I கொரிந்தியர் 15
Tamil Bible (BSI 1957) • 58 verses
1அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
Relatedகலாத்தியர் 1:6-12 · I பேதுரு 5:12 · I கொரிந்தியர் 1:23-24 · II கொரிந்தியர் 1:24 · II தெசலோனிக்கேயர் 3:6 · I தெசலோனிக்கேயர் 1:6
2நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
Relatedஎபிரெயர் 3:6 · எபிரெயர் 2:1 · எபிரெயர் 3:14 · யோவான் 8:31-32 · I கொரிந்தியர் 1:18 · கொலோசெயர் 1:23
3நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
RelatedI பேதுரு 2:24 · கலாத்தியர் 1:4 · ஏசாயா 53:1-12 · I யோவான் 2:2 · கலாத்தியர் 1:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:22-23
4அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,
Relatedஓசியா 6:2 · மத்தேயு 12:40 · சங்கீதம் 16:10-11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:29-37 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:22-23 · ஏசாயா 53:9-12
5கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
Relatedமாற்கு 16:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:2-14 · யோவான் 20:19-26 · I கொரிந்தியர் 1:12 · லூக்கா 24:34-49 · யோவான் 1:42
6அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
Relatedமத்தேயு 28:10 · மாற்கு 16:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:36 · I கொரிந்தியர் 15:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:60 · II பேதுரு 3:4
7பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
Relatedலூக்கா 24:50 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:2-12 · லூக்கா 24:33 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:17 · லூக்கா 24:36
8எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.
RelatedI கொரிந்தியர் 9:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:14
9நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.
Relatedஎபேசியர் 3:7-8 · I தீமோத்தேயு 1:13-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:3 · II கொரிந்தியர் 12:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:9-11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1-19
10ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.
Relatedபிலிப்பியர் 4:13 · II கொரிந்தியர் 3:5 · பிலிப்பியர் 2:13 · எபேசியர் 3:7-8 · எபேசியர் 2:7-8 · ரோமர் 12:3
11ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள்.
12கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 26:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:32 · II தீமோத்தேயு 2:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:8 · I கொரிந்தியர் 15:13-19 · II தெசலோனிக்கேயர் 2:17
13மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.
Relatedயோவான் 11:25-26 · I தெசலோனிக்கேயர் 4:14 · ரோமர் 8:11 · வெளிப்படுத்தின விசேஷம் 1:18 · I பேதுரு 1:3 · II கொரிந்தியர் 4:10-14
14கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
RelatedI கொரிந்தியர் 15:17 · I தெசலோனிக்கேயர் 4:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:31 · மத்தேயு 15:9 · யாக்கோபு 2:20 · I கொரிந்தியர் 15:2
15மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 2:24 · யோபு 13:7-10 · I கொரிந்தியர் 15:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:39-42 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:33
16மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.
17கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
18கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.
RelatedI தெசலோனிக்கேயர் 4:13-14 · I தெசலோனிக்கேயர் 4:16 · வெளிப்படுத்தின விசேஷம் 14:13 · I கொரிந்தியர் 15:6
19இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 14:13 · I பேதுரு 1:21 · II தீமோத்தேயு 1:12 · I கொரிந்தியர் 4:9-13 · II தீமோத்தேயு 3:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22
20கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
RelatedI கொரிந்தியர் 15:23 · வெளிப்படுத்தின விசேஷம் 1:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:23 · I பேதுரு 1:3 · கொலோசெயர் 1:18 · ரோமர் 8:11
21மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
22ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
Relatedரோமர் 5:12-21 · I கொரிந்தியர் 15:45-49 · யோவான் 5:21-29 · ஆதியாகமம் 2:17 · ஆதியாகமம் 3:6 · ஆதியாகமம் 3:19
23அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
Relatedஏசாயா 26:19 · கலாத்தியர் 3:29 · I கொரிந்தியர் 15:52 · I கொரிந்தியர் 15:20 · I தெசலோனிக்கேயர் 4:15-17 · II கொரிந்தியர் 10:7
24அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
25எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது.
Relatedசங்கீதம் 110:1 · எபிரெயர் 10:12-13 · மத்தேயு 22:44 · சங்கீதம் 2:6-10 · எபிரெயர் 1:13 · எபேசியர் 1:22
26பரிகரிக்கப்படுங்கடைசிச் சத்துரு மரணம்.
RelatedII தீமோத்தேயு 1:10 · I கொரிந்தியர் 15:55 · வெளிப்படுத்தின விசேஷம் 21:4 · வெளிப்படுத்தின விசேஷம் 20:14 · ஏசாயா 25:8 · எபிரெயர் 2:14
27சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.
28சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
Relatedகொலோசெயர் 3:11 · I கொரிந்தியர் 3:23 · எபேசியர் 1:23 · பிலிப்பியர் 3:21 · I கொரிந்தியர் 11:3 · யோவான் 14:28
29மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?
30நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாயிருக்கிறோம்?
RelatedII கொரிந்தியர் 6:9 · II கொரிந்தியர் 11:23-27 · ரோமர் 8:36-39 · கலாத்தியர் 5:11 · I கொரிந்தியர் 15:31 · II கொரிந்தியர் 4:7-12
31நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.
RelatedII கொரிந்தியர் 4:10-11 · ரோமர் 8:36 · I கொரிந்தியர் 4:9-13 · பிலிப்பியர் 3:3 · I தெசலோனிக்கேயர் 3:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:23
32நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?
Relatedஏசாயா 22:13 · ஏசாயா 56:12 · லூக்கா 12:19 · II பேதுரு 2:12 · II கொரிந்தியர் 1:8-10 · யூதா 1:10
33மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
Relatedநீதிமொழிகள் 13:20 · மத்தேயு 24:4 · I கொரிந்தியர் 5:6 · நீதிமொழிகள் 9:6 · எபேசியர் 5:6 · கலாத்தியர் 6:7
34நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
RelatedI கொரிந்தியர் 6:5 · ரோமர் 13:11 · எபிரெயர் 5:11-12 · யோவேல் 1:5 · எபேசியர் 5:14 · I கொரிந்தியர் 8:7
35ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
Relatedஎசேக்கியேல் 37:3 · பிலிப்பியர் 3:21 · I கொரிந்தியர் 15:38-53 · ரோமர் 9:19 · யோபு 11:12 · யோபு 22:13
36புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
37நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
38அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
39எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.
Relatedஆதியாகமம் 1:20-26
40வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;
41சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
42மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;
Relatedமத்தேயு 13:43 · தானியேல் 12:3 · பிலிப்பியர் 3:20-21 · ரோமர் 8:21 · I பேதுரு 1:4 · I கொரிந்தியர் 15:50-54
43கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
Relatedகொலோசெயர் 3:4 · பிலிப்பியர் 3:20-21 · I கொரிந்தியர் 6:14 · தானியேல் 12:1 · மாற்கு 12:24-25 · மத்தேயு 22:29-30
44ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.
45அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
46ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.
47முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
Relatedயோவான் 3:31 · ஆதியாகமம் 2:7 · ஆதியாகமம் 3:19 · II கொரிந்தியர் 5:1 · ஏசாயா 9:6 · யோவான் 3:12-13
48மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.
Relatedஆதியாகமம் 5:3 · பிலிப்பியர் 3:20-21 · யோவான் 3:6 · யோபு 14:4 · ரோமர் 5:12-21 · I கொரிந்தியர் 15:21-22
49மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம்.
Relatedரோமர் 8:29 · II கொரிந்தியர் 3:18 · I யோவான் 3:2 · II கொரிந்தியர் 4:10-11 · ஆதியாகமம் 5:3 · மத்தேயு 13:43
50சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
Relatedயோவான் 3:3-6 · மத்தேயு 16:17 · எபேசியர் 4:17 · II கொரிந்தியர் 5:1 · கலாத்தியர் 5:16 · I கொரிந்தியர் 6:13
51இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
RelatedI தெசலோனிக்கேயர் 4:14-17 · பிலிப்பியர் 3:21 · I கொரிந்தியர் 15:20 · எபேசியர் 1:9 · I கொரிந்தியர் 4:1 · I கொரிந்தியர் 2:7
52எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
RelatedI தெசலோனிக்கேயர் 4:16-17 · மத்தேயு 24:31 · யோவான் 5:28 · யோவான் 5:25 · ஏசாயா 27:13 · II பேதுரு 3:10
53அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
RelatedII கொரிந்தியர் 5:2-4 · I யோவான் 3:2 · எபேசியர் 4:24 · ரோமர் 13:12-14 · ரோமர் 2:7 · கலாத்தியர் 3:27
54அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
Relatedஏசாயா 25:8 · எபிரெயர் 2:14-15 · வெளிப்படுத்தின விசேஷம் 20:14 · வெளிப்படுத்தின விசேஷம் 21:4 · லூக்கா 20:36 · II கொரிந்தியர் 4:11
55மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
Relatedஓசியா 13:14 · சங்கீதம் 89:48 · ரோமர் 5:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:27 · சங்கீதம் 49:8-15 · பிரசங்கி 2:15-16
56மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
57நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
RelatedII கொரிந்தியர் 2:14 · ரோமர் 8:37 · I யோவான் 5:4-5 · நீதிமொழிகள் 21:31 · வெளிப்படுத்தின விசேஷம் 12:11 · யோவான் 16:33
58ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
📖 I கொரிந்தியர்All 16 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS