எபேசியர் 6
Tamil Bible (BSI 1957) • 24 verses
1பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.
Relatedகொலோசெயர் 3:20-25 · நீதிமொழிகள் 23:22 · நீதிமொழிகள் 6:20 · கொலோசெயர் 3:16-17 · நீதிமொழிகள் 1:8 · உபாகமம் 21:18
2உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,
Relatedயாத்திராகமம் 20:12 · உபாகமம் 27:16 · மத்தேயு 15:4-6 · நீதிமொழிகள் 20:20 · மல்கியா 1:6 · எசேக்கியேல் 22:7
3உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
4பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
Relatedகொலோசெயர் 3:21 · நீதிமொழிகள் 22:6 · நீதிமொழிகள் 29:15 · நீதிமொழிகள் 19:18 · உபாகமம் 6:7 · நீதிமொழிகள் 29:17
5வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து;
RelatedI பேதுரு 2:18-21 · தீத்து 2:9-10 · கொலோசெயர் 3:17-24 · சங்கீதம் 86:11 · மல்கியா 1:6 · எபேசியர் 5:22
6மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
Relatedகொலோசெயர் 3:22-23 · I தெசலோனிக்கேயர் 2:4 · கலாத்தியர் 1:10 · எபேசியர் 5:17 · I பேதுரு 4:2 · பிலிப்பியர் 2:12
7அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து,
Relatedகொலோசெயர் 3:23 · I கொரிந்தியர் 10:31 · எபேசியர் 6:5-6 · II இராஜாக்கள் 5:13 · ஆதியாகமம் 31:38-40 · II இராஜாக்கள் 5:2-3
8மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.
Relatedகொலோசெயர் 3:24 · லூக்கா 14:14 · II கொரிந்தியர் 5:10 · நீதிமொழிகள் 11:18 · மத்தேயு 6:4 · மத்தேயு 16:27
9எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34 · கொலோசெயர் 3:25-4:1 · ரோமர் 2:11 · யோபு 31:13-15 · லூக்கா 6:31 · உபாகமம் 10:17
10கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
Relatedபிலிப்பியர் 4:13 · ஏசாயா 40:31 · யோசுவா 1:9 · I கொரிந்தியர் 16:13 · I பேதுரு 5:10 · கொலோசெயர் 1:11
11நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
RelatedII கொரிந்தியர் 10:4 · ரோமர் 13:12 · எபேசியர் 6:13 · I தெசலோனிக்கேயர் 5:8 · I பேதுரு 5:8 · II கொரிந்தியர் 2:11
12ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
Relatedகொலோசெயர் 1:13 · II கொரிந்தியர் 4:4 · எபேசியர் 2:2 · கொலோசெயர் 2:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18 · எபேசியர் 1:21
13ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
RelatedII கொரிந்தியர் 10:4 · லூக்கா 21:36 · எபேசியர் 6:11-17 · எபேசியர் 5:16 · வெளிப்படுத்தின விசேஷம் 3:10 · லூக்கா 8:13
14சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
Relatedஏசாயா 59:17 · I தெசலோனிக்கேயர் 5:8 · ஏசாயா 11:5 · லூக்கா 12:35 · II கொரிந்தியர் 6:7 · I பேதுரு 1:13
15சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
Relatedஏசாயா 52:7 · ரோமர் 10:15 · II கொரிந்தியர் 5:18-21 · ஆபகூக் 3:19 · லூக்கா 15:22 · உன்னதப்பாட்டு 7:1
16பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
RelatedI பேதுரு 5:8-9 · I யோவான் 5:4-5 · நீதிமொழிகள் 18:10 · சங்கீதம் 56:3-4 · ஆதியாகமம் 15:1 · சங்கீதம் 56:10-11
17இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
Relatedஎபிரெயர் 4:12 · ஏசாயா 59:17 · வெளிப்படுத்தின விசேஷம் 19:15 · I தெசலோனிக்கேயர் 5:8 · ஏசாயா 49:2 · மத்தேயு 4:10-11
18எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
RelatedI தெசலோனிக்கேயர் 5:17 · கொலோசெயர் 4:2 · பிலிப்பியர் 4:6 · I தீமோத்தேயு 2:1 · யூதா 1:20 · ரோமர் 8:26-27
19சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக,
Relatedகொலோசெயர் 4:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:29 · II தெசலோனிக்கேயர் 3:1 · I தெசலோனிக்கேயர் 5:25 · எபிரெயர் 13:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:31
20நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.
RelatedII கொரிந்தியர் 5:20 · கொலோசெயர் 4:4 · II தீமோத்தேயு 2:9 · I தெசலோனிக்கேயர் 2:2 · பிலிப்பியர் 1:7 · I யோவான் 3:16
21அன்றியும், எனக்கடுத்த காரியங்களும், என் சுகசெய்திகளும் உங்களுக்குத் தெரியவரும்படிக்கு, அவைகளையெல்லாம் நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 20:4 · II தீமோத்தேயு 4:12 · தீத்து 3:12 · கொலோசெயர் 4:7-9 · கொலோசெயர் 1:7 · I கொரிந்தியர் 4:17
22நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும், அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடத்தில் அனுப்பினேன்.
Relatedகொலோசெயர் 4:7-8 · பிலிப்பியர் 2:25 · கொலோசெயர் 2:2 · I தெசலோனிக்கேயர் 3:2 · பிலிப்பியர் 2:19 · II தெசலோனிக்கேயர் 2:17
23பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசுவாசத்தோடு கூடிய அன்பும் உண்டாவதாக.
Relatedகலாத்தியர் 6:16 · கலாத்தியர் 5:6 · I பேதுரு 5:14 · I தீமோத்தேயு 1:14 · II தெசலோனிக்கேயர் 3:16 · சங்கீதம் 122:6-9
24நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.
Relatedமத்தேயு 22:37 · I கொரிந்தியர் 16:22-23 · மத்தேயு 6:13 · II கொரிந்தியர் 13:14 · தீத்து 2:7 · தீத்து 3:15
📖 எபேசியர்All 6 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS