ஏசாயா 26
Tamil Bible (BSI 1957) • 21 verses
1அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்.
Relatedஏசாயா 62:11 · ஏசாயா 60:18 · சகரியா 2:5 · எபேசியர் 5:19-20 · II சாமுவேல் 22:1-51 · சங்கீதம் 48:12
2சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 5:9 · ஏசாயா 60:11 · I பேதுரு 2:9 · சங்கீதம் 118:20 · ஏசாயா 62:10 · ஏசாயா 62:2
3உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
4கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.
Relatedஏசாயா 12:2 · சங்கீதம் 62:8 · பிலிப்பியர் 4:13 · சங்கீதம் 55:22 · சங்கீதம் 18:2 · சங்கீதம் 62:11
5அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்; உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைமட்டும் தாழ்த்தி அது மண்ணாகுமட்டும் இடியப்பண்ணுவார்.
Relatedஎரேமியா 51:37 · யோபு 40:11-13 · வெளிப்படுத்தின விசேஷம் 18:2 · ஏசாயா 13:11 · எரேமியா 51:64 · எரேமியா 51:25-26
6கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும்.
Relatedரோமர் 16:20 · லூக்கா 10:19 · வெளிப்படுத்தின விசேஷம் 2:26 · யாக்கோபு 2:5 · யோசுவா 10:24 · எரேமியா 50:45
7நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்.
Relatedஎபேசியர் 2:10 · ஏசாயா 42:16 · I யோவான் 3:7 · II கொரிந்தியர் 1:12 · I யோவான் 3:10 · நீதிமொழிகள் 20:7
8கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்துமவாஞ்சையாயிருக்கிறது.
Relatedயாக்கோபு 5:7-11 · சங்கீதம் 37:3-7 · ஏசாயா 33:2 · II தெசலோனிக்கேயர் 3:5 · சங்கீதம் 65:6 · யாத்திராகமம் 3:15
9என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.
Relatedமத்தேயு 6:33 · சங்கீதம் 63:1 · சங்கீதம் 119:62 · உன்னதப்பாட்டு 3:1-4 · சங்கீதம் 63:6-7 · வெளிப்படுத்தின விசேஷம் 11:13
10துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.
11கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது; அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.
12கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே.
Relatedஎபேசியர் 2:10 · சங்கீதம் 57:2 · சங்கீதம் 29:11 · எசேக்கியேல் 20:14 · உபாகமம் 30:6 · எரேமியா 33:6
13எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்.
14அவர்கள் செத்தவர்கள், ஜீவிக்கமாட்டார்கள்; மாண்ட இராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்; நீர் அவர்களை விசாரித்துச் சங்கரித்து, அவர்கள் பேரையும் அழியப்பண்ணினீர்.
Relatedநீதிமொழிகள் 10:7 · வெளிப்படுத்தின விசேஷம் 18:2-3 · ஏசாயா 14:19-22 · சங்கீதம் 106:28 · ஏசாயா 51:12-13 · ஆபகூக் 2:18-20
15இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; கர்த்தாவே, இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் நெடுந்தூரத்தில் தள்ளிவைத்தீர்.
16கர்த்தாவே, நெருக்கத்தில் உம்மைத் தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள் மேலிருக்கையில் அந்தரங்க வேண்டுதல்செய்தார்கள்.
Relatedஓசியா 5:15 · சங்கீதம் 50:15 · ஓசியா 7:14 · I சாமுவேல் 1:15 · நியாயாதிபதிகள் 10:9-10 · புலம்பல் 2:19
17கர்த்தாவே, பேறுகாலம் சமீபித்திருக்கையில் வேதனைப்பட்டு, தன் அம்பாயத்தில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம்.
18நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு இரட்சிப்பையும் செய்யமாட்டாதிருக்கிறோம்; பூச்சக்கரத்துக்குடிகள் விழுகிறதுமில்லை.
19மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும்.
Relatedதானியேல் 12:2 · எசேக்கியேல் 37:1-14 · மத்தேயு 27:52 · எபேசியர் 5:14 · ஓசியா 13:14 · சங்கீதம் 71:20
20என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.
Relatedசங்கீதம் 30:5 · சங்கீதம் 27:5 · ஏசாயா 54:7-8 · மத்தேயு 6:6 · சங்கீதம் 91:4 · நீதிமொழிகள் 18:10
21இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 6:9-11 · ஏசாயா 13:11 · யூதா 1:14-15 · யோபு 16:18 · ஏசாயா 18:4 · மீகா 1:3-8
📖 ஏசாயாAll 66 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS