அப்போஸ்தலருடைய நடபடிகள் 11
Tamil Bible (BSI 1957) • 30 verses
1புறஜாதியாரும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலரும் சகோதரரும் கேள்விப்பட்டார்கள்.
Relatedசங்கீதம் 22:27 · மல்கியா 1:11 · ரோமர் 15:7-12 · ஏசாயா 32:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:3
2பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி:
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:45 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:20-23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:1 · கலாத்தியர் 2:12-14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:5
3விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:28 · கலாத்தியர் 2:12 · லூக்கா 15:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:48 · I கொரிந்தியர் 5:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:23
4அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விவரிக்கத் தொடங்கி:
5நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:9-32 · ஆமோஸ் 8:2 · எரேமியா 1:11-14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:5-14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:17 · ஆமோஸ் 7:4-7
6அதிலே நான் உற்றுப்பார்த்துக் கவனிக்கிறபோது, பூமியிலுள்ள நாலுகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன்.
7அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
8அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன்.
Relatedரோமர் 14:14 · ஓசியா 9:3 · I கொரிந்தியர் 7:14 · லேவியராகமம் 10:10 · எஸ்றா 9:11-12 · லேவியராகமம் 11:47
9இரண்டாந்தரமும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதேயென்று மறுமொழி சொல்லிற்று.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:9 · எபிரெயர் 9:13-14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:28 · I தீமோத்தேயு 4:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34-35
10இப்படி மூன்றுதரம் சம்பவித்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது.
11உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனுஷர் நான் இருந்த வீட்டுக்குமுன்னே வந்துநின்றார்கள்.
Relatedயாத்திராகமம் 4:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:10-12 · யாத்திராகமம் 4:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:17-18
12நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரராகிய இந்த ஆறுபேரும் என்னோடேகூட வந்தார்கள்; அந்த மனுஷனுடைய வீட்டுக்குள் பிரவேசித்தோம்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 8:29 · ரோமர் 3:22 · II தெசலோனிக்கேயர் 2:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:23 · யோவான் 16:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:9
13அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு;
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:30-32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:43 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:3-6 · எபிரெயர் 1:14
14நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:31-34 · ஆதியாகமம் 17:7 · I யோவான் 5:9-13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:6
15நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 19:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34-46 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:2-12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:31
16யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைவுகூர்ந்தேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:5 · மாற்கு 1:8 · நீதிமொழிகள் 1:23 · மத்தேயு 3:11 · லூக்கா 3:16 · I கொரிந்தியர் 12:13
17ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:47 · ரோமர் 9:20-26 · தானியேல் 4:35 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:8-9 · ரோமர் 11:34-36 · ரோமர் 9:15-16
18இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Relatedரோமர் 10:12-13 · II கொரிந்தியர் 7:10 · எசேக்கியேல் 36:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:21 · II தீமோத்தேயு 2:25-26 · யாக்கோபு 1:16-17
19ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புருதீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:35 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:36 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:2 · மத்தேயு 10:6
20அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள்.
Relatedமத்தேயு 27:32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:1 · I கொரிந்தியர் 1:23-24 · எபேசியர் 3:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:9
21கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 2:47 · லூக்கா 1:66 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:14 · ஏசாயா 59:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7 · I தெசலோனிக்கேயர் 1:5
22எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:27 · I தெசலோனிக்கேயர் 3:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:35-39 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:22
23அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.
RelatedI கொரிந்தியர் 15:58 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:43 · I யோவான் 2:28 · யோசுவா 23:8 · II தீமோத்தேயு 3:10
24அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 5:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:21 · சங்கீதம் 112:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:3
25பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:30 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:39
26அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
RelatedI பேதுரு 4:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:28 · I பேதுரு 4:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27 · I கொரிந்தியர் 14:23 · I கொரிந்தியர் 12:12
27அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:1 · I கொரிந்தியர் 12:28 · எபேசியர் 4:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:17 · மத்தேயு 23:34
28அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 21:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:2 · லூக்கா 2:1 · I இராஜாக்கள் 17:1-16 · லூக்கா 3:1 · II இராஜாக்கள் 8:1-2
29அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ்சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.
RelatedII கொரிந்தியர் 8:12-14 · கலாத்தியர் 2:10 · II கொரிந்தியர் 8:2-4 · I கொரிந்தியர் 16:1-2 · ரோமர் 15:25-27 · எபிரெயர் 13:5-6
30அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள்.
📖 அப்போஸ்தலருடைய நடபடிகள்All 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS