யோபு 37
Tamil Bible (BSI 1957) • 24 verses
1இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது.
Relatedயோபு 4:14 · யோபு 21:6 · யாத்திராகமம் 19:16 · தானியேல் 10:7-8 · மத்தேயு 28:2-4 · சங்கீதம் 89:7
2அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாய்க் கேளுங்கள்.
Relatedயோபு 36:33 · யோபு 37:5 · யோபு 38:1 · சங்கீதம் 29:3-9 · சங்கீதம் 104:7 · யாத்திராகமம் 19:16-19
3அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார்.
Relatedயோபு 38:13 · மத்தேயு 24:27 · ஏசாயா 11:12 · சங்கீதம் 97:4 · வெளிப்படுத்தின விசேஷம் 11:19 · சங்கீதம் 77:13
4அதற்குப்பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.
5தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.
6அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.
Relatedயோபு 38:22 · யோபு 36:27 · சங்கீதம் 147:16-18 · எசேக்கியேல் 13:13 · எஸ்றா 10:9 · சங்கீதம் 148:8
7தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்.
8அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.
9தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.
10தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோகும்.
11அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.
12அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.
Relatedசங்கீதம் 148:8 · யோவேல் 2:23 · சங்கீதம் 104:24 · யாக்கோபு 5:17-18 · சங்கீதம் 65:9-10 · ஆமோஸ் 4:7
13ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார்.
RelatedI இராஜாக்கள் 18:45 · I சாமுவேல் 12:18-19 · யோபு 38:26-27 · யோபு 36:31 · யாத்திராகமம் 9:18-25 · யோபு 38:37-38
14யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்.
Relatedயாத்திராகமம் 14:13 · சங்கீதம் 145:10-12 · சங்கீதம் 111:2 · ஆபகூக் 2:20 · சங்கீதம் 145:5-6 · யோபு 36:24
15தேவன் அவைகளைத் திட்டம்பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ?
16மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,
Relatedயோபு 36:4 · நீதிமொழிகள் 3:19-20 · ஏசாயா 40:22 · எரேமியா 10:12-13 · யோபு 36:29 · சங்கீதம் 104:2-3
17தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும் வகையையும் அறிவீரோ?
18வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவரோடேகூட இருந்து விரித்தீரோ?
Relatedஏசாயா 44:24 · சங்கீதம் 104:2 · ஏசாயா 40:22 · யாத்திராகமம் 38:8 · சங்கீதம் 150:1 · ஏசாயா 40:12
19அவருக்கு நாம் சொல்லத்தக்கதை எங்களுக்குப் போதியும்; அந்தகாரத்தினிமித்தம் முறைதப்பிப் பேசுகிறோம்.
Relatedசங்கீதம் 73:16-17 · யோபு 42:3 · யோபு 28:20-21 · I கொரிந்தியர் 13:12 · நீதிமொழிகள் 30:2-4 · யோபு 13:3
20நான் பேசத்துணிந்தேன் என்று யாதாமொருவன் அவருக்கு முன்பாகச் சொல்லத்தகுமோ? ஒருவன் பேசத்துணிந்தால் அவன் விழுங்கப்பட்டுப்போவானே.
21இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கப்பண்ணியிருக்கிறசமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான காந்தி வருகிறபோது,
22ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக்கூடாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.
23சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.
24ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார் என்றான்.
📖 யோபுAll 42 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS