I கொரிந்தியர் 7
Tamil Bible (BSI 1957) • 40 verses
1நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.
RelatedI கொரிந்தியர் 7:8 · மத்தேயு 19:10-11 · I கொரிந்தியர் 7:26-27 · I கொரிந்தியர் 7:37-38 · ஆதியாகமம் 20:6 · நீதிமொழிகள் 6:29
2ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
Relatedஎபேசியர் 5:28 · எபேசியர் 5:33 · I கொரிந்தியர் 7:9 · நீதிமொழிகள் 18:22 · நீதிமொழிகள் 5:18-19 · I கொரிந்தியர் 6:18
3புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.
4மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
5உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள்.
Relatedயாத்திராகமம் 19:15 · யோவேல் 2:16 · I சாமுவேல் 21:4-5 · சகரியா 12:12-14 · மத்தேயு 4:10 · I தெசலோனிக்கேயர் 3:5
6இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன்.
7எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.
Relatedமத்தேயு 19:11-12 · I கொரிந்தியர் 9:5 · ரோமர் 12:6 · I கொரிந்தியர் 7:8 · I கொரிந்தியர் 12:4 · I கொரிந்தியர் 12:11
8விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
RelatedI கொரிந்தியர் 7:32 · I கொரிந்தியர் 7:34-35 · I கொரிந்தியர் 7:7 · I கொரிந்தியர் 7:26-27 · I கொரிந்தியர் 7:1
9ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்.
RelatedI தீமோத்தேயு 5:14 · I கொரிந்தியர் 7:2 · I தீமோத்தேயு 5:11 · I கொரிந்தியர் 7:28 · I கொரிந்தியர் 7:39 · I கொரிந்தியர் 7:36
10விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப்பிரிந்து போகக்கூடாது.
Relatedமத்தேயு 5:32 · லூக்கா 16:18 · மல்கியா 2:14-16 · மத்தேயு 19:3-9 · மாற்கு 10:11-12 · எரேமியா 3:20
11பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.
Relatedஎரேமியா 3:1 · I கொரிந்தியர் 7:10 · ஏசாயா 50:1 · நியாயாதிபதிகள் 19:2-3 · உபாகமம் 22:19 · மாற்கு 10:2
12மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.
RelatedI கொரிந்தியர் 7:6 · II கொரிந்தியர் 11:17 · I கொரிந்தியர் 7:25 · எஸ்றா 10:11-19 · எஸ்றா 10:2-3
13அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.
14என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.
Relatedமல்கியா 2:15-16 · I தீமோத்தேயு 4:5 · தீத்து 1:15 · ஏசாயா 52:1 · ரோமர் 11:16 · I கொரிந்தியர் 6:15-17
15ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
Relatedரோமர் 14:19 · யாக்கோபு 3:17-18 · II கொரிந்தியர் 13:11 · ரோமர் 12:18 · I கொரிந்தியர் 14:33 · மத்தேயு 12:50
16மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?
RelatedI பேதுரு 3:1-2 · I கொரிந்தியர் 9:22 · ரோமர் 11:14 · I தீமோத்தேயு 4:16 · யாக்கோபு 5:19-20 · லூக்கா 15:10
17தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன்.
RelatedI கொரிந்தியர் 4:17 · I கொரிந்தியர் 7:24 · I கொரிந்தியர் 7:20-21 · ரோமர் 12:3-8 · I கொரிந்தியர் 7:18 · II கொரிந்தியர் 8:18
18ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவனாயிருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:5 · கலாத்தியர் 5:1-3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:19 · கொலோசெயர் 3:11
19விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.
Relatedகலாத்தியர் 5:6 · கலாத்தியர் 6:15 · I யோவான் 2:3-4 · I யோவான் 3:22-24 · ரோமர் 2:25-29 · வெளிப்படுத்தின விசேஷம் 22:14
20அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்.
RelatedI கொரிந்தியர் 7:17 · I தெசலோனிக்கேயர் 4:11 · நீதிமொழிகள் 27:8 · I கொரிந்தியர் 7:21-24 · II தெசலோனிக்கேயர் 3:12 · லூக்கா 3:10-14
21அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ சுயாதீனனாகக்கூடுமானால் அதை நலமென்று அநுசரித்துக்கொள்.
Relatedகொலோசெயர் 3:11 · I பேதுரு 2:18-24 · I கொரிந்தியர் 12:13 · லூக்கா 12:29 · லூக்கா 10:40-41 · I பேதுரு 5:7
22கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.
RelatedI பேதுரு 2:16 · பிலேமோன் 1:16 · கொலோசெயர் 3:22-24 · கலாத்தியர் 5:1 · ரோமர் 6:18-22 · கலாத்தியர் 5:13
23நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
RelatedI கொரிந்தியர் 6:20 · I பேதுரு 1:18-19 · தீத்து 2:14 · லேவியராகமம் 25:42 · வெளிப்படுத்தின விசேஷம் 5:9 · I பேதுரு 3:18
24சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்.
RelatedI கொரிந்தியர் 7:20 · கொலோசெயர் 3:23-24 · I கொரிந்தியர் 7:17 · ஆதியாகமம் 17:1 · I கொரிந்தியர் 10:31 · ஆதியாகமம் 5:22-24
25அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று, என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.
RelatedI கொரிந்தியர் 7:6 · I கொரிந்தியர் 4:2 · II கொரிந்தியர் 8:8-10 · I கொரிந்தியர் 7:40 · I கொரிந்தியர் 7:12 · சங்கீதம் 78:63
26அதென்னவெனில், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் விவாகமில்லாமலிருக்கிறது மனுஷனுக்கு நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன்.
RelatedI கொரிந்தியர் 7:8 · I கொரிந்தியர் 7:1 · லூக்கா 23:28-29 · I பேதுரு 4:17 · I கொரிந்தியர் 7:28 · I கொரிந்தியர் 7:35-38
27நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால். மனைவியைத் தேடாதே.
28நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல; கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன்.
29மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும்,
RelatedI யோவான் 2:17 · ரோமர் 13:11-12 · I கொரிந்தியர் 7:31 · எபிரெயர் 13:13-14 · யாக்கோபு 4:13-16 · பிரசங்கி 12:13-14
30அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும்,
Relatedபிரசங்கி 3:4 · லூக்கா 6:21 · யோவான் 16:22 · சங்கீதம் 30:5 · வெளிப்படுத்தின விசேஷம் 7:17 · லூக்கா 6:25
31இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.
RelatedI யோவான் 2:17 · I பேதுரு 4:7 · யாக்கோபு 4:14 · லூக்கா 21:34 · I பேதுரு 1:24 · பிரசங்கி 9:7-10
32நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
33விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
RelatedI பேதுரு 3:7 · கொலோசெயர் 3:19 · I தீமோத்தேயு 5:8 · எபேசியர் 5:25-33 · லூக்கா 12:22 · I சாமுவேல் 1:4-8
34அதுபோல, மனைவியானவளுக்கும், கன்னிகைக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்.
Relatedலூக்கா 10:40-42 · I கொரிந்தியர் 6:20 · லூக்கா 2:36-37 · ரோமர் 12:1-2 · II கொரிந்தியர் 11:28 · பிலிப்பியர் 1:20
35இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.
RelatedI கொரிந்தியர் 7:33-34 · I கொரிந்தியர் 7:36 · லூக்கா 8:14 · பிலிப்பியர் 4:8 · I கொரிந்தியர் 7:2 · மத்தேயு 19:12
36ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.
37ஆயினும் அதற்கு அவசியத்தைக் காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து, தன் புத்திரியின் கன்னிகைப் பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான்.
38இப்படியிருக்க, அவளை விவாகம்பண்ணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்.
Relatedஎபிரெயர் 13:4 · I கொரிந்தியர் 7:1-2 · I கொரிந்தியர் 7:37 · I கொரிந்தியர் 7:8 · I கொரிந்தியர் 7:32-34 · I கொரிந்தியர் 7:26
39மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங்காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறாள்; தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள்.
Relatedரோமர் 7:2-3 · II கொரிந்தியர் 6:14-16 · I கொரிந்தியர் 7:10 · I கொரிந்தியர் 7:15 · மல்கியா 2:11 · ஆதியாகமம் 6:2
40ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.
📖 I கொரிந்தியர்All 16 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS