மாற்கு 10
Tamil Bible (BSI 1957) • 52 verses
1அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.
2அப்பொழுது பரிசேயர், அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.
RelatedI கொரிந்தியர் 7:10-11 · லூக்கா 11:53-54 · மத்தேயு 23:13 · யோவான் 8:6 · யோவான் 7:32 · யோவான் 11:57
3அவர் பிரதியுத்தரமாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.
4அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுக்கொடுத்திருக்கிறார் என்றார்கள்.
5இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்கள் இருதயகடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.
Relatedமத்தேயு 19:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51 · நெகேமியா 9:16-17 · நெகேமியா 9:26 · எபிரெயர் 3:7-10 · உபாகமம் 31:27
6ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
Relatedஆதியாகமம் 1:27 · ஆதியாகமம் 5:2 · ஆதியாகமம் 1:1 · ஆதியாகமம் 2:20-23 · II பேதுரு 3:4 · மல்கியா 2:14-16
7இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;
8அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
9ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
10பின்பு வீட்டிலே அவருடைய சீஷர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மறுபடியும் அவரிடத்தில் விசாரித்தார்கள்.
11அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
Relatedமத்தேயு 19:9 · மத்தேயு 5:31-32 · ரோமர் 7:3 · I கொரிந்தியர் 7:10-11 · லூக்கா 16:18 · I கொரிந்தியர் 7:4
12மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள் என்றார்.
13அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
Relatedமத்தேயு 19:13-15 · லூக்கா 18:15-17 · உபாகமம் 31:12-13 · யாத்திராகமம் 10:9-11 · மாற்கு 9:38 · யோவேல் 2:16
14இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
Relatedமத்தேயு 19:14 · மத்தேயு 18:4 · மத்தேயு 18:10 · சங்கீதம் 131:1-2 · I பேதுரு 2:2 · லூக்கா 18:15-16
15எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உஙகளுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
16அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
Relatedஏசாயா 40:11 · மாற்கு 9:36 · யோவான் 21:15-17 · லூக்கா 2:28-34 · உபாகமம் 28:3 · ஆதியாகமம் 48:14-16
17பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
Relatedமத்தேயு 19:16-30 · லூக்கா 18:18-30 · ரோமர் 2:7 · யோவான் 6:27-28 · லூக்கா 10:25 · ரோமர் 10:2-4
18அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
19விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார்.
Relatedயாத்திராகமம் 20:12-17 · ரோமர் 13:9 · யாக்கோபு 2:11 · லூக்கா 18:20 · மத்தேயு 19:17-19 · I கொரிந்தியர் 6:7-9
20அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
Relatedஎசேக்கியேல் 33:31-32 · II தீமோத்தேயு 3:5 · பிலிப்பியர் 3:6 · ரோமர் 7:9 · லூக்கா 18:11-12 · மத்தேயு 19:20
21இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.
Relatedமத்தேயு 6:19-21 · வெளிப்படுத்தின விசேஷம் 2:4 · I தீமோத்தேயு 6:17-19 · லூக்கா 18:22 · லூக்கா 10:42 · யாக்கோபு 2:10
22அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.
RelatedI யோவான் 2:15-16 · I தீமோத்தேயு 6:9-10 · லூக்கா 12:15 · எபேசியர் 5:5 · II தீமோத்தேயு 4:10 · மத்தேயு 19:22
23அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.
RelatedI கொரிந்தியர் 1:26 · யாக்கோபு 2:5 · லூக்கா 18:24 · யோவான் 3:5 · மத்தேயு 19:23-26 · II பேதுரு 1:11
24சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது!
Relatedயாக்கோபு 5:1-3 · நீதிமொழிகள் 11:28 · I தீமோத்தேயு 6:17 · சங்கீதம் 52:7 · வெளிப்படுத்தின விசேஷம் 3:17 · நீதிமொழிகள் 18:11
25ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
26அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 16:31 · ரோமர் 10:9-13 · II கொரிந்தியர் 11:23 · மாற்கு 7:37 · மாற்கு 6:51 · லூக்கா 13:23
27இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
28அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
Relatedமத்தேயு 19:27-30 · லூக்கா 14:33 · மாற்கு 1:16-20 · லூக்கா 18:28-30 · பிலிப்பியர் 3:7-9 · மத்தேயு 4:22
29அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,
RelatedI கொரிந்தியர் 9:23 · மத்தேயு 5:10-11 · மாற்கு 8:35 · எபிரெயர் 11:24-26 · வெளிப்படுத்தின விசேஷம் 2:3 · மத்தேயு 10:18
30இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Relatedபிலிப்பியர் 3:8 · லூக்கா 18:30 · II கொரிந்தியர் 6:10 · நீதிமொழிகள் 3:9-10 · யாக்கோபு 1:12 · மத்தேயு 5:11-12
31ஆகிலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.
Relatedமத்தேயு 19:30 · லூக்கா 13:30 · மத்தேயு 20:16 · ரோமர் 9:30-33 · லூக்கா 18:11-14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:46-48
32பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்துபோனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்:
33இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.
Relatedமத்தேயு 20:17-19 · மத்தேயு 27:2 · மாற்கு 8:31 · மத்தேயு 16:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:13-14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:27
34அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
Relatedமத்தேயு 16:21 · மாற்கு 14:65 · மத்தேயு 26:67 · லூக்கா 22:63-65 · மாற்கு 15:17-20 · லூக்கா 23:35-39
35அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்.
Relatedமத்தேயு 20:20-28 · II சாமுவேல் 14:4-11 · I இராஜாக்கள் 2:20 · மாற்கு 14:33 · மாற்கு 5:37 · I இராஜாக்கள் 2:16
36அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
37அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்.
38இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார்.
39அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 1:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:2 · யோவான் 17:14 · மாற்கு 14:31 · யோவான் 13:37 · கொலோசெயர் 1:24
40ஆனாலும் என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
41மற்ற பத்துப்பேரும் அதைக் கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.
Relatedமத்தேயு 20:24 · பிலிப்பியர் 2:3 · நீதிமொழிகள் 13:10 · ரோமர் 12:10 · மாற்கு 9:33-36 · யாக்கோபு 4:5
42அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
43உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.
Relatedமத்தேயு 23:8-12 · லூக்கா 14:11 · மாற்கு 9:35 · மத்தேயு 20:26-27 · லூக்கா 9:48 · கலாத்தியர் 5:13
44உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
45அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
Relatedமத்தேயு 20:28 · பிலிப்பியர் 2:5-8 · II கொரிந்தியர் 8:9 · தீத்து 2:14 · யோவான் 13:14 · யோவான் 10:15
46பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
Relatedலூக்கா 18:35-19:1 · மத்தேயு 20:29-34 · யோவான் 9:8 · லூக்கா 16:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:2-3 · லூக்கா 16:20
47அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான்.
Relatedமாற்கு 1:24 · மத்தேயு 9:27 · மத்தேயு 15:22 · வெளிப்படுத்தின விசேஷம் 22:16 · லூக்கா 18:36-37 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:22-23
48அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
Relatedஎரேமியா 29:13 · மாற்கு 7:26-29 · ஆதியாகமம் 32:24-28 · லூக்கா 18:39 · லூக்கா 11:5-10 · சங்கீதம் 62:12
49இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
Relatedலூக்கா 18:40 · மத்தேயு 20:32-34 · சங்கீதம் 86:15 · சங்கீதம் 145:8 · யோவான் 11:28 · எபிரெயர் 4:15
50உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்.
51இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
Relatedலூக்கா 18:41-43 · மாற்கு 10:36 · II நாளாகமம் 1:7 · மத்தேயு 7:7 · பிலிப்பியர் 4:6 · மத்தேயு 6:8
52இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.
Relatedமத்தேயு 9:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18 · லூக்கா 7:50 · மாற்கு 5:34 · மாற்கு 8:25 · லூக்கா 8:2-3
📖 மாற்குAll 16 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS