பிரசங்கி 11
Tamil Bible (BSI 1957) • 10 verses
1உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.
Relatedபிரசங்கி 11:6 · நீதிமொழிகள் 19:17 · எபிரெயர் 6:10 · மத்தேயு 10:42 · II கொரிந்தியர் 9:6 · ஏசாயா 32:20
2ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.
RelatedI தீமோத்தேயு 6:18-19 · சங்கீதம் 112:9 · யோபு 5:19 · லூக்கா 6:30-35 · நீதிமொழிகள் 6:16 · மீகா 5:5
3மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும்.
RelatedI யோவான் 3:17 · ஏசாயா 55:10-11 · சங்கீதம் 65:9-13 · லூக்கா 13:7 · I இராஜாக்கள் 18:45 · லூக்கா 16:22-26
4காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.
5ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.
6காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.
RelatedII கொரிந்தியர் 9:10-11 · ஏசாயா 55:10 · ஆகாய் 1:6-11 · ஓசியா 10:12 · II கொரிந்தியர் 9:6 · சகரியா 8:11-12
7வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே.
Relatedமத்தேயு 5:45 · பிரசங்கி 7:11 · சங்கீதம் 84:11 · நீதிமொழிகள் 15:30 · யோபு 33:30 · நீதிமொழிகள் 29:13
8மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவன் இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாயிருக்கும்; வந்து சம்பவிப்பதெல்லாம் மாயையே.
9வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
Relatedபிரசங்கி 12:14 · I யோவான் 2:15-16 · பிரசங்கி 12:1 · பிரசங்கி 3:17 · புலம்பல் 3:27 · II கொரிந்தியர் 5:10
10நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.
📖 பிரசங்கிAll 12 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS