II பேதுரு 3
Tamil Bible (BSI 1957) • 18 verses
1பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.
RelatedII தீமோத்தேயு 1:6 · II பேதுரு 1:12-15 · சங்கீதம் 24:4 · I தீமோத்தேயு 5:22 · மத்தேயு 5:8 · I பேதுரு 1:22
2பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்.
Relatedயூதா 1:17 · II பேதுரு 2:21 · லூக்கா 1:70 · II பேதுரு 1:19-21 · I பேதுரு 1:10-12 · லூக்கா 24:44
3முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து,
Relatedயூதா 1:18 · I தீமோத்தேயு 4:1-2 · II பேதுரு 2:10 · II கொரிந்தியர் 4:2 · யூதா 1:16 · II பேதுரு 1:20
4அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
Relatedஎரேமியா 17:15 · மல்கியா 2:17 · லூக்கா 12:45 · எரேமியா 5:12-13 · ஏசாயா 5:18-19 · பிரசங்கி 8:11
5பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும்,
Relatedஎபிரெயர் 11:3 · சங்கீதம் 24:2 · ஆதியாகமம் 1:9 · ஆதியாகமம் 1:6 · சங்கீதம் 33:6 · சங்கீதம் 136:6
6அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
Relatedமத்தேயு 24:38-39 · II பேதுரு 2:5 · லூக்கா 17:27 · ஆதியாகமம் 7:10-23 · ஆதியாகமம் 9:15 · யோபு 12:15
7இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தைகளினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
RelatedII பேதுரு 3:10 · II பேதுரு 3:12 · ஏசாயா 51:6 · வெளிப்படுத்தின விசேஷம் 21:1 · மத்தேயு 24:35 · II பேதுரு 2:9
8பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.
9தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
RelatedI தீமோத்தேயு 2:4 · ரோமர் 2:4 · சங்கீதம் 86:15 · ஆபகூக் 2:3 · ஏசாயா 30:18 · வெளிப்படுத்தின விசேஷம் 2:21
10கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 21:1 · மத்தேயு 24:35 · II பேதுரு 3:7 · வெளிப்படுத்தின விசேஷம் 16:15 · ஏசாயா 51:6 · I தெசலோனிக்கேயர் 5:2
11இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!
RelatedI பேதுரு 1:15 · பிலிப்பியர் 1:27 · I பேதுரு 2:12 · I தீமோத்தேயு 6:11 · II பேதுரு 3:12 · யாக்கோபு 3:13
12தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும்.
13அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
Relatedஏசாயா 65:17 · வெளிப்படுத்தின விசேஷம் 21:1 · ஏசாயா 66:22 · வெளிப்படுத்தின விசேஷம் 21:27 · ஏசாயா 60:21
14ஆகையால், பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.
RelatedI தெசலோனிக்கேயர் 5:23 · I தெசலோனிக்கேயர் 3:13 · பிலிப்பியர் 1:10 · I கொரிந்தியர் 15:58 · I யோவான் 3:3 · I கொரிந்தியர் 1:8
15மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;
16எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.
Relatedமத்தேயு 15:6 · எபிரெயர் 5:11 · II பேதுரு 2:14 · யாக்கோபு 1:8 · பிலிப்பியர் 3:19 · எரேமியா 23:36
17ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,
Relatedஎபிரெயர் 3:14 · கொலோசெயர் 2:8 · II கொரிந்தியர் 11:13-15 · I கொரிந்தியர் 15:58 · I கொரிந்தியர் 10:12 · எபேசியர் 4:14
18நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
Relatedகொலோசெயர் 1:10 · எபேசியர் 4:15 · I பேதுரு 2:2 · கொலோசெயர் 3:10 · பிலிப்பியர் 3:8 · I பேதுரு 5:10-11
📖 II பேதுருAll 3 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS