ஆமோஸ் 5
Tamil Bible (BSI 1957) • 27 verses
1இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.
Relatedஎசேக்கியேல் 19:1 · எரேமியா 7:29 · எரேமியா 9:10 · எரேமியா 9:17 · எசேக்கியேல் 32:16 · எசேக்கியேல் 19:14
2இஸ்ரவேல் என்னும் கன்னிகை விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன் தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளை எடுப்பாரில்லை.
Relatedஎரேமியா 14:17 · ஓசியா 14:1 · II இராஜாக்கள் 15:29 · எரேமியா 4:20 · II இராஜாக்கள் 17:16 · ஏசாயா 14:21
3நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.
4கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.
Relatedசெப்பனியா 2:3 · II நாளாகமம் 15:2 · எரேமியா 29:12-13 · சங்கீதம் 14:2 · ஏசாயா 55:3 · ஏசாயா 55:6-7
5பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும்.
Relatedஓசியா 4:15 · ஆமோஸ் 8:14 · ஆமோஸ் 4:4 · ஆதியாகமம் 21:33 · I கொரிந்தியர் 2:6 · வெளிப்படுத்தின விசேஷம் 18:17
6கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதைப் பட்சிக்கும்.
Relatedஏசாயா 55:6 · எசேக்கியேல் 20:47-48 · எசேக்கியேல் 33:11 · மாற்கு 9:43-48 · ஆமோஸ் 5:14 · ஆதியாகமம் 48:8-20
7நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே அவரைத் தேடுங்கள்.
8அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை விடியற்காலமாக மாற்றி, பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளை பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
9அரணான ஸ்தலத்தின்மேல் பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாய் லகுவடையப்பண்ணுகிறவர்.
10ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள்.
RelatedI இராஜாக்கள் 22:8 · ஏசாயா 29:21 · யோவான் 8:45-47 · எரேமியா 17:16-17 · நீதிமொழிகள் 9:7-8 · வெளிப்படுத்தின விசேஷம் 11:10
11நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைசுமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.
Relatedசெப்பனியா 1:13 · மீகா 6:15 · உபாகமம் 28:30 · யாக்கோபு 2:6 · வெளிப்படுத்தின விசேஷம் 11:8-10 · ஆகாய் 1:6
12உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்.
13ஆகையால் புத்திமான் அந்தக்காலத்திலே மௌனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.
14நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.
15நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.
Relatedரோமர் 12:9 · III யோவான் 1:11 · சங்கீதம் 97:10 · யோவேல் 2:14 · I தெசலோனிக்கேயர் 5:21-22 · ரோமர் 8:7
16ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரிபாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.
17எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Relatedயாத்திராகமம் 12:12 · எரேமியா 48:33 · ஏசாயா 16:10 · நாகூம் 1:15 · யாத்திராகமம் 12:23 · யோவேல் 3:17
18கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.
19சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.
Relatedஏசாயா 24:17-18 · எரேமியா 15:2-3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:4 · எரேமியா 48:43-44 · ஆமோஸ் 9:1-2 · யோபு 20:24-25
20கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ?
Relatedஏசாயா 13:10 · எசேக்கியேல் 34:12 · செப்பனியா 1:15 · யோபு 10:21-22 · யோபு 3:4-6 · மத்தேயு 22:13
21உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை.
Relatedஏசாயா 1:11-16 · நீதிமொழிகள் 28:9 · லேவியராகமம் 26:31 · ஏசாயா 66:3 · எரேமியா 6:20 · நீதிமொழிகள் 15:8
22உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன்.
Relatedமீகா 6:6-7 · ஆமோஸ் 4:4-5 · ஏசாயா 66:3 · லேவியராகமம் 7:12-15 · சங்கீதம் 116:17 · சங்கீதம் 50:8-14
23உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.
24நியாயம் தண்ணீரைப்போலவும், நீதிவற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது.
25இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலே இருந்த நாற்பது வருஷம்வரையில் பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ?
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 7:42-43 · நெகேமியா 9:18 · எசேக்கியேல் 20:8 · யோசுவா 24:14 · லேவியராகமம் 17:7 · எசேக்கியேல் 20:16
26நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும், உங்கள் தேவர்களின் நட்சத்திரராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டுவந்தீர்களே.
27ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பாலே குடியோட்டுவேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
📖 ஆமோஸ்All 9 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS