நெகேமியா 5
Tamil Bible (BSI 1957) • 19 verses
1ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று.
Relatedஏசாயா 5:7 · உபாகமம் 15:7-11 · I கொரிந்தியர் 6:6-8 · யோபு 31:38-39 · யோபு 34:28 · யாத்திராகமம் 3:7
2அதென்னவென்றால், அவர்களில் சிலர்: நாங்கள் எங்கள் குமாரரோடும் எங்கள் குமாரத்திகளோடும் அநேகரானபடியினால், சாப்பிட்டுப் பிழைக்கும்படிக்கு நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள்.
Relatedமல்கியா 2:2 · சங்கீதம் 128:2-4 · ஆதியாகமம் 42:2 · சங்கீதம் 127:3-5 · ஆதியாகமம் 41:57 · ஆதியாகமம் 43:8
3வேறு சிலர்: எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள்.
4இன்னும் சிலர்: ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த, நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்;
5எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ, நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு நிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.
Relatedலேவியராகமம் 25:39-43 · II இராஜாக்கள் 4:1 · ஆதியாகமம் 37:27 · ஏசாயா 58:7 · யாத்திராகமம் 21:1-11 · யாக்கோபு 2:5-6
6அவர்கள் கூக்குரலையும், இந்த வார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,
Relatedநெகேமியா 13:25 · யாத்திராகமம் 11:8 · எண்ணாகமம் 16:15 · எபேசியர் 4:26 · நெகேமியா 13:8 · மாற்கு 3:5
7என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபை கூடிவரச்செய்து,
Relatedலேவியராகமம் 25:36 · உபாகமம் 23:19-20 · யாத்திராகமம் 22:25 · உபாகமம் 24:10-13 · லேவியராகமம் 19:15 · உபாகமம் 15:2-3
8அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.
Relatedலேவியராகமம் 25:47-49 · மத்தேயு 22:12 · யோபு 29:10 · யாத்திராகமம் 21:16 · மத்தேயு 25:15 · யோபு 32:15
9பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா?
Relatedலேவியராகமம் 25:36 · II சாமுவேல் 12:14 · நீதிமொழிகள் 18:5 · I பேதுரு 2:12 · ரோமர் 2:24 · தீத்து 2:5
10நானும் என் சகோதரரும் என் வேலைக்காரரும் இவ்விதமாகவா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன் கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக.
RelatedII கொரிந்தியர் 6:1 · யாத்திராகமம் 22:25-27 · எசேக்கியேல் 18:13 · I கொரிந்தியர் 9:12-18 · பிலேமோன் 1:8-9 · நெகேமியா 5:7
11நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக் கொடுத்துவிடுங்கள் என்றேன்.
Relatedஏசாயா 58:6 · லேவியராகமம் 6:4-5 · II சாமுவேல் 12:6 · நெகேமியா 5:3-4 · லூக்கா 3:8 · I சாமுவேல் 12:3
12அதற்கு அவர்கள்: நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டேன்.
Relatedஎஸ்றா 10:5 · எரேமியா 34:8-10 · II நாளாகமம் 28:14-15 · II நாளாகமம் 6:22-23 · II இராஜாக்கள் 23:2-3 · மத்தேயு 26:63
13நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இந்தப் பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி, கர்த்தரைத் துதித்தார்கள்; பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 18:6 · I நாளாகமம் 16:36 · மத்தேயு 10:14 · சகரியா 5:3-4 · பிரசங்கி 5:5 · சங்கீதம் 76:11
14நான் யூதா தேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம் வரைக்குமிருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை.
Relatedநெகேமியா 13:6 · I கொரிந்தியர் 9:4-15 · I கொரிந்தியர் 9:18 · II தெசலோனிக்கேயர் 3:8-9 · ரோமர் 13:6-7 · நெகேமியா 2:1
15எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.
Relatedநெகேமியா 5:9 · ஏசாயா 50:10 · நீதிமொழிகள் 16:6 · II கொரிந்தியர் 11:9 · மத்தேயு 5:47 · பிரசங்கி 12:13-14
16ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை; அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன்; என் வேலைக்காரரனைவரும் கூட்டமாய் அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள்.
Relatedகலாத்தியர் 6:9 · I கொரிந்தியர் 15:58 · I தெசலோனிக்கேயர் 2:5-6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:33-35 · பிலிப்பியர் 2:20-21 · லூக்கா 8:15
17யூதரும் மூப்பருமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என் பந்தியில் சாப்பிட்டார்கள்.
RelatedI இராஜாக்கள் 18:19 · I பேதுரு 4:9-10 · II சாமுவேல் 9:7 · II சாமுவேல் 9:13 · ஏசாயா 32:8 · ரோமர் 12:13
18நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல்தரமான ஆறு ஆடும் சமைக்கப்பட்டது; பட்சிகளும் சமைக்கப்பட்டது; பத்துநாளைக்கு ஒருதரம் நானாவிதத் திராட்சரசமும் செலவழிந்தது; இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த ஜனங்கள் பட்டபாடு கடினமாயிருந்தபடியால், அதிபதிகள் வாங்குகிற படியை நான் வாங்கவில்லை.
19என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.
Relatedநெகேமியா 13:31 · நெகேமியா 13:14 · சங்கீதம் 106:4 · நெகேமியா 13:22 · சங்கீதம் 25:6-7 · எரேமியா 29:11
📖 நெகேமியாAll 13 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS