நீதிமொழிகள் 14
Tamil Bible (BSI 1957) • 35 verses
1புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
Relatedநீதிமொழிகள் 31:10-31 · நீதிமொழிகள் 24:3-4 · நீதிமொழிகள் 21:9 · நீதிமொழிகள் 21:19 · ரூத் 4:11 · நீதிமொழிகள் 9:13-15
2நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.
RelatedII தீமோத்தேயு 3:2-3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:35 · நீதிமொழிகள் 28:6 · ரோமர் 2:4-5 · யோபு 28:28 · சங்கீதம் 112:1
3மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
Relatedநீதிமொழிகள் 12:6 · யாக்கோபு 3:5-6 · வெளிப்படுத்தின விசேஷம் 12:11 · ரோமர் 10:9-10 · வெளிப்படுத்தின விசேஷம் 3:10 · யோபு 5:21
4எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
5மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
Relatedயாத்திராகமம் 23:1 · நீதிமொழிகள் 19:5 · நீதிமொழிகள் 6:19 · நீதிமொழிகள் 12:17 · நீதிமொழிகள் 14:25 · I இராஜாக்கள் 22:12-14
6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய்வரும்.
Relatedயாக்கோபு 1:5 · மத்தேயு 13:11-12 · I கொரிந்தியர் 3:18-19 · மத்தேயு 11:25-27 · I கொரிந்தியர் 8:2 · நீதிமொழிகள் 8:9
7மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய்.
8தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
Relatedஎபேசியர் 5:17 · II தீமோத்தேயு 3:13 · யாக்கோபு 3:13 · கொலோசெயர் 1:9-10 · நீதிமொழிகள் 11:18 · சங்கீதம் 119:5
9மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.
Relatedநீதிமொழிகள் 10:23 · ரோமர் 14:17-18 · நீதிமொழிகள் 26:18-19 · நீதிமொழிகள் 30:20 · நீதிமொழிகள் 8:35 · நீதிமொழிகள் 13:15
10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.
Relatedபிலிப்பியர் 4:7 · நீதிமொழிகள் 18:14 · நீதிமொழிகள் 15:13 · யோவான் 14:18 · யோபு 10:1 · வெளிப்படுத்தின விசேஷம் 2:17
11துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
Relatedநீதிமொழிகள் 3:33 · நீதிமொழிகள் 12:7 · மத்தேயு 7:26-27 · யோபு 21:28 · சகரியா 5:4 · நீதிமொழிகள் 21:12
12மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
Relatedநீதிமொழிகள் 16:25 · மத்தேயு 7:13-14 · நீதிமொழிகள் 12:15 · கலாத்தியர் 6:3 · லூக்கா 13:24 · ரோமர் 6:21
13நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.
Relatedபிரசங்கி 2:2 · யாக்கோபு 4:9 · பிரசங்கி 2:10-11 · லூக்கா 16:25 · நீதிமொழிகள் 5:4 · பிரசங்கி 7:5-6
14பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
Relatedகலாத்தியர் 6:8 · நீதிமொழிகள் 12:14 · எபிரெயர் 3:12 · எரேமியா 8:5 · எரேமியா 2:19 · யோவான் 4:14
15பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.
Relatedஎபேசியர் 5:17 · நீதிமொழிகள் 14:8 · I யோவான் 4:1 · நீதிமொழிகள் 4:26 · நீதிமொழிகள் 27:12 · எபேசியர் 4:14
16ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.
Relatedநீதிமொழிகள் 22:3 · நீதிமொழிகள் 3:7 · I தெசலோனிக்கேயர் 5:22 · நீதிமொழிகள் 29:9 · ஆதியாகமம் 42:18 · I இராஜாக்கள் 20:10-11
17முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
Relatedநீதிமொழிகள் 14:29 · பிரசங்கி 7:9 · நீதிமொழிகள் 29:22 · யாக்கோபு 1:19 · நீதிமொழிகள் 15:18 · நீதிமொழிகள் 22:24
18பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
RelatedI பேதுரு 1:18 · I பேதுரு 5:4 · II தீமோத்தேயு 4:8 · நீதிமொழிகள் 11:29-30 · நீதிமொழிகள் 4:7-9 · எரேமியா 16:19
19தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
Relatedஆதியாகமம் 42:6 · மல்கியா 4:3 · யாத்திராகமம் 8:8 · யாத்திராகமம் 9:27-28 · I சாமுவேல் 2:36 · ஏசாயா 60:14
20தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.
Relatedநீதிமொழிகள் 19:4 · நீதிமொழிகள் 10:15 · நீதிமொழிகள் 19:6-7 · யோபு 30:10 · யோபு 19:13-14 · எஸ்தர் 3:2
21பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.
Relatedநீதிமொழிகள் 11:12 · நீதிமொழிகள் 28:27 · நீதிமொழிகள் 19:17 · நீதிமொழிகள் 17:5 · I யோவான் 3:17-22 · நீதிமொழிகள் 18:3
22தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.
Relatedநீதிமொழிகள் 12:2 · சங்கீதம் 25:10 · யோவான் 1:17 · மத்தேயு 5:7 · நீதிமொழிகள் 14:17 · II நாளாகமம் 6:8
23சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.
Relatedநீதிமொழிகள் 28:19 · நீதிமொழிகள் 12:24 · II தெசலோனிக்கேயர் 3:10-12 · எபிரெயர் 6:10-11 · பிரசங்கி 5:3 · யோவான் 6:27
24ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே.
Relatedபிரசங்கி 7:11-12 · சங்கீதம் 112:9 · லூக்கா 16:19-25 · லூக்கா 12:19-20 · லூக்கா 16:9 · சங்கீதம் 49:10-13
25மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
Relatedநீதிமொழிகள் 14:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:16-20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:26-27 · I தீமோத்தேயு 4:1-3 · II பேதுரு 3:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:21
26கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
Relatedநீதிமொழிகள் 19:23 · எரேமியா 32:39-40 · சங்கீதம் 115:13-14 · நீதிமொழிகள் 18:10 · நீதிமொழிகள் 3:7-8 · சங்கீதம் 34:7-11
27கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
Relatedநீதிமொழிகள் 13:14 · வெளிப்படுத்தின விசேஷம் 21:6 · நீதிமொழிகள் 2:10-18 · ஏசாயா 33:6 · நீதிமொழிகள் 22:5 · சங்கீதம் 18:5
28ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை; ஜனக்குறைவு தலைவனின் முறிவு.
RelatedI இராஜாக்கள் 4:20-21 · II இராஜாக்கள் 13:7 · யாத்திராகமம் 1:22 · யாத்திராகமம் 1:12 · I இராஜாக்கள் 20:27 · II இராஜாக்கள் 10:32-33
29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.
Relatedயாக்கோபு 1:19 · பிரசங்கி 7:9 · நீதிமொழிகள் 14:17 · நீதிமொழிகள் 15:18 · நீதிமொழிகள் 19:11 · நீதிமொழிகள் 16:32
30சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.
Relatedநீதிமொழிகள் 17:22 · நீதிமொழிகள் 4:23 · யோபு 5:2 · நீதிமொழிகள் 3:8 · நீதிமொழிகள் 12:4 · சங்கீதம் 112:10
31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்;
Relatedநீதிமொழிகள் 22:2 · நீதிமொழிகள் 17:5 · நீதிமொழிகள் 22:16 · நீதிமொழிகள் 19:17 · I யோவான் 4:21 · பிரசங்கி 5:8
32துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
RelatedII தீமோத்தேயு 4:18 · சங்கீதம் 23:4 · II கொரிந்தியர் 5:8 · ஆதியாகமம் 49:18 · யோபு 19:25-27 · வெளிப்படுத்தின விசேஷம் 14:13
33புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
Relatedநீதிமொழிகள் 12:16 · நீதிமொழிகள் 15:28 · நீதிமொழிகள் 12:23 · நீதிமொழிகள் 29:11 · பிரசங்கி 10:3 · நீதிமொழிகள் 13:16
34நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.
Relatedசங்கீதம் 107:34 · உபாகமம் 28:1-68 · உபாகமம் 29:18-28 · உபாகமம் 4:6-8 · எசேக்கியேல் 16:1-63 · நியாயாதிபதிகள் 2:6-14
35ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன் மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS