சங்கீதம் 147
Tamil Bible (BSI 1957) • 20 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.
Relatedசங்கீதம் 135:3 · சங்கீதம் 92:1 · சங்கீதம் 33:1 · சங்கீதம் 42:4 · சங்கீதம் 63:3-5 · வெளிப்படுத்தின விசேஷம் 5:9-14
2கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார்.
Relatedஏசாயா 56:8 · உபாகமம் 30:3 · சங்கீதம் 51:18 · சங்கீதம் 102:20-22 · ஏசாயா 62:7 · எசேக்கியேல் 38:8
3இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
4அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.
5நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.
Relatedஏசாயா 40:28 · சங்கீதம் 139:17-18 · சங்கீதம் 96:4 · ரோமர் 11:33 · சங்கீதம் 40:5 · சங்கீதம் 48:1
6கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.
Relatedசங்கீதம் 25:9 · I பேதுரு 5:6 · சங்கீதம் 146:8-9 · யாக்கோபு 4:10 · செப்பனியா 2:3 · சங்கீதம் 149:4
7கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.
Relatedசங்கீதம் 95:1-2 · சங்கீதம் 47:6-7 · சங்கீதம் 68:32 · சங்கீதம் 92:1-3 · சங்கீதம் 107:21-22 · வெளிப்படுத்தின விசேஷம் 5:8-10
8அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.
Relatedயோபு 5:10 · சங்கீதம் 65:9-13 · ஆதியாகமம் 9:14 · மத்தேயு 5:45 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:17 · யோபு 26:8-9
9அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
Relatedசங்கீதம் 104:27-28 · யோபு 38:41 · மத்தேயு 6:26 · சங்கீதம் 136:25 · சங்கீதம் 145:15-16 · லூக்கா 12:24
10அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.
RelatedI சாமுவேல் 16:7 · நீதிமொழிகள் 21:31 · ஏசாயா 31:1 · சங்கீதம் 20:7 · சங்கீதம் 33:16-18 · பிரசங்கி 9:11
11தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
Relatedசங்கீதம் 33:18 · மல்கியா 3:16-17 · செப்பனியா 3:17 · சங்கீதம் 149:4 · ஏசாயா 62:4 · சங்கீதம் 35:27
12எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.
Relatedயோவேல் 2:23 · ஏசாயா 12:6 · சங்கீதம் 135:19-21 · ஏசாயா 52:7 · சங்கீதம் 146:10 · சங்கீதம் 149:2
13அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
Relatedசங்கீதம் 128:3-6 · சங்கீதம் 115:14-15 · ஏசாயா 44:3-5 · எரேமியா 30:19-20 · சங்கீதம் 144:12 · சங்கீதம் 125:2
14அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
Relatedசங்கீதம் 29:11 · ஏசாயா 60:17-18 · சங்கீதம் 81:16 · சங்கீதம் 132:15 · உபாகமம் 32:14 · I நாளாகமம் 22:9
15அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.
Relatedயோபு 37:12 · சங்கீதம் 107:20 · II தெசலோனிக்கேயர் 3:1 · யோபு 34:29 · சங்கீதம் 33:9 · மத்தேயு 8:8-9
16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
17அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
Relatedயோபு 38:29-30 · யோபு 38:22-23 · சங்கீதம் 78:47-48 · யோபு 37:9-10 · யாத்திராகமம் 9:23-25 · யோசுவா 10:11
18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
19யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
20அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.
Relatedஉபாகமம் 4:32-34 · உபாகமம் 4:7-8 · எபேசியர் 2:12 · ரோமர் 3:1-2 · I பேதுரு 2:9-10 · எபேசியர் 5:8
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS