பிரசங்கி 7
Tamil Bible (BSI 1957) • 29 verses
1பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜனனநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 14:13 · நீதிமொழிகள் 22:1 · பிரசங்கி 4:2 · II கொரிந்தியர் 5:8 · II கொரிந்தியர் 5:1 · பிலிப்பியர் 1:21-23
2விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.
Relatedசங்கீதம் 90:12 · எபிரெயர் 9:27 · உபாகமம் 32:29 · உபாகமம் 32:46 · பிலிப்பியர் 3:19 · ஆகாய் 1:5
3நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்.
RelatedII கொரிந்தியர் 7:9-11 · ரோமர் 5:3-4 · யாக்கோபு 4:8-10 · யோவான் 16:20-22 · யாக்கோபு 1:2-4 · எரேமியா 31:15-20
4ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்பு வீட்டிலே இருக்கும்.
Relatedமத்தேயு 8:14-16 · லூக்கா 7:12-13 · I சாமுவேல் 25:36 · தானியேல் 5:1-4 · ஏசாயா 53:3-4 · ஓசியா 7:5
5ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.
Relatedநீதிமொழிகள் 15:31-32 · சங்கீதம் 141:5 · வெளிப்படுத்தின விசேஷம் 3:19 · நீதிமொழிகள் 17:10 · நீதிமொழிகள் 13:18 · நீதிமொழிகள் 9:8
6மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே.
7இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்.
Relatedஉபாகமம் 16:19 · யாத்திராகமம் 23:8 · நீதிமொழிகள் 17:23 · நீதிமொழிகள் 17:8 · I சாமுவேல் 8:3 · உபாகமம் 28:33-34
8ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.
Relatedஎபிரெயர் 10:36 · சங்கீதம் 126:5-6 · நீதிமொழிகள் 14:29 · I பேதுரு 1:13 · யாக்கோபு 5:11 · நீதிமொழிகள் 15:18
9உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
Relatedயாக்கோபு 1:19 · நீதிமொழிகள் 14:17 · நீதிமொழிகள் 16:32 · எபேசியர் 4:26-27 · நீதிமொழிகள் 26:23-26 · எஸ்தர் 3:5-6
10இந்நாட்களைப்பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.
Relatedசங்கீதம் 14:2-3 · ஆதியாகமம் 6:11-12 · ஏசாயா 50:1 · ரோமர் 1:22-32 · நியாயாதிபதிகள் 6:13 · எரேமியா 44:17-19
11சுதந்தரத்தோடே ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலே பிரயோஜனமுண்டு.
Relatedபிரசங்கி 11:7 · I தீமோத்தேயு 6:17-19 · நீதிமொழிகள் 8:10-11 · பிரசங்கி 2:13 · லூக்கா 16:8-9 · I இராஜாக்கள் 3:6-9
12ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.
Relatedநீதிமொழிகள் 8:35 · நீதிமொழிகள் 2:7 · நீதிமொழிகள் 3:18 · நீதிமொழிகள் 18:10-11 · யோவான் 17:3 · நீதிமொழிகள் 11:4
13தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்?
14வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் சிந்தனைசெய்; மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்கு தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்.
15இவை எல்லாவற்றையும் என் மாயையின் நாட்களில் கண்டேன்; தன் நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானுமுண்டு, தன் பாவத்திலே நீடித்திருக்கிற பாவியுமுண்டு.
Relatedபிரசங்கி 8:12-14 · பிரசங்கி 6:12 · மத்தேயு 23:34-35 · சங்கீதம் 73:3-13 · பிரசங்கி 9:1-2 · யோபு 9:22-23
16மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?
Relatedரோமர் 12:3 · நீதிமொழிகள் 25:16 · கொலோசெயர் 2:18 · I கொரிந்தியர் 3:18 · யாக்கோபு 3:13-17 · மத்தேயு 6:1-7
17மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்கு முன்னே நீ ஏன் சாகவேண்டும்?
Relatedநீதிமொழிகள் 10:27 · சங்கீதம் 55:23 · யோபு 22:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:10
18நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாதிருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகள் எல்லாவற்றினின்றும் காக்கப்படுவான்.
19நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைப் பார்க்கிலும், ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்.
Relatedகொலோசெயர் 1:9-11 · நீதிமொழிகள் 21:22 · பிரசங்கி 9:13-18 · நீதிமொழிகள் 24:5 · II சாமுவேல் 20:16-22
20ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.
Relatedரோமர் 3:23 · ஏசாயா 53:6 · I யோவான் 1:8-10 · யாக்கோபு 3:2 · நீதிமொழிகள் 20:9 · I இராஜாக்கள் 8:46
21சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்.
Relatedநீதிமொழிகள் 30:10 · ஏசாயா 29:21 · II சாமுவேல் 16:10 · I கொரிந்தியர் 13:5-7 · II சாமுவேல் 19:19
22அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்குத் தெரியுமே.
23இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன்; நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று.
24தூரமும் மகா ஆழமுமாயிருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்?
25ஞானத்தையும், காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும், மதிகேட்டின் ஆகாமியத்தையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என் மனதைச் செலுத்தினேன்.
Relatedபிரசங்கி 10:13 · யோசுவா 7:13 · பிரசங்கி 2:15 · நீதிமொழிகள் 26:11 · பிரசங்கி 2:20 · II பேதுரு 2:3-9
26கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாக சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.
Relatedநீதிமொழிகள் 22:14 · நீதிமொழிகள் 5:3-5 · நீதிமொழிகள் 2:16 · பிரசங்கி 2:26 · நீதிமொழிகள் 2:18-19 · நீதிமொழிகள் 7:21-27
27காரியத்தை அறியும்படிக்கு ஒவ்வொன்றாய் விசாரணைபண்ணி, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்:
28என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன்; இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை.
29இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.
Relatedஎரேமியா 4:22 · ஆதியாகமம் 6:11-12 · மாற்கு 7:8-9 · தீத்து 3:3 · ஆதியாகமம் 5:1 · ஆதியாகமம் 1:26-27
📖 பிரசங்கிAll 12 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS