லூக்கா 4
Tamil Bible (BSI 1957) • 44 verses
1இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,
Relatedமத்தேயு 4:1-11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38 · மாற்கு 1:12-13 · லூக்கா 4:18 · ஏசாயா 61:1 · யோவான் 3:34
2நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
Relatedயாத்திராகமம் 34:28 · எபிரெயர் 4:15 · I இராஜாக்கள் 19:8 · உபாகமம் 9:9 · எபிரெயர் 2:18 · உபாகமம் 9:18
3அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
4அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
RelatedI யோவான் 2:15-16 · I கொரிந்தியர் 15:52 · எபேசியர் 6:12 · யோபு 20:5 · மத்தேயு 4:8 · சங்கீதம் 73:19
6இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
Relatedயோவான் 12:31 · I யோவான் 5:19 · யோவான் 14:30 · எபேசியர் 2:2 · வெளிப்படுத்தின விசேஷம் 20:2-3 · வெளிப்படுத்தின விசேஷம் 13:2
7நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
Relatedசங்கீதம் 72:11 · லூக்கா 8:28 · வெளிப்படுத்தின விசேஷம் 5:8 · வெளிப்படுத்தின விசேஷம் 22:8 · வெளிப்படுத்தின விசேஷம் 4:10 · ஏசாயா 46:6
8இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
Relatedஉபாகமம் 6:13 · உபாகமம் 10:20 · மத்தேயு 4:10 · சங்கீதம் 83:18 · வெளிப்படுத்தின விசேஷம் 19:10 · I சாமுவேல் 7:3
9அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
10ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
11உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
Relatedசங்கீதம் 91:12
12அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.
Relatedஉபாகமம் 6:16 · எபிரெயர் 3:8-9 · I கொரிந்தியர் 10:9 · மல்கியா 3:15 · மத்தேயு 4:7 · சங்கீதம் 106:14
13பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.
14பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:37 · மத்தேயு 4:23-25 · மாற்கு 1:28 · மத்தேயு 4:12 · மாற்கு 1:14 · யோவான் 4:43
15அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.
16தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
Relatedமத்தேயு 2:23 · மத்தேயு 13:54-55 · மாற்கு 6:1-3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:14-16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:2 · லூக்கா 2:51
17அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
Relatedஏசாயா 61:1-3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:42 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:27 · லூக்கா 20:42
18கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
Relatedஏசாயா 61:1 · மத்தேயு 11:5 · சங்கீதம் 146:7-8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38 · லூக்கா 7:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18
19கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
Relatedஏசாயா 61:2 · ஏசாயா 63:4 · லூக்கா 19:42 · II கொரிந்தியர் 6:1 · லேவியராகமம் 25:50-54 · லேவியராகமம் 25:8-13
20வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
Relatedலூக்கா 4:17 · யோவான் 8:2 · லூக்கா 5:3 · லூக்கா 19:48 · மத்தேயு 5:1-2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:13
21அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.
Relatedயோவான் 4:25-26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:18 · மத்தேயு 13:14 · லூக்கா 10:23-24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:16-18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:29-33
22எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
Relatedமத்தேயு 13:54-56 · சங்கீதம் 45:2 · யோவான் 6:42 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:10 · மாற்கு 6:2-3 · பிரசங்கி 12:10-11
23அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.
Relatedமத்தேயு 11:23-24 · யோவான் 4:46-53 · மாற்கு 2:1-12 · யோவான் 2:3-4 · ரோமர் 2:21-22 · மாற்கு 6:1
24ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Relatedமத்தேயு 13:57 · யோவான் 4:44 · மாற்கு 6:4-5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:18-22 · யோவான் 4:41
25அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.
Relatedயாக்கோபு 5:17 · I இராஜாக்கள் 17:1 · மத்தேயு 20:15 · I இராஜாக்கள் 18:1-2 · மாற்கு 7:26-29 · லூக்கா 10:21
26ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை.
27அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
RelatedII இராஜாக்கள் 5:1-27 · யோவான் 17:12 · I இராஜாக்கள் 19:19-21 · மத்தேயு 12:4 · தானியேல் 4:35 · யோபு 36:23
28ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 22:21-23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:54 · எரேமியா 37:15-16 · I தெசலோனிக்கேயர் 2:15-16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:33 · எரேமியா 38:6
29எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டு போனார்கள்.
Relatedயோவான் 8:59 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:28-32 · யோவான் 8:37 · யோவான் 15:24-25 · எபிரெயர் 13:12 · எண்ணாகமம் 15:35
30அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார்.
31பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
Relatedமத்தேயு 4:13 · மாற்கு 1:21-28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:1-3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:50-14:2 · மத்தேயு 10:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:19-21
32அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
Relatedலூக்கா 4:36 · மத்தேயு 7:28-29 · II கொரிந்தியர் 10:4-5 · எபிரெயர் 4:12-13 · தீத்து 2:15 · I தெசலோனிக்கேயர் 1:5
33ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.
Relatedமாற்கு 1:23
34அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான்.
Relatedமாற்கு 1:24 · மத்தேயு 8:29 · யாக்கோபு 2:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:14 · லூக்கா 1:35 · வெளிப்படுத்தின விசேஷம் 3:7
35அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.
Relatedலூக்கா 4:41 · லூக்கா 4:39 · மத்தேயு 8:26 · மாற்கு 9:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:17-18 · வெளிப்படுத்தின விசேஷம் 12:12
36எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
Relatedலூக்கா 4:32 · மாற்கு 7:37 · மாற்கு 16:17-20 · லூக்கா 10:17-20 · மத்தேயு 12:22-23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:12-16
37அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று.
38பின்பு அவர் ஜெப ஆலயத்தை விட்டுப்புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜூரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.
Relatedமத்தேயு 8:14-15 · மாற்கு 1:29-31 · யாக்கோபு 5:14-15 · லூக்கா 7:3-4 · யோவான் 11:22 · யோவான் 11:3
39அவர் அவளிடத்தில் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
Relatedலூக்கா 4:41 · லூக்கா 4:35 · லூக்கா 8:24 · லூக்கா 8:2-3 · II கொரிந்தியர் 5:14-15 · சங்கீதம் 116:12
40சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
Relatedமாற்கு 1:32-34 · மத்தேயு 8:16-17 · மாற்கு 5:23 · மாற்கு 3:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:12 · லூக்கா 7:21-23
41பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்.
Relatedமாற்கு 1:34 · யாக்கோபு 2:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:17-18 · லூக்கா 4:34-35 · யோவான் 20:31 · மாற்கு 3:11
42உதயமானபோது, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள்.
43அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.
Relatedமாற்கு 1:38-39 · II தீமோத்தேயு 4:2 · யோவான் 6:38-40 · யோவான் 20:21 · யோவான் 9:4 · மாற்கு 1:14-15
44அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம்பண்ணிக்கொண்டுவந்தார்.
📖 லூக்காAll 24 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS