தீத்து 2
Tamil Bible (BSI 1957) • 15 verses
1நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு.
RelatedII தீமோத்தேயு 1:13 · I தீமோத்தேயு 6:3 · தீத்து 1:9 · தீத்து 3:8 · I தீமோத்தேயு 1:10 · தீத்து 2:11-14
2முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு.
Relatedகலாத்தியர் 5:23 · I பேதுரு 4:7 · I தீமோத்தேயு 3:11 · I பேதுரு 5:8 · I தெசலோனிக்கேயர் 5:8 · I தீமோத்தேயு 3:2
3முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,
Relatedதீத்து 2:4 · I தீமோத்தேயு 3:11 · I பேதுரு 3:3-5 · I தீமோத்தேயு 2:9-10 · தீத்து 1:7 · I தீமோத்தேயு 3:8
4தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,
5தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.
Relatedநீதிமொழிகள் 31:10-31 · கொலோசெயர் 3:18 · I தீமோத்தேயு 5:10 · I பேதுரு 3:1-5 · I தீமோத்தேயு 5:13-14 · ஆதியாகமம் 3:16
6அப்படியே, பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்லி,
Relatedபிரசங்கி 12:1 · I பேதுரு 5:5 · பிரசங்கி 11:9 · I யோவான் 2:13 · யோவேல் 2:28 · I தீமோத்தேயு 5:1
7நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,
RelatedI பேதுரு 5:3 · I தீமோத்தேயு 4:12 · II கொரிந்தியர் 4:2 · பிலிப்பியர் 1:10 · II தெசலோனிக்கேயர் 3:9 · எபேசியர் 6:24
8எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.
RelatedI பேதுரு 2:12 · I பேதுரு 2:15 · I தீமோத்தேயு 6:3 · I பேதுரு 3:16 · பிலிப்பியர் 2:14-16 · நெகேமியா 5:9
9வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக,
10தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.
Relatedமத்தேயு 5:16 · I பேதுரு 2:12 · II யோவான் 1:9 · I தீமோத்தேயு 6:1 · லூக்கா 16:10 · I தீமோத்தேயு 6:3
11ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,
Relatedஎபேசியர் 2:8 · I தீமோத்தேயு 2:4 · ஏசாயா 45:22 · எபிரெயர் 2:9 · எபேசியர் 2:5 · II தெசலோனிக்கேயர் 2:16
12நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,
Relatedஎசேக்கியேல் 36:27 · மத்தேயு 16:24 · ரோமர் 6:19 · சங்கீதம் 4:3 · எபேசியர் 4:22-25 · II பேதுரு 2:9
13நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
RelatedII தீமோத்தேயு 4:8 · I கொரிந்தியர் 1:7 · மத்தேயு 16:27 · தீத்து 1:2 · II பேதுரு 3:12-14 · மாற்கு 14:62
14அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
Relatedஎபிரெயர் 9:14 · எபேசியர் 2:10 · I பேதுரு 2:9 · I பேதுரு 1:18 · வெளிப்படுத்தின விசேஷம் 5:9 · தீத்து 3:8
15இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.
RelatedII தீமோத்தேயு 4:2 · I தீமோத்தேயு 4:12-13 · தீத்து 1:13 · I தீமோத்தேயு 5:20 · மத்தேயு 7:29 · மாற்கு 1:22
📖 தீத்துAll 3 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS