புலம்பல் 4
Tamil Bible (BSI 1957) • 22 verses
1ஐயோ! பொன் மங்கி, பசும்பொன் மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே.
Relatedஎசேக்கியேல் 7:19-22 · புலம்பல் 2:19 · ஏசாயா 1:21 · மத்தேயு 24:2 · ஏசாயா 14:12 · எரேமியா 52:13
2ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.
Relatedஏசாயா 30:14 · ரோமர் 9:21-23 · எரேமியா 19:11 · II தீமோத்தேயு 2:20 · II கொரிந்தியர் 4:7 · ஏசாயா 51:18
3திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே.
Relatedலூக்கா 23:28-29 · எசேக்கியேல் 5:10 · புலம்பல் 2:20 · புலம்பல் 4:10 · யோபு 39:13-16 · II இராஜாக்கள் 6:26-29
4குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்கு கொடுப்பாரில்லை.
Relatedசங்கீதம் 22:15 · புலம்பல் 2:11-12 · சங்கீதம் 137:6 · உபாகமம் 32:24 · புலம்பல் 1:11 · மத்தேயு 7:9-11
5ருசியான பதார்த்தங்களைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக்கொள்ளுகிறார்கள்.
Relatedலூக்கா 16:19 · லூக்கா 15:16 · ஆமோஸ் 6:3-7 · நீதிமொழிகள் 31:21 · II சாமுவேல் 1:24 · ஏசாயா 24:6-12
6கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப்பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.
7அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும், பாலைப்பார்க்கிலும் வெண்மையும், பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும், இந்திரநீலத்தைப்பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள்.
Relatedசங்கீதம் 51:7 · சங்கீதம் 144:12 · உன்னதப்பாட்டு 5:10 · I சாமுவேல் 16:12 · ஆமோஸ் 2:11-12 · நியாயாதிபதிகள் 13:5
8இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.
9பசியினால் கொலையுண்டவர்களைப்பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்து போகிறார்கள்.
10இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.
RelatedII இராஜாக்கள் 6:26-29 · புலம்பல் 2:20 · ஏசாயா 49:15 · எரேமியா 19:9 · புலம்பல் 4:3 · புலம்பல் 3:48
11கர்த்தர் தமது கோபத்தை நிறைவேற்றி, தமது உக்கிரகோபத்தை ஊற்றி, சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; அது அதின் அஸ்திபாரங்களைப் பட்சித்துப்போட்டது.
Relatedஎரேமியா 7:20 · எசேக்கியேல் 22:31 · எரேமியா 17:27 · புலம்பல் 2:17 · எரேமியா 13:14 · எரேமியா 14:15-16
12சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்.
13அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.
Relatedஎரேமியா 5:31 · எரேமியா 6:13 · புலம்பல் 2:14 · எரேமியா 26:8-9 · மத்தேயு 23:31 · எசேக்கியேல் 22:26-28
14குருடர்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக்கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.
15விலகுங்கள், தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள்; இனி தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது.
Relatedலேவியராகமம் 13:45-46
16கர்த்தருடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, அவர்களை இனி அவர் நோக்கார்; ஆசாரியருடைய முகத்தைப் பாராமலும் முதியோரை மதியாமலும்போனார்கள்.
Relatedஏசாயா 9:14-16 · புலம்பல் 5:12 · உபாகமம் 32:26 · எபிரெயர் 8:9 · உபாகமம் 28:64-65 · எரேமியா 24:9
17இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப்போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
Relatedஎசேக்கியேல் 29:16 · II இராஜாக்கள் 24:7 · ஏசாயா 20:5 · ஏசாயா 31:1-3 · எரேமியா 2:36 · எரேமியா 8:20
18நாங்கள் எங்கள் வீதிகளில் நடவாதபடிக்கு எங்கள் அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள்; எங்கள் முடிவு சமீபித்தது; எங்கள் நாட்கள் நிறைவேறிப்போயின; எங்கள் முடிவு வந்துவிட்டது.
Relatedஆமோஸ் 8:2 · சங்கீதம் 140:11 · எசேக்கியேல் 7:2-12 · எரேமியா 16:16 · புலம்பல் 3:52 · எரேமியா 52:7-9
19எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைப்பார்க்கிலும் வேகமாயிருந்தார்கள்; பர்வதங்கள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்; வனாந்தரத்தில் எங்களுக்குப் பதிவிருந்தார்கள்.
20கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும், அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.
RelatedII சாமுவேல் 1:14 · எரேமியா 39:5 · II சாமுவேல் 19:21 · ஆதியாகமம் 2:7 · எசேக்கியேல் 12:13 · புலம்பல் 2:9
21ஊத்ஸ்தேசவாசியாகிய ஏதோம் குமாரத்தியே, சந்தோஷித்துக் களிகூரு; பாத்திரம் உன்னிடத்திற்கும் தாண்டிவரும், அப்பொழுது நீ வெறித்து, மானபங்கமாய்க்கிடப்பாய்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 16:15 · ஆமோஸ் 1:11 · யோபு 1:1 · சங்கீதம் 137:7 · எரேமியா 25:15-29 · எசேக்கியேல் 25:8
22சீயோன் குமாரத்தியே, உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது; அவர் இனி உன்னை அப்புறம் சிறைப்பட்டுப்போகவிடார்; ஏதோம் குமாரத்தியே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.
📖 புலம்பல்All 5 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS