யோபு 12
Tamil Bible (BSI 1957) • 25 verses
1யோபு பிரதியுத்தரமாக:
2ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.
3உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
Relatedயோபு 13:2-5 · நீதிமொழிகள் 26:4 · II கொரிந்தியர் 11:21-23 · யோபு 26:2-3 · யோபு 6:6-7 · II கொரிந்தியர் 11:5
4என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.
5ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.
Relatedசங்கீதம் 17:5 · நீதிமொழிகள் 13:9 · மத்தேயு 25:8 · ஆமோஸ் 6:1-6 · லூக்கா 16:19-20 · சங்கீதம் 94:18
6கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
Relatedயோபு 9:24 · சங்கீதம் 73:11-12 · யோபு 21:7-15 · சங்கீதம் 17:14 · சங்கீதம் 37:1 · சங்கீதம் 37:35
7இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.
8அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
9கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
Relatedஏசாயா 41:20 · எரேமியா 27:5-6 · ரோமர் 11:36 · தானியேல் 9:17 · I சாமுவேல் 2:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:35
10சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 17:28 · யோபு 33:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:25 · யோபு 27:3 · எண்ணாகமம் 16:22 · தானியேல் 5:23
11வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
Relatedயோபு 34:3 · எபிரெயர் 5:14 · யோபு 6:30 · பிலிப்பியர் 1:10 · I பேதுரு 2:3 · I கொரிந்தியர் 10:15
12முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
13அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
14இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.
Relatedஏசாயா 22:22 · வெளிப்படுத்தின விசேஷம் 3:7 · மல்கியா 1:4 · யோபு 11:10 · யோபு 16:11 · யோபு 9:12-13
15இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும்.
RelatedI இராஜாக்கள் 17:1 · ஆமோஸ் 5:8 · ஆதியாகமம் 6:13 · யோபு 12:10 · ஆதியாகமம் 7:11-8:2 · லூக்கா 4:25
16அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.
17அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.
Relatedஏசாயா 29:14 · I கொரிந்தியர் 1:19-20 · II சாமுவேல் 17:23 · யோபு 3:14 · II சாமுவேல் 15:31 · யோபு 9:24
18அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.
Relatedதானியேல் 2:21 · சங்கீதம் 116:16 · எரேமியா 52:31-34 · II நாளாகமம் 33:11-14 · வெளிப்படுத்தின விசேஷம் 19:16
19அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
Relatedஏசாயா 45:1 · ஏசாயா 37:36-38 · யோசுவா 10:42 · யோபு 35:9 · வெளிப்படுத்தின விசேஷம் 19:19-21 · யோசுவா 10:24
20அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறார்.
21அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.
Relatedசங்கீதம் 107:40 · தானியேல் 4:32-33 · ஏசாயா 23:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23 · யாத்திராகமம் 16:24 · ஏசாயா 22:21
22அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.
Relatedதானியேல் 2:22 · I கொரிந்தியர் 4:5 · I கொரிந்தியர் 2:10 · யோபு 3:5 · லூக்கா 1:79 · மத்தேயு 10:26
23அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும்பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார்.
24அவர் பூமியிலுள்ள ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத அந்தரத்திலே அலையப்பண்ணுகிறார்.
25அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறித் திரியப்பண்ணுகிறார்.
📖 யோபுAll 42 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS