I பேதுரு 3
Tamil Bible (BSI 1957) • 22 verses
1அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
Relatedகொலோசெயர் 3:18 · எபேசியர் 5:33 · எபேசியர் 5:22-24 · தீத்து 2:3-6 · I கொரிந்தியர் 11:3 · I கொரிந்தியர் 7:16
2போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.
RelatedI பேதுரு 2:12 · I பேதுரு 1:15 · பிலிப்பியர் 1:27 · II பேதுரு 3:11 · எபேசியர் 5:33 · I பேதுரு 3:15-16
3மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,
RelatedI தீமோத்தேயு 2:9-10 · ரோமர் 12:2 · ஏசாயா 3:18-24 · தீத்து 2:3-15 · எரேமியா 4:30 · ஏசாயா 61:10
4அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
5இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.
Relatedதீத்து 2:3-4 · I தீமோத்தேயு 5:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:36 · I தீமோத்தேயு 5:10 · லூக்கா 8:2-3 · நீதிமொழிகள் 31:30
6அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.
Relatedஆதியாகமம் 18:12 · ரோமர் 9:7-9 · ஏசாயா 57:11 · தானியேல் 3:16-18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:19 · மத்தேயு 26:69-75
7அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
Relatedகொலோசெயர் 3:19 · ஆதியாகமம் 2:23-24 · மத்தேயு 19:3-9 · எபேசியர் 5:25-28 · I கொரிந்தியர் 7:3 · எபேசியர் 5:33
8மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனவுருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,
Relatedரோமர் 12:10 · எபேசியர் 4:31-5:2 · I பேதுரு 1:22 · பிலிப்பியர் 4:8-9 · யாக்கோபு 3:17 · சகரியா 7:9
9தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
Relatedரோமர் 12:17 · நீதிமொழிகள் 20:22 · ரோமர் 12:14 · ரோமர் 12:19-21 · I தெசலோனிக்கேயர் 5:15 · லூக்கா 6:27-29
10ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,
Relatedசங்கீதம் 34:12-16 · யாக்கோபு 1:26 · I பேதுரு 2:1 · I பேதுரு 2:22 · வெளிப்படுத்தின விசேஷம் 14:5 · யாக்கோபு 3:1-10
11பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப்பின்தொடரக்கடவன்.
12கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
Relatedசங்கீதம் 34:15-16 · யோவான் 9:31 · நீதிமொழிகள் 15:29 · நீதிமொழிகள் 15:3 · II நாளாகமம் 7:15 · நீதிமொழிகள் 15:8
13நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?
Relatedநீதிமொழிகள் 16:7 · ரோமர் 8:28 · I தெசலோனிக்கேயர் 5:15 · III யோவான் 1:11 · சங்கீதம் 38:20 · ரோமர் 13:3
14நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து;
Relatedமத்தேயு 10:28 · I பேதுரு 2:19-20 · மத்தேயு 5:10-12 · ஏசாயா 41:10-14 · ஏசாயா 8:12-13 · II கொரிந்தியர் 12:10
15கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.
Relatedகொலோசெயர் 4:6 · II தீமோத்தேயு 2:25-26 · லூக்கா 21:14-15 · I பேதுரு 3:2 · மத்தேயு 10:18-20 · சங்கீதம் 119:46
16கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடைவர்களாயிருங்கள்.
17தீமைசெய்து பாடனுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மை செய்து பாடனுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.
RelatedI பேதுரு 3:14 · I பேதுரு 4:19 · மத்தேயு 26:39 · I பேதுரு 2:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:14 · I பேதுரு 2:20
18ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
Relatedஎபிரெயர் 9:28 · எபிரெயர் 9:26 · II கொரிந்தியர் 5:21 · I பேதுரு 4:6 · தீத்து 2:14 · ரோமர் 5:6-8
19அந்த ஆவியிலே அவர் போய்க்காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
RelatedI பேதுரு 4:6 · ஏசாயா 61:1 · ஏசாயா 42:7 · ஏசாயா 49:9 · நெகேமியா 9:30 · வெளிப்படுத்தின விசேஷம் 20:7
20அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
Relatedஎபிரெயர் 11:7 · II பேதுரு 2:5 · ஆதியாகமம் 6:3 · ஆதியாகமம் 6:5 · ஆதியாகமம் 8:18 · ஆதியாகமம் 6:13-7:7
21அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
Relatedமாற்கு 16:16 · எசேக்கியேல் 36:25-26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38 · கலாத்தியர் 3:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:16 · எபேசியர் 5:26
22அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
Relatedஎபிரெயர் 9:24 · எபிரெயர் 12:2 · எபிரெயர் 10:12 · எபேசியர் 1:20-21 · மாற்கு 16:19 · ரோமர் 8:34
📖 I பேதுருAll 5 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS