சகரியா 11
Tamil Bible (BSI 1957) • 17 verses
1லீபனோனே, அக்கினி உன் கேதுருமரங்களைப் பட்சிக்கும்படி உன் வாசல்களைத் திற.
Relatedஎரேமியா 22:23 · எரேமியா 22:6-7 · லூக்கா 21:23-24 · ஆபகூக் 2:17 · சகரியா 10:10 · லூக்கா 19:41-44
2தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது.
Relatedலூக்கா 23:31 · ஏசாயா 2:12-17 · எசேக்கியேல் 20:46 · நாகூம் 3:8-19 · ஏசாயா 32:15-19 · ஏசாயா 10:33-34
3மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனபடியால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனபடியால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கப்படுகிறது.
Relatedஎரேமியா 50:44 · எரேமியா 25:34-36 · எரேமியா 2:15 · செப்பனியா 1:10 · I சாமுவேல் 4:21-22 · எரேமியா 7:4
4என் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், கொலையுண்கிற ஆடுகளை மேய்க்கக்கடவாய்.
5அவைகளை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று எண்ணுகிறார்கள். அவைகளை விற்கிறவர்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களானோம் என்கிறார்கள்; அவைகளை மேய்க்கிறவர்கள், அவைகள்மேல் இரக்கம் வைக்கிறதில்லை.
Relatedஎரேமியா 50:7 · I தீமோத்தேயு 6:5-10 · ஓசியா 12:8 · II இராஜாக்கள் 4:1 · யோவான் 16:2 · மீகா 3:1-3
6நான் இனி தேசத்துக் குடிகளின்மேல் இரக்கம் வையாமல் மனுஷரில் யாவரையும் அவனவனுடைய அயலான் கையிலும், அவனவனுடைய ராஜாவின் கையிலும் அகப்படப்பண்ணுவேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
7கொலையுண்கிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு நிக்கிரகம் என்றும் பேரிட்டு மந்தையை மேய்த்து,
Relatedசகரியா 11:4 · சகரியா 11:14 · ஏசாயா 11:4 · எசேக்கியேல் 37:16-23 · சகரியா 11:10-11 · செப்பனியா 3:12
8ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.
9இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அதமாகிறது அதமாகட்டும்; மீதியானவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று தின்னக்கடவது என்று நான் சொல்லி,
Relatedமத்தேயு 13:10-11 · எரேமியா 43:11 · வெளிப்படுத்தின விசேஷம் 22:11 · ஏசாயா 9:19-21 · மத்தேயு 21:19 · உபாகமம் 28:53-56
10அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்.
Relatedசகரியா 11:7 · சங்கீதம் 89:39 · எரேமியா 14:21 · எபிரெயர் 8:8-13 · எரேமியா 31:31-32 · சங்கீதம் 90:17
11அந்நாளிலே அது அற்றுப்போயிற்று; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது கர்த்தருடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன.
Relatedபுலம்பல் 3:25-26 · யாக்கோபு 2:5-6 · செப்பனியா 3:12 · ஏசாயா 40:31 · சங்கீதம் 72:12-14 · ஏசாயா 26:8-9
12உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.
Relatedமத்தேயு 26:15 · யாத்திராகமம் 21:32 · லூக்கா 22:3-6 · மாற்கு 14:10-11 · யோவான் 13:27-30 · ஆதியாகமம் 37:28
13கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.
Relatedமத்தேயு 27:3-10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:18-19 · ஏசாயா 53:2-3 · மத்தேயு 27:12 · ஏசாயா 54:7-10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:11
14நான் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதரக்கட்டை அற்றுப்போகப்பண்ணும்படிக்கு, நிக்கிரகம் என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் முறித்தேன்.
15கர்த்தர் என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள்.
Relatedஏசாயா 6:10-12 · எரேமியா 2:26-27 · புலம்பல் 2:14 · எசேக்கியேல் 13:3 · மத்தேயு 15:14 · லூக்கா 11:40
16இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பப்பண்ணுவேன்; அவன் அதமாகிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறுண்டதைத் தேடாமலும், நொறுங்குண்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய குளம்புகளை உடைத்துப்போடுவான்.
Relatedஎசேக்கியேல் 34:2-6 · யோவான் 10:1 · யோவான் 10:12-13 · எரேமியா 23:2 · மத்தேயு 23:13-29 · லூக்கா 12:45-46
17மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.
Relatedஎரேமியா 23:1 · எசேக்கியேல் 13:3 · I கொரிந்தியர் 8:4 · எசேக்கியேல் 34:2 · ஏசாயா 42:19-20 · மத்தேயு 23:16
📖 சகரியாAll 14 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS