சங்கீதம் 111
Tamil Bible (BSI 1957) • 10 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.
Relatedசங்கீதம் 138:1 · சங்கீதம் 149:1 · சங்கீதம் 109:30 · சங்கீதம் 106:1 · சங்கீதம் 108:3 · சங்கீதம் 35:18
2கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.
Relatedசங்கீதம் 104:24 · நீதிமொழிகள் 24:14 · சங்கீதம் 143:5 · சங்கீதம் 139:14 · எபேசியர் 1:19 · எரேமியா 32:17-19
3அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
Relatedசங்கீதம் 145:4-5 · சங்கீதம் 145:10-12 · வெளிப்படுத்தின விசேஷம் 5:12-14 · எபேசியர் 3:10 · சங்கீதம் 119:142 · ஏசாயா 51:8
4அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.
Relatedசங்கீதம் 103:8 · ஏசாயா 63:7 · எபேசியர் 1:6-8 · சங்கீதம் 86:5 · சங்கீதம் 145:8 · உபாகமம் 31:19-30
5தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.
Relatedசங்கீதம் 105:8 · லூக்கா 1:72 · தானியேல் 9:4 · நெகேமியா 1:5 · சங்கீதம் 89:34 · சங்கீதம் 106:45
6ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால், தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
Relatedசங்கீதம் 2:8 · சங்கீதம் 80:8 · சங்கீதம் 44:2 · யோசுவா 10:13-14 · சங்கீதம் 78:12-72 · யோசுவா 6:20
7அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.
Relatedசங்கீதம் 19:7 · சங்கீதம் 89:14 · உபாகமம் 32:4 · சங்கீதம் 119:151 · சங்கீதம் 105:8 · வெளிப்படுத்தின விசேஷம் 15:3-4
8அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்.
Relatedமத்தேயு 5:18 · சங்கீதம் 19:9 · ஏசாயா 40:8 · வெளிப்படுத்தின விசேஷம் 15:3 · ரோமர் 7:12 · சங்கீதம் 119:127-128
9அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
Relatedசங்கீதம் 99:3 · தீத்து 2:14 · லூக்கா 1:49 · லூக்கா 1:68 · வெளிப்படுத்தின விசேஷம் 5:9 · எபிரெயர் 9:12
10கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS