மத்தேயு 1
Tamil Bible (BSI 1957) • 25 verses
1ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
Relatedஆதியாகமம் 22:18 · ரோமர் 1:3 · கலாத்தியர் 3:16 · வெளிப்படுத்தின விசேஷம் 22:16 · சங்கீதம் 132:11 · எரேமியா 23:5
2ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 7:8 · எபிரெயர் 11:17-18 · ஆதியாகமம் 21:2-5 · ஆதியாகமம் 46:8-27 · ஆதியாகமம் 25:26 · யோசுவா 24:2-4
3யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
Relatedஆதியாகமம் 38:24-27 · ஆதியாகமம் 46:12 · ஆதியாகமம் 38:29-30 · ரூத் 4:18-22 · I நாளாகமம் 4:1 · லூக்கா 3:33
4ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
Relatedஎண்ணாகமம் 1:7 · I நாளாகமம் 2:10-12 · எண்ணாகமம் 7:12 · எண்ணாகமம் 2:3 · எண்ணாகமம் 7:17 · எண்ணாகமம் 10:14
5சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
6ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
RelatedI இராஜாக்கள் 15:5 · I சாமுவேல் 17:12 · II சாமுவேல் 12:24-25 · II சாமுவேல் 23:1 · I சாமுவேல் 16:1 · II சாமுவேல் 11:26-27
7சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
RelatedII நாளாகமம் 14:1-15 · I இராஜாக்கள் 15:8-23 · I நாளாகமம் 3:10-14 · II நாளாகமம் 13:7 · II நாளாகமம் 12:1 · I இராஜாக்கள் 14:31
8ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
RelatedI நாளாகமம் 3:11 · II நாளாகமம் 26:1-23 · I இராஜாக்கள் 15:24 · II இராஜாக்கள் 3:1 · II இராஜாக்கள் 14:21 · I இராஜாக்கள் 22:2-50
9உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
RelatedI நாளாகமம் 3:11-13 · II இராஜாக்கள் 15:7 · II இராஜாக்கள் 18:1-20 · II இராஜாக்கள் 15:32-16:20 · II நாளாகமம் 27:1-29:32 · ஏசாயா 7:1-13
10எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
RelatedII நாளாகமம் 32:33-35:27 · II இராஜாக்கள் 24:3-4 · எரேமியா 1:2-3 · I நாளாகமம் 3:13-15 · I இராஜாக்கள் 13:2 · II இராஜாக்கள் 20:21-23:30
11பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
Relatedஎரேமியா 27:20 · எரேமியா 52:28-30 · எரேமியா 52:11-15 · II இராஜாக்கள் 25:11 · II நாளாகமம் 36:1-8 · தானியேல் 1:2
12பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போனபின்பு எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;
13சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
14ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
15எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
16யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.
17இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்துவரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.
18இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
Relatedஉபாகமம் 22:21-24 · உபாகமம் 24:1-4 · யோவான் 8:4-5 · மாற்கு 6:20 · ஆதியாகமம் 38:24 · லேவியராகமம் 20:10
20அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
21அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:12 · யோவான் 1:29 · I யோவான் 3:5 · கொலோசெயர் 1:20-23 · லூக்கா 2:21
22தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
Relatedலூக்கா 24:44 · மத்தேயு 2:23 · I இராஜாக்கள் 8:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:18 · I இராஜாக்கள் 8:24 · யோவான் 18:9
23அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
24யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
Relatedயாக்கோபு 2:21-26 · யோவான் 15:14 · யாத்திராகமம் 40:27 · யோவான் 2:5-8 · யாத்திராகமம் 40:16 · யாத்திராகமம் 40:32
25அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
Relatedலூக்கா 2:21 · லூக்கா 2:7 · யாத்திராகமம் 13:2 · யாத்திராகமம் 22:29 · மத்தேயு 1:21 · ரோமர் 8:29
📖 மத்தேயுAll 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS