யூதா 1
Tamil Bible (BSI 1957) • 25 verses
1இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
RelatedI பேதுரு 1:5 · I தெசலோனிக்கேயர் 5:23 · I பேதுரு 2:9 · யோவான் 14:22 · யோவான் 17:15 · ரோமர் 1:1
2உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது.
3பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
RelatedI தீமோத்தேயு 6:12 · பிலிப்பியர் 1:27 · யூதா 1:20 · II தீமோத்தேயு 1:13 · தீத்து 1:4 · II தீமோத்தேயு 4:7-8
4ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
RelatedII பேதுரு 2:1-3 · கலாத்தியர் 2:4 · II பேதுரு 2:10 · தீத்து 1:15-16 · I பேதுரு 2:16 · I யோவான் 2:22
5நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.
Relatedஎபிரெயர் 3:16-4:2 · எண்ணாகமம் 26:64-65 · I கொரிந்தியர் 10:1-12 · சங்கீதம் 106:26 · எண்ணாகமம் 14:22-37 · உபாகமம் 2:15-16
6தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.
RelatedII பேதுரு 2:4 · மத்தேயு 25:41 · எபேசியர் 6:12 · மத்தேயு 8:29 · II பேதுரு 2:9 · எபிரெயர் 10:27
7அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
Relatedஉபாகமம் 29:23 · II பேதுரு 2:6 · ரோமர் 1:26-27 · ஆதியாகமம் 19:24-26 · ஆதியாகமம் 18:20 · ஆதியாகமம் 13:13
8அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.
Relatedஎபிரெயர் 13:17 · II பேதுரு 2:10-12 · யாத்திராகமம் 22:28 · I தீமோத்தேயு 1:10 · I பேதுரு 2:17 · யூதா 1:9-10
9பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத்துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
Relatedசகரியா 3:2 · II பேதுரு 2:11 · உபாகமம் 34:6 · வெளிப்படுத்தின விசேஷம் 12:7 · தானியேல் 12:1 · தானியேல் 10:21
10இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
11இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
RelatedII பேதுரு 2:15 · I யோவான் 3:12 · வெளிப்படுத்தின விசேஷம் 2:14 · ஆதியாகமம் 4:3-14 · எபிரெயர் 11:4 · எண்ணாகமம் 16:1-35
12இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ்செத்து வேரற்றுப்போன மரங்களும்,
Relatedமத்தேயு 15:13 · II பேதுரு 2:17-20 · எசேக்கியேல் 34:8 · நீதிமொழிகள் 25:14 · பிலிப்பியர் 3:19 · எபேசியர் 4:14
13தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.
RelatedII பேதுரு 2:17 · பிலிப்பியர் 3:19 · ஏசாயா 57:20 · சங்கீதம் 65:7 · II தீமோத்தேயு 3:13 · வெளிப்படுத்தின விசேஷம் 14:10-11
14ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,
Relatedஉபாகமம் 33:2 · சங்கீதம் 50:3-5 · எபிரெயர் 11:5-6 · II தெசலோனிக்கேயர் 1:7-8 · I தெசலோனிக்கேயர் 3:13 · மத்தேயு 16:27
15தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெள்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
RelatedI கொரிந்தியர் 4:5 · I தீமோத்தேயு 1:9 · பிரசங்கி 11:9 · ரோமர் 14:10 · வெளிப்படுத்தின விசேஷம் 22:12-15 · ரோமர் 2:16
16இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப் பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.
RelatedII பேதுரு 2:18 · பிலிப்பியர் 2:14 · II பேதுரு 2:10 · I தீமோத்தேயு 6:5 · யூதா 1:18 · II பேதுரு 3:3
17நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள்.
RelatedII பேதுரு 3:2 · I யோவான் 4:6 · எபேசியர் 4:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:35 · மல்கியா 4:4 · எபேசியர் 2:20
18கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
RelatedII பேதுரு 3:3 · II தீமோத்தேயு 4:3 · II தீமோத்தேயு 3:1-5 · II தீமோத்தேயு 3:13 · I தீமோத்தேயு 4:1-2 · II பேதுரு 2:1
19இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.
RelatedI கொரிந்தியர் 2:14 · நீதிமொழிகள் 18:1 · ரோமர் 8:9 · யாக்கோபு 3:15 · எபிரெயர் 10:25 · யோவான் 3:5-6
20நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,
Relatedஎபேசியர் 6:18 · ரோமர் 8:26-27 · I கொரிந்தியர் 14:15 · கொலோசெயர் 2:7 · I தெசலோனிக்கேயர் 5:11 · I கொரிந்தியர் 14:4-5
21தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.
RelatedI யோவான் 4:16 · எபிரெயர் 9:28 · புலம்பல் 3:25-26 · II பேதுரு 3:12 · யோவான் 15:9-10 · II தெசலோனிக்கேயர் 3:5
22அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம்பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து,
Relatedயாக்கோபு 5:19-20 · கலாத்தியர் 6:1 · I யோவான் 5:16-18 · எபிரெயர் 6:4-8 · யூதா 1:4-13 · எசேக்கியேல் 34:17
23மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.
RelatedI தீமோத்தேயு 4:16 · I கொரிந்தியர் 15:33 · வெளிப்படுத்தின விசேஷம் 3:4 · II கொரிந்தியர் 7:10-12 · II தெசலோனிக்கேயர் 3:14 · ரோமர் 11:14
24வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
RelatedII தீமோத்தேயு 4:18 · எபேசியர் 3:20 · கொலோசெயர் 1:22 · யோவான் 10:29-30 · எபிரெயர் 13:20-21 · எபேசியர் 5:27
25தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
📖 யூதாAll 1 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS