சங்கீதம் 89
Tamil Bible (BSI 1957) • 52 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
Relatedசங்கீதம் 101:1 · சங்கீதம் 89:8 · புலம்பல் 3:23 · சங்கீதம் 119:90 · சங்கீதம் 89:33 · சங்கீதம் 89:4-5
2கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன்.
Relatedசங்கீதம் 36:5 · நெகேமியா 9:31 · எண்ணாகமம் 23:19 · எபிரெயர் 6:18 · சங்கீதம் 103:17 · சங்கீதம் 89:5
3என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி, என் தாசனாகிய தாவீதை நோக்கி:
Relatedசங்கீதம் 132:11 · II சாமுவேல் 7:10-16 · I இராஜாக்கள் 8:16 · சங்கீதம் 89:28 · எபிரெயர் 7:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:30
4என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா)
RelatedII சாமுவேல் 7:12-16 · லூக்கா 1:32-33 · ஏசாயா 9:6-7 · சங்கீதம் 132:12 · I நாளாகமம் 17:10-14 · பிலிப்பியர் 2:9-11
5கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
Relatedசங்கீதம் 19:1 · சங்கீதம் 97:6 · ஏசாயா 44:23 · II தெசலோனிக்கேயர் 1:7 · சங்கீதம் 50:6 · வெளிப்படுத்தின விசேஷம் 7:10-12
6ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
Relatedசங்கீதம் 86:8 · சங்கீதம் 71:19 · எரேமியா 10:6 · சங்கீதம் 113:5 · சங்கீதம் 29:1 · யாத்திராகமம் 15:11
7தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.
Relatedசங்கீதம் 47:2 · சங்கீதம் 76:7-11 · எபிரெயர் 12:28-29 · எரேமியா 10:7 · வெளிப்படுத்தின விசேஷம் 15:3-4 · எரேமியா 10:10
8சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
Relatedசங்கீதம் 71:19 · எரேமியா 32:17 · I சாமுவேல் 2:2 · சங்கீதம் 147:5 · ஏசாயா 40:25-26 · சங்கீதம் 24:8
9தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.
Relatedசங்கீதம் 65:7 · சங்கீதம் 107:25-29 · மாற்கு 4:41 · மத்தேயு 8:24-27 · மாற்கு 4:39 · சங்கீதம் 93:3-4
10நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர்.
Relatedசங்கீதம் 87:4 · சங்கீதம் 144:6 · சங்கீதம் 68:30 · யாத்திராகமம் 7:1-15 · சங்கீதம் 105:27-45 · சங்கீதம் 59:11
11வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவரையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
RelatedI நாளாகமம் 29:11 · ஆதியாகமம் 1:1 · சங்கீதம் 115:16 · சங்கீதம் 24:1-2 · I கொரிந்தியர் 10:26 · சங்கீதம் 50:12
12வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும்.
Relatedயோசுவா 19:22 · யோபு 26:7 · யோசுவா 12:1 · நியாயாதிபதிகள் 4:12 · உபாகமம் 3:8-9 · நியாயாதிபதிகள் 4:6
13உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது.
14நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
Relatedசங்கீதம் 97:2 · நீதிமொழிகள் 16:12 · சங்கீதம் 45:6-7 · சங்கீதம் 145:17 · சங்கீதம் 85:13 · உபாகமம் 32:4
15கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
Relatedசங்கீதம் 44:3 · யோபு 29:3 · ஏசாயா 2:5 · சங்கீதம் 4:6 · ஏசாயா 52:7-8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:28
16அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
Relatedபிலிப்பியர் 4:4 · பிலிப்பியர் 3:9 · சங்கீதம் 29:7 · லூக்கா 1:47 · II கொரிந்தியர் 5:21 · சங்கீதம் 89:12
17நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்.
Relatedசங்கீதம் 75:10 · சங்கீதம் 92:10 · சங்கீதம் 148:14 · II கொரிந்தியர் 12:9-10 · சங்கீதம் 112:9 · I கொரிந்தியர் 1:30-31
18கர்த்தரால் எங்கள் கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
19அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
RelatedI சாமுவேல் 16:18 · I இராஜாக்கள் 11:34 · II சாமுவேல் 7:8-17 · எபிரெயர் 2:9-17 · பிலிப்பியர் 2:6-11 · ஏசாயா 9:6
20என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் பண்ணினேன்.
RelatedI சாமுவேல் 16:12-13 · ஏசாயா 61:1-3 · I சாமுவேல் 16:1 · யோவான் 3:34 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:22
21என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்.
Relatedஏசாயா 42:1 · சங்கீதம் 18:32-39 · சங்கீதம் 89:13 · ஏசாயா 41:10 · சங்கீதம் 80:15-17 · எசேக்கியேல் 30:24-25
22சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை.
23அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
RelatedII சாமுவேல் 7:9 · II சாமுவேல் 22:40-44 · சங்கீதம் 132:18 · சங்கீதம் 21:8-9 · சங்கீதம் 18:40 · II சாமுவேல் 7:1
24என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.
RelatedII கொரிந்தியர் 1:20 · சங்கீதம் 91:14 · சங்கீதம் 89:16-17 · சங்கீதம் 89:33 · சங்கீதம் 20:5 · யோவான் 17:6
25அவன் கையைச் சமுத்திரத்தின்மேலும், அவன் வலது கரத்தை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன்.
Relatedசங்கீதம் 80:11 · வெளிப்படுத்தின விசேஷம் 11:15 · சங்கீதம் 72:8-11 · சங்கீதம் 2:8 · I இராஜாக்கள் 4:21
26அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
RelatedII சாமுவேல் 7:14 · II சாமுவேல் 22:47 · சங்கீதம் 95:1 · சங்கீதம் 62:6-7 · மத்தேயு 26:42 · சங்கீதம் 62:2
27நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
Relatedகொலோசெயர் 1:18 · கொலோசெயர் 1:15 · சங்கீதம் 2:7 · வெளிப்படுத்தின விசேஷம் 19:16 · ரோமர் 8:29 · சங்கீதம் 72:11
28என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
Relatedஏசாயா 55:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:32-34 · ஏசாயா 54:10 · எரேமியா 33:20-21 · II சாமுவேல் 7:15-16 · சங்கீதம் 111:9
29அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன்.
30அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல், என் வேதத்தை விட்டு விலகி;
RelatedII சாமுவேல் 7:14 · I நாளாகமம் 28:9 · சங்கீதம் 132:12 · சங்கீதம் 119:53 · நீதிமொழிகள் 28:4 · எசேக்கியேல் 20:19
31என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என் நியமங்களை மீறி நடந்தால்;
Relatedசங்கீதம் 55:20
32அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
RelatedII சாமுவேல் 7:14 · நீதிமொழிகள் 3:11-12 · எபிரெயர் 12:6-11 · I இராஜாக்கள் 11:39 · I இராஜாக்கள் 11:14 · ஆமோஸ் 3:2
33ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்.
Relatedஏசாயா 54:8-10 · II சாமுவேல் 7:15 · புலம்பல் 3:31-32 · எபிரெயர் 6:18 · எரேமியா 33:20-26 · I சாமுவேல் 15:29
34என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன்.
35ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்.
36அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
37சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா)
Relatedஎரேமியா 31:35-36 · சங்கீதம் 104:19 · ஆதியாகமம் 1:14-18 · ஆதியாகமம் 9:13-16 · ஏசாயா 54:9-10 · சங்கீதம் 72:7
38ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர்.
RelatedI நாளாகமம் 28:9 · உபாகமம் 32:19 · சங்கீதம் 89:51 · சங்கீதம் 106:40 · எரேமியா 12:1 · சகரியா 13:7
39உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவன் கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.
Relatedபுலம்பல் 5:16 · சங்கீதம் 74:7 · ஏசாயா 43:28 · சங்கீதம் 89:34-36 · ஏசாயா 25:12 · சங்கீதம் 116:11
40அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர்.
41வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன் அயலாருக்கு நிந்தையானான்.
Relatedசங்கீதம் 79:4 · எரேமியா 24:9 · எசேக்கியேல் 5:14-15 · தானியேல் 9:16 · எரேமியா 29:18 · புலம்பல் 5:1
42அவன் சத்துருக்களின் வலது கையை நீர் உயர்த்தி, அவன் விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர்.
Relatedசங்கீதம் 80:6 · வெளிப்படுத்தின விசேஷம் 11:10 · உபாகமம் 28:43 · உபாகமம் 28:25 · சங்கீதம் 13:2 · லேவியராகமம் 26:25
43அவன் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
RelatedII நாளாகமம் 25:8 · யோசுவா 7:4-5 · எசேக்கியேல் 30:21-25 · யோசுவா 7:8-12 · எண்ணாகமம் 14:45 · லேவியராகமம் 26:36-37
44அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.
Relatedதானியேல் 7:20-25 · சங்கீதம் 89:39 · I சாமுவேல் 4:21-22 · II தெசலோனிக்கேயர் 2:3-10 · I இராஜாக்கள் 14:25-28 · I இராஜாக்கள் 12:16-20
45அவன் வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா)
Relatedசங்கீதம் 109:29 · சங்கீதம் 44:15 · சங்கீதம் 102:23 · மீகா 7:10 · சங்கீதம் 89:28-29 · II நாளாகமம் 10:19
46எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?
47என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்கவேண்டியதென்ன?
48மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா)
Relatedஎபிரெயர் 11:5 · பிரசங்கி 9:5 · சங்கீதம் 49:15 · பிரசங்கி 12:7 · சங்கீதம் 49:7-9 · பிரசங்கி 8:8
49ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே?
RelatedII சாமுவேல் 7:15 · எபிரெயர் 7:21 · ஏசாயா 55:3 · ஏசாயா 63:7-15 · சங்கீதம் 89:35 · சங்கீதம் 54:5
50ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம் பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
Relatedசங்கீதம் 74:22 · சங்கீதம் 74:18 · சங்கீதம் 69:9 · ரோமர் 15:3 · சங்கீதம் 69:19-20 · சங்கீதம் 79:10-12
51கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்.
RelatedI பேதுரு 4:14-16 · சங்கீதம் 74:10 · யோவான் 8:48 · மத்தேயு 12:24 · மத்தேயு 5:10-12 · சங்கீதம் 57:3
52கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென். ஆமென்.
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS