II கொரிந்தியர் 5
Tamil Bible (BSI 1957) • 21 verses
1பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
Relatedயோபு 19:25-26 · I யோவான் 3:2 · II பேதுரு 1:13-14 · II கொரிந்தியர் 4:7 · எபிரெயர் 9:24 · I கொரிந்தியர் 15:46-48
2ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;
Relatedரோமர் 8:23 · I கொரிந்தியர் 15:53-54 · பிலிப்பியர் 1:23 · ரோமர் 7:24 · II கொரிந்தியர் 5:3-4 · I பேதுரு 1:6-7
3தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம்.
Relatedஆதியாகமம் 3:7-11 · வெளிப்படுத்தின விசேஷம் 16:15 · வெளிப்படுத்தின விசேஷம் 3:18 · யாத்திராகமம் 32:25
4இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.
5இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே.
RelatedII கொரிந்தியர் 1:22 · எபேசியர் 1:13-14 · ரோமர் 8:23 · எபேசியர் 4:30 · I யோவான் 3:24 · ஏசாயா 29:23
6நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.
RelatedII கொரிந்தியர் 5:1 · பிலிப்பியர் 3:20-21 · சங்கீதம் 39:12 · எபிரெயர் 13:14 · II கொரிந்தியர் 5:8 · நீதிமொழிகள் 14:26
7இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.
Relatedஎபிரெயர் 11:1-27 · II கொரிந்தியர் 4:18 · ரோமர் 8:24-25 · I பேதுரு 1:8 · எபிரெயர் 10:38 · கலாத்தியர் 2:20
8நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தைவிட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.
Relatedபிலிப்பியர் 1:20-24 · II கொரிந்தியர் 5:6 · யோவான் 14:3 · I யோவான் 3:2 · II கொரிந்தியர் 12:2-3 · சங்கீதம் 16:11
9அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.
Relatedகொலோசெயர் 1:10 · II பேதுரு 3:14 · ரோமர் 14:18 · I தெசலோனிக்கேயர் 4:11 · I தீமோத்தேயு 4:10 · ஆதியாகமம் 4:7
10ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
Relatedமத்தேயு 16:27 · வெளிப்படுத்தின விசேஷம் 22:12 · பிரசங்கி 12:14 · எபேசியர் 6:8 · சங்கீதம் 62:12 · ரோமர் 2:5-10
11ஆகையால், கர்த்தருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன்.
Relatedயூதா 1:23 · எபிரெயர் 10:31 · II தீமோத்தேயு 2:24-26 · II கொரிந்தியர் 4:1-2 · வெளிப்படுத்தின விசேஷம் 20:15 · லூக்கா 12:5
12இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல், இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மை பாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம்.
RelatedII கொரிந்தியர் 3:1 · II கொரிந்தியர் 1:14 · கலாத்தியர் 6:12-14 · II கொரிந்தியர் 10:18 · II கொரிந்தியர் 11:12-16 · நீதிமொழிகள் 27:2
13நாங்கள் பைத்தியங்கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கும்; தெளிந்தபுத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கும்.
RelatedII கொரிந்தியர் 11:16-17 · II கொரிந்தியர் 12:6 · ரோமர் 12:3 · II கொரிந்தியர் 11:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:24-25 · I கொரிந்தியர் 4:10-13
14கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;
Relatedகலாத்தியர் 2:20 · ரோமர் 14:7-9 · மத்தேயு 10:37-38 · I பேதுரு 1:8 · ரோமர் 5:15 · மத்தேயு 20:28
15பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.
Relatedரோமர் 14:7-9 · I பேதுரு 4:2-4 · I பேதுரு 1:14-15 · கொலோசெயர் 3:1 · கொலோசெயர் 3:17 · கலாத்தியர் 2:19-20
16ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.
Relatedகொலோசெயர் 3:11 · பிலிப்பியர் 3:7-8 · யோவான் 6:63 · யாக்கோபு 2:1-4 · யாக்கோபு 3:17 · கலாத்தியர் 5:6
17இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.
Relatedஎசேக்கியேல் 36:26 · எபேசியர் 4:22-24 · ஏசாயா 43:18-19 · யோவான் 3:3 · சங்கீதம் 51:10 · எசேக்கியேல் 11:19
18இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
Relatedகொலோசெயர் 1:20-21 · ரோமர் 5:10-11 · II கொரிந்தியர் 5:19-20 · எபேசியர் 2:16-17 · I யோவான் 4:10 · ரோமர் 5:1
19அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.
20ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.
Relatedஎபேசியர் 6:20 · லூக்கா 14:23 · மல்கியா 2:7 · எசேக்கியேல் 18:31-32 · ஏசாயா 55:6-7 · யோவான் 20:21
21நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
RelatedI பேதுரு 2:22-24 · I பேதுரு 3:18 · ரோமர் 5:19 · கலாத்தியர் 3:13 · I கொரிந்தியர் 1:30 · I யோவான் 3:5
📖 II கொரிந்தியர்All 13 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS