் 10:31
37எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
Relatedசங்கீதம் 107:9 · மாற்கு 8:19-21 · மத்தேயு 14:20-21 · மத்தேயு 16:9-10 · மத்தேயு 15:33 · லூக்கா 1:53
38ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம்பேராயிருந்தார்கள்.
39அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.
📖 மத்தேயுAll 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS