பிலேமோன் 1
Tamil Bible (BSI 1957) • 25 verses
1கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும்,
Relatedபிலிப்பியர் 2:25 · எபேசியர் 3:1 · பிலேமோன் 1:9 · கொலோசெயர் 1:1 · I கொரிந்தியர் 3:9 · கொலோசெயர் 4:11
2பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது:
Relatedபிலிப்பியர் 2:25 · ரோமர் 16:5 · கொலோசெயர் 4:17 · கொலோசெயர் 4:15 · I கொரிந்தியர் 16:19 · II தீமோத்தேயு 2:3-4
3நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
4கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலுமுள்ள உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு,
Relatedரோமர் 1:8 · எபேசியர் 1:16 · பிலிப்பியர் 1:3 · கொலோசெயர் 1:3 · I தெசலோனிக்கேயர் 1:2 · II தெசலோனிக்கேயர் 1:3
5என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து,
Relatedகொலோசெயர் 1:4 · எபேசியர் 1:15 · சங்கீதம் 16:3 · I யோவான் 5:1-2 · I கொரிந்தியர் 16:1 · I யோவான் 3:23
6உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன்.
Relatedபிலிப்பியர் 1:9-11 · II பேதுரு 1:8 · கொலோசெயர் 1:9 · மத்தேயு 5:16 · I பேதுரு 1:5-8 · I பேதுரு 2:12
7சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.
RelatedII கொரிந்தியர் 7:13 · II கொரிந்தியர் 7:4 · I தெசலோனிக்கேயர் 3:9 · பிலேமோன் 1:20 · III யோவான் 1:3-6 · I தெசலோனிக்கேயர் 2:19
8ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,
RelatedI தெசலோனிக்கேயர் 2:6 · II கொரிந்தியர் 10:8 · II கொரிந்தியர் 3:12 · II கொரிந்தியர் 10:1-2 · எபேசியர் 5:4 · II கொரிந்தியர் 11:21
9நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.
RelatedII கொரிந்தியர் 5:20 · எபேசியர் 4:1 · ரோமர் 12:1 · எபேசியர் 3:1 · பிலேமோன் 1:1-25 · சங்கீதம் 71:9
10என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
Relatedகொலோசெயர் 4:9 · I கொரிந்தியர் 4:15 · கலாத்தியர் 4:19 · I தீமோத்தேயு 1:2 · தீத்து 1:4 · II சாமுவேல் 19:37-38
11முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.
12அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்; என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.
Relatedமத்தேயு 6:14-15 · லூக்கா 15:20 · மாற்கு 11:25 · எபேசியர் 4:32 · எரேமியா 31:20 · மத்தேயு 18:21-35
13சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்.
Relatedஎபேசியர் 3:1 · பிலிப்பியர் 1:7 · I கொரிந்தியர் 16:17 · பிலேமோன் 1:1 · எபேசியர் 4:1 · பிலிப்பியர் 2:30
14ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.
RelatedII கொரிந்தியர் 9:7 · I பேதுரு 5:2-3 · I நாளாகமம் 29:17 · II கொரிந்தியர் 8:12 · I கொரிந்தியர் 9:17 · II கொரிந்தியர் 9:5
15அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும்.
Relatedஆதியாகமம் 50:20 · ஆதியாகமம் 45:5-8 · ஏசாயா 20:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:28 · சங்கீதம் 76:10
16எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்கு சரீரத்தின்படியேயும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்!
Relatedகொலோசெயர் 3:22 · மத்தேயு 23:8 · I தீமோத்தேயு 6:2 · I கொரிந்தியர் 7:22 · எபேசியர் 6:5-7 · I பேதுரு 1:22-23
17ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்.
RelatedII கொரிந்தியர் 8:23 · மத்தேயு 10:40 · பிலேமோன் 1:12 · மத்தேயு 18:5 · மத்தேயு 25:40 · யாக்கோபு 2:5
18அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
Relatedஏசாயா 53:4-7
19பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.
Relatedகலாத்தியர் 6:11 · I கொரிந்தியர் 16:21-22 · கலாத்தியர் 5:2 · I கொரிந்தியர் 4:15 · யாக்கோபு 5:19-20 · I கொரிந்தியர் 9:1-2
20ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்.
Relatedபிலேமோன் 1:7 · III யோவான் 1:4 · பிலேமோன் 1:12 · எபிரெயர் 13:17 · II கொரிந்தியர் 2:2 · I தெசலோனிக்கேயர் 3:7-9
21நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன்.
RelatedII தெசலோனிக்கேயர் 3:4 · II கொரிந்தியர் 2:3 · II கொரிந்தியர் 7:16 · II கொரிந்தியர் 8:22 · கலாத்தியர் 5:10
22மேலும், உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று நம்பியிருக்கிறபடியால், நான் இருக்கும்படிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும்.
RelatedII கொரிந்தியர் 1:11 · பிலிப்பியர் 2:24 · யாக்கோபு 5:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:23 · பிலிப்பியர் 1:19 · II யோவான் 1:12
23கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,
24என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
Relatedகொலோசெயர் 4:14 · கொலோசெயர் 4:10 · II தீமோத்தேயு 4:10-11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:37-39 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:12
25நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.
📖 பிலேமோன்All 1 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS