லூக்கா 12
Tamil Bible (BSI 1957) • 59 verses
1அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
RelatedI கொரிந்தியர் 5:7-8 · I பேதுரு 2:1 · மத்தேயு 16:6-12 · யாக்கோபு 3:17 · மாற்கு 8:15-21 · லூக்கா 12:56
2வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.
Relatedமாற்கு 4:22 · லூக்கா 8:17 · II கொரிந்தியர் 5:10 · பிரசங்கி 12:14 · மத்தேயு 10:26-33 · ரோமர் 2:16
3ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்.
Relatedமத்தேயு 10:27 · பிரசங்கி 10:20 · மத்தேயு 12:36 · பிரசங்கி 10:12-13 · யூதா 1:14-15 · யோபு 24:14-15
4என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
Relatedமத்தேயு 10:28 · எரேமியா 1:8 · வெளிப்படுத்தின விசேஷம் 2:10 · பிலிப்பியர் 1:28 · I பேதுரு 3:14 · ஏசாயா 51:7-13
5நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
RelatedII பேதுரு 2:4 · மத்தேயு 10:28 · வெளிப்படுத்தின விசேஷம் 14:7 · சங்கீதம் 9:17 · எபிரெயர் 10:31 · மத்தேயு 25:41
6இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுவதில்லை.
Relatedலூக்கா 12:24 · சங்கீதம் 147:9 · சங்கீதம் 145:15-16 · மத்தேயு 10:29 · சங்கீதம் 50:10-11 · சங்கீதம் 113:5-6
7உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும், நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
Relatedமத்தேயு 10:30-31 · மத்தேயு 6:26 · ஏசாயா 43:3-4 · II சாமுவேல் 14:11 · லூக்கா 21:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:34
8அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.
Relatedமத்தேயு 10:32-33 · I யோவான் 2:23 · ரோமர் 10:9-10 · II தீமோத்தேயு 2:12 · லூக்கா 15:10 · வெளிப்படுத்தின விசேஷம் 3:4-5
9மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்.
RelatedII தீமோத்தேயு 2:12 · மாற்கு 8:38 · மத்தேயு 7:23 · லூக்கா 9:26 · மத்தேயு 10:33 · வெளிப்படுத்தின விசேஷம் 3:8
10எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ்சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை.
Relatedமத்தேயு 12:31-32 · I யோவான் 5:16 · I தீமோத்தேயு 1:13 · எபிரெயர் 6:4-8 · மாற்கு 3:28-30 · எபிரெயர் 10:26-31
11அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய்விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்.
Relatedமத்தேயு 10:17-20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:5-7 · லூக்கா 12:22 · லூக்கா 21:12-14 · மத்தேயு 23:34 · மாற்கு 13:9-11
12நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.
Relatedலூக்கா 21:15 · மத்தேயு 10:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:10 · யாத்திராகமம் 4:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:55
13அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத்தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
RelatedI தீமோத்தேயு 6:5 · லூக்கா 6:45 · எசேக்கியேல் 33:31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:18-19 · சங்கீதம் 17:14
14அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார்.
15பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
Relatedஎபிரெயர் 13:5 · I தீமோத்தேயு 6:6-10 · சங்கீதம் 119:36-37 · நீதிமொழிகள் 15:16 · நீதிமொழிகள் 16:16 · மத்தேயு 6:25-26
16அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
Relatedஆதியாகமம் 26:12-14 · ஆதியாகமம் 41:47-49 · ஓசியா 2:8 · சங்கீதம் 73:3 · சங்கீதம் 73:12 · யோபு 12:6
17அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்துவைக்கிறதற்கு இடமில்லையே;
18நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,
19பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
Relatedநீதிமொழிகள் 27:1 · யாக்கோபு 4:13-15 · மத்தேயு 6:19-21 · I கொரிந்தியர் 15:32 · பிரசங்கி 11:9 · ஏசாயா 5:11
20தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.
21தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.
Relatedமத்தேயு 6:19-20 · லூக்கா 12:33 · யாக்கோபு 2:5 · யாக்கோபு 5:1-3 · வெளிப்படுத்தின விசேஷம் 2:9 · I தீமோத்தேயு 6:18-19
22பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
23ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது.
Relatedயோபு 2:6 · நீதிமொழிகள் 13:8 · யோபு 2:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:18-19 · யோபு 1:12 · ஆதியாகமம் 19:17
24காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
25கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.
26மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?
27காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Relatedமத்தேயு 6:28-30 · லூக்கா 12:24 · I இராஜாக்கள் 10:1-13 · II நாளாகமம் 9:1-12 · யாக்கோபு 1:10-11
28இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
29ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
30இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
Relatedமத்தேயு 6:32 · மத்தேயு 6:8 · லூக்கா 12:32 · எபேசியர் 4:17 · மத்தேயு 18:14 · I தெசலோனிக்கேயர் 4:5
31தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
Relatedமத்தேயு 6:33 · எபிரெயர் 13:5 · சங்கீதம் 34:9 · I இராஜாக்கள் 3:11-13 · யோவான் 6:27 · I தீமோத்தேயு 4:8
32பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.
Relatedஎபிரெயர் 12:28 · I பேதுரு 1:3-5 · வெளிப்படுத்தின விசேஷம் 1:6 · பிலிப்பியர் 2:13 · லூக்கா 10:21 · மத்தேயு 25:34
33உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.
Relatedமத்தேயு 19:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:34-35 · லூக்கா 18:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:45 · மத்தேயு 6:19-21 · லூக்கா 16:9
34உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
35உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,
36தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்.
Relatedயூதா 1:20-21 · யாக்கோபு 5:7-8 · வெளிப்படுத்தின விசேஷம் 3:20 · புலம்பல் 3:25-26 · மாற்கு 13:34-37 · ஏசாயா 64:4
37எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
RelatedII பேதுரு 3:14 · மத்தேயு 24:42 · யோவான் 13:4-5 · யோவான் 12:26 · மத்தேயு 24:45-47 · I கொரிந்தியர் 2:9
38அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.
39திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 3:3 · II பேதுரு 3:10 · வெளிப்படுத்தின விசேஷம் 16:15 · மத்தேயு 24:43-44 · I தெசலோனிக்கேயர் 5:2-3 · மத்தேயு 6:19
40அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.
RelatedI தெசலோனிக்கேயர் 5:6 · மத்தேயு 25:13 · மத்தேயு 24:44 · ரோமர் 13:11 · வெளிப்படுத்தின விசேஷம் 19:7 · II பேதுரு 3:12-14
41அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்கு மாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
42அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்?
Relatedமத்தேயு 24:45-46 · I கொரிந்தியர் 4:1-2 · I பேதுரு 4:10 · எபிரெயர் 13:17 · I பேதுரு 5:1-4 · II தீமோத்தேயு 4:2
43எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்.
44தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Relatedலூக்கா 22:29-30 · லூக்கா 19:17-19 · மத்தேயு 24:47 · தானியேல் 12:2-3 · வெளிப்படுத்தின விசேஷம் 3:18
45அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால்,
Relatedமத்தேயு 24:48-50 · எரேமியா 20:2 · எசேக்கியேல் 34:8 · வெளிப்படுத்தின விசேஷம் 18:7-8 · வெளிப்படுத்தின விசேஷம் 13:7-10 · II பேதுரு 2:13
46அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 16:15 · லூக்கா 12:40 · மத்தேயு 24:51 · சங்கீதம் 11:5 · லூக்கா 12:19-20 · மத்தேயு 13:49-50
47தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
Relatedயாக்கோபு 4:17 · யோவான் 9:41 · யோவான் 12:48 · யோவான் 15:22-24 · உபாகமம் 25:2-3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:30
48அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.
Relatedயாக்கோபு 3:1 · லேவியராகமம் 5:17 · லூக்கா 16:10-12 · மத்தேயு 25:14-29 · யோவான் 15:22 · மத்தேயு 13:12
49பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன்.
Relatedமல்கியா 4:1 · மத்தேயு 3:10-12 · மல்கியா 3:2-3 · லூக்கா 12:51-52 · யோவேல் 2:30-31 · ஏசாயா 11:4
50ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
Relatedயோவான் 12:27-28 · யோவான் 19:30 · யோவான் 7:6-8 · மாற்கு 10:32-38 · யோவான் 4:34 · மத்தேயு 20:17-22
51நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Relatedமத்தேயு 10:34-36 · லூக்கா 12:49 · சகரியா 11:10-11 · மத்தேயு 24:7-10 · சகரியா 11:14 · சகரியா 11:7-8
52எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
Relatedயோவான் 15:18-21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1-4 · மீகா 7:5-6 · யோவான் 9:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:24 · யோவான் 10:19-21
53தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
54பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்.
55தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப் படியுமாகும்.
56மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?
Relatedமத்தேயு 16:3 · மத்தேயு 24:32-33 · மத்தேயு 11:25 · I நாளாகமம் 12:32 · லூக்கா 19:42-44 · தானியேல் 9:24-26
57நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன?
Relatedயோவான் 7:24 · உபாகமம் 32:29 · I கொரிந்தியர் 11:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:40 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:26-38 · லூக்கா 21:30
58உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைசாலையில் போடுவான்.
Relatedமத்தேயு 5:23-26 · ஏசாயா 55:6 · நீதிமொழிகள் 25:8-9 · யோபு 23:7 · லூக்கா 13:24-28 · எபிரெயர் 3:7-13
59நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Relatedமாற்கு 12:42 · மத்தேயு 18:34 · II தெசலோனிக்கேயர் 1:3 · மத்தேயு 25:41 · மத்தேயு 25:46 · லூக்கா 16:26
📖 லூக்காAll 24 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS