வெளிப்படுத்தின விசேஷம் 13
Tamil Bible (BSI 1957) • 18 verses
1பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 12:3 · வெளிப்படுத்தின விசேஷம் 17:3 · தானியேல் 7:23-25 · வெளிப்படுத்தின விசேஷம் 11:7 · தானியேல் 7:7-8 · தானியேல் 7:2-3
2நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
Relatedதானியேல் 7:4-7 · வெளிப்படுத்தின விசேஷம் 17:12 · வெளிப்படுத்தின விசேஷம் 12:9 · I பேதுரு 5:8 · வெளிப்படுத்தின விசேஷம் 20:2 · வெளிப்படுத்தின விசேஷம் 19:20
3அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 17:8 · வெளிப்படுத்தின விசேஷம் 13:14 · வெளிப்படுத்தின விசேஷம் 17:17 · வெளிப்படுத்தின விசேஷம் 17:10 · வெளிப்படுத்தின விசேஷம் 13:12 · வெளிப்படுத்தின விசேஷம் 13:1-2
4அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 13:2 · வெளிப்படுத்தின விசேஷம் 18:18 · வெளிப்படுத்தின விசேஷம் 12:3 · வெளிப்படுத்தின விசேஷம் 13:12-13 · வெளிப்படுத்தின விசேஷம் 13:15 · II கொரிந்தியர் 4:4
5பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டுமாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
Relatedதானியேல் 7:8 · தானியேல் 7:25 · வெளிப்படுத்தின விசேஷம் 12:6 · தானியேல் 11:36 · தானியேல் 7:11 · வெளிப்படுத்தின விசேஷம் 11:2-3
6அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.
Relatedமத்தேயு 12:34 · வெளிப்படுத்தின விசேஷம் 12:12 · எபிரெயர் 9:24 · மத்தேயு 15:19 · வெளிப்படுத்தின விசேஷம் 19:1-6 · வெளிப்படுத்தின விசேஷம் 4:4
7மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
Relatedதானியேல் 7:21 · வெளிப்படுத்தின விசேஷம் 11:7 · வெளிப்படுத்தின விசேஷம் 12:17 · தானியேல் 7:25 · தானியேல் 8:24-25 · தானியேல் 12:1
8உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.
RelatedI பேதுரு 1:19-20 · எபேசியர் 1:4 · மத்தேயு 25:34 · வெளிப்படுத்தின விசேஷம் 17:8 · வெளிப்படுத்தின விசேஷம் 3:5 · தீத்து 1:2
9காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 2:7 · வெளிப்படுத்தின விசேஷம் 2:17 · வெளிப்படுத்தின விசேஷம் 2:11 · வெளிப்படுத்தின விசேஷம் 2:29
10சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.
Relatedஎரேமியா 15:2 · வெளிப்படுத்தின விசேஷம் 14:12 · ஏசாயா 33:1 · வெளிப்படுத்தின விசேஷம் 3:10 · லூக்கா 21:19 · எபிரெயர் 6:12
11பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
Relatedதானியேல் 7:8 · II கொரிந்தியர் 11:13-15 · மத்தேயு 7:15 · வெளிப்படுத்தின விசேஷம் 17:6 · வெளிப்படுத்தின விசேஷம் 12:3-4 · ரோமர் 16:18
12அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படிசெய்தது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 17:10-11 · வெளிப்படுத்தின விசேஷம் 19:20 · வெளிப்படுத்தின விசேஷம் 14:9 · வெளிப்படுத்தின விசேஷம் 14:11 · வெளிப்படுத்தின விசேஷம் 13:14-17 · II தெசலோனிக்கேயர் 2:4
13அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,
Relatedமத்தேயு 24:24 · வெளிப்படுத்தின விசேஷம் 19:20 · வெளிப்படுத்தின விசேஷம் 16:14 · II தெசலோனிக்கேயர் 2:9-10 · I இராஜாக்கள் 18:38 · உபாகமம் 13:1-3
14மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 19:20 · வெளிப்படுத்தின விசேஷம் 12:9 · வெளிப்படுத்தின விசேஷம் 13:8 · II தெசலோனிக்கேயர் 2:4 · வெளிப்படுத்தின விசேஷம் 16:2 · வெளிப்படுத்தின விசேஷம் 20:10
15மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 20:4 · வெளிப்படுத்தின விசேஷம் 19:20 · தானியேல் 3:3-6 · வெளிப்படுத்தின விசேஷம் 16:2 · வெளிப்படுத்தின விசேஷம் 17:6 · வெளிப்படுத்தின விசேஷம் 18:20
16அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 20:4 · வெளிப்படுத்தின விசேஷம் 19:20 · எசேக்கியேல் 9:4 · வெளிப்படுத்தின விசேஷம் 7:3 · உபாகமம் 6:8 · வெளிப்படுத்தின விசேஷம் 14:9-11
17அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்கூடாதபடிக்கும் செய்தது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 13:16 · வெளிப்படுத்தின விசேஷம் 14:11 · வெளிப்படுத்தின விசேஷம் 15:2 · வெளிப்படுத்தின விசேஷம் 22:4 · வெளிப்படுத்தின விசேஷம் 13:18 · வெளிப்படுத்தின விசேஷம் 14:9
18இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
📖 வெளிப்படுத்தின விசேஷம்All 22 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS