ஏசாயா 32
Tamil Bible (BSI 1957) • 20 verses
1இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.
Relatedஏசாயா 9:6-7 · எரேமியா 33:15 · வெளிப்படுத்தின விசேஷம் 19:11 · எபிரெயர் 1:8-9 · II சாமுவேல் 23:3 · சங்கீதம் 72:1-4
2அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.
3அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.
Relatedஏசாயா 29:18 · ஏசாயா 35:5-6 · II கொரிந்தியர் 4:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18 · I யோவான் 2:20-21 · மாற்கு 7:37
4பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.
Relatedஏசாயா 29:24 · லூக்கா 21:14-15 · மத்தேயு 11:25 · மத்தேயு 16:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:4-12
5மூடன் இனி தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை.
Relatedஏசாயா 5:20 · சங்கீதம் 15:4 · மல்கியா 3:18 · நீதிமொழிகள் 23:6-8 · I சாமுவேல் 25:25 · I சாமுவேல் 25:3-8
6ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.
Relatedமத்தேயு 15:19 · I சாமுவேல் 24:13 · நீதிமொழிகள் 11:24-26 · மத்தேயு 23:13 · ஏசாயா 3:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:21-22
7லோபியின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப் பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான்.
Relatedஎரேமியா 5:26-28 · மத்தேயு 26:14-16 · மத்தேயு 26:59-60 · சங்கீதம் 64:4-6 · ஏசாயா 5:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:11-13
8தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 11:29-30 · II சாமுவேல் 9:1-13 · நீதிமொழிகள் 11:24-25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:39 · II கொரிந்தியர் 8:2 · லூக்கா 6:33-35
9சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.
Relatedஏசாயா 3:16 · ஏசாயா 28:23 · மத்தேயு 13:9 · நியாயாதிபதிகள் 9:7 · எரேமியா 48:11-12 · சங்கீதம் 49:1-2
10நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போகும்; அறுப்புக்காலம் வராது.
11சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள்; உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.
12செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள்.
Relatedஉபாகமம் 8:7-8 · புலம்பல் 2:11 · உபாகமம் 11:11-12 · எசேக்கியேல் 20:15 · எசேக்கியேல் 20:6 · புலம்பல் 4:3-4
13என் ஜனத்தினுடைய நிலத்திலும், களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
Relatedஓசியா 9:6 · ஏசாயா 22:2 · ஏசாயா 34:13 · ஏசாயா 7:23 · சங்கீதம் 107:34 · வெளிப்படுத்தின விசேஷம் 18:7-8
14அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.
Relatedஏசாயா 24:12 · ஏசாயா 27:10 · ஏசாயா 25:2 · ஏசாயா 24:10 · ஏசாயா 6:11 · வெளிப்படுத்தின விசேஷம் 18:2-3
15உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.
16வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும்.
Relatedஏசாயா 42:4 · I கொரிந்தியர் 6:9-11 · சங்கீதம் 94:14-15 · ஓசியா 3:5 · I பேதுரு 2:9-12 · I பேதுரு 4:1-4
17நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.
Relatedஏசாயா 26:3 · சங்கீதம் 119:165 · பிலிப்பியர் 4:6-9 · ரோமர் 14:17 · யாக்கோபு 3:17-18 · சங்கீதம் 85:8
18என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
Relatedசகரியா 2:5 · ஓசியா 2:18-23 · எரேமியா 33:16 · எசேக்கியேல் 34:25-26 · ஏசாயா 33:20-22 · ஏசாயா 35:9-10
19ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோகும்.
20மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.
📖 ஏசாயாAll 66 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS