அப்போஸ்தலருடைய நடபடிகள் 16
Tamil Bible (BSI 1957) • 40 verses
1அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன்.
RelatedII தீமோத்தேயு 1:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:14 · I கொரிந்தியர் 4:17 · I தெசலோனிக்கேயர் 3:2 · II தீமோத்தேயு 1:2 · I தீமோத்தேயு 1:2
2அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.
RelatedII தீமோத்தேயு 3:15 · I தீமோத்தேயு 5:10 · I தீமோத்தேயு 3:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:51 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:40
3அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள்நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.
Relatedகலாத்தியர் 2:3 · கலாத்தியர் 5:6 · I கொரிந்தியர் 9:20 · கலாத்தியர் 5:1-3 · கலாத்தியர் 2:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:40
4அவர்கள் பட்டணங்கள்தோறும் போகையில், எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:28-29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:30
5அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:47 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7 · எபேசியர் 4:13-16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:41 · I பேதுரு 5:10
6அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 18:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:7 · கலாத்தியர் 1:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2-4 · I பேதுரு 1:1
7மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
Relatedகலாத்தியர் 4:6 · பிலிப்பியர் 1:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:29 · ரோமர் 8:9 · I பேதுரு 1:11 · I பேதுரு 1:1
8அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.
RelatedII கொரிந்தியர் 2:12 · II தீமோத்தேயு 4:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:5
9அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 19:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:10-12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:5 · ரோமர் 15:26 · ரோமர் 10:14-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:1
10அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,
RelatedII கொரிந்தியர் 2:12-13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1-28:16 · நீதிமொழிகள் 3:27-28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:10-17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:29
11துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி,
12அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.
RelatedI தெசலோனிக்கேயர் 2:2 · பிலிப்பியர் 1:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:21
13ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:4 · கொலோசெயர் 1:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:5 · யோவான் 8:2 · மத்தேயு 13:2
14அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.
Relatedலூக்கா 24:45 · எபேசியர் 1:17-18 · ஏசாயா 50:5 · யோவான் 6:44-45 · வெளிப்படுத்தின விசேஷம் 3:20 · II கொரிந்தியர் 3:14-16
15அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 11:14 · எபிரெயர் 13:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:33 · ஆதியாகமம் 19:3 · லூக்கா 24:29 · III யோவான் 1:8
16நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.
Relatedலேவியராகமம் 19:31 · உபாகமம் 18:9-11 · ஏசாயா 8:19 · I நாளாகமம் 10:13 · I சாமுவேல் 28:7 · கலாத்தியர் 5:20
17அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.
18இப்படி அநேகநாள் செய்து கொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.
Relatedமாற்கு 16:17 · லூக்கா 10:17-19 · மாற்கு 1:34 · மாற்கு 9:25-26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:34
19அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 21:30 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:16 · II கொரிந்தியர் 6:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:12-13
20அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி,
Relatedயாக்கோபு 4:4 · யோவான் 15:18-20 · ரோமர் 12:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:22 · எஸ்றா 4:12-15 · மத்தேயு 2:3
21ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும்தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.
22அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;
RelatedI தெசலோனிக்கேயர் 2:2 · II கொரிந்தியர் 6:5 · எபிரெயர் 11:36 · II கொரிந்தியர் 11:23-25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:22-26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:12
23அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 2:10 · II தீமோத்தேயு 2:9 · மத்தேயு 27:63-66 · I சாமுவேல் 23:22-23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:27 · எபேசியர் 4:1
24அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.
25நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
RelatedI தெசலோனிக்கேயர் 5:16-18 · சங்கீதம் 119:62 · யாக்கோபு 1:2 · ரோமர் 5:3 · I பேதுரு 1:6-8 · பிலிப்பியர் 4:4-7
26சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 4:31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:10 · சங்கீதம் 146:7 · மத்தேயு 28:2
27சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக்கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 12:19 · I சாமுவேல் 31:4-5 · II சாமுவேல் 17:23 · நியாயாதிபதிகள் 9:54 · மத்தேயு 27:5 · I இராஜாக்கள் 16:18
28பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ்செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான்.
RelatedI தெசலோனிக்கேயர் 5:15 · லூக்கா 6:27-28 · லூக்கா 23:34 · யாத்திராகமம் 20:13 · லூக்கா 10:32-37 · பிரசங்கி 7:17
29அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து,
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 3:9 · தானியேல் 6:26 · எரேமியா 10:10 · ஏசாயா 60:14 · ஏசாயா 66:2 · சங்கீதம் 99:1
30அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.
Relatedயோவான் 6:27-29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:37 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:10 · லூக்கா 3:10 · ஏசாயா 58:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:15
31அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
Relatedயோவான் 1:12 · யோவான் 3:36 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38-39 · ரோமர் 10:9-10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:13-14 · மாற்கு 16:16
32அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
Relatedகொலோசெயர் 1:27-28 · ரோமர் 1:16 · I தெசலோனிக்கேயர் 2:8 · I தீமோத்தேயு 1:13-16 · மாற்கு 16:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:33-43
33மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
RelatedI கொரிந்தியர் 1:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25 · லூக்கா 10:33-34 · லூக்கா 19:9 · ஏசாயா 11:6-9
34பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.
Relatedரோமர் 15:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:46 · ஏசாயா 55:12 · ஏசாயா 58:7-11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:14 · ஏசாயா 61:10
35பொழுது விடிந்தபின்பு: அந்த மனுஷரை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் சேவகர்களை அனுப்பினார்கள்.
36சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலையாக்கும்படிக்கு அதிகாரிகள் கட்டளை அனுப்பினார்கள்; ஆகையால் நீங்கள் இப்பொழுது புறப்பட்டுச் சமாதானத்துடனே போங்கள் என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:33 · யோவான் 14:27 · I சாமுவேல் 25:35 · I சாமுவேல் 29:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:27 · II இராஜாக்கள் 5:19
37அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம்விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பிவிடட்டும் என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 22:25-29 · சங்கீதம் 58:1-2 · சங்கீதம் 94:20 · மத்தேயு 10:16 · தானியேல் 3:25-26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:20-24
38சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து,
39அவர்களுடனே தயவாய்ப் பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.
40அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.
📖 அப்போஸ்தலருடைய நடபடிகள்All 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS