யாக்கோபு 5
Tamil Bible (BSI 1957) • 20 verses
1ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
Relatedநீதிமொழிகள் 11:28 · I தீமோத்தேயு 6:9-10 · நீதிமொழிகள் 11:4 · லூக்கா 6:24-25 · எரேமியா 9:23 · யாக்கோபு 1:11
2உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின.
3உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.
Relatedரோமர் 2:5 · யாக்கோபு 5:7-8 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8 · வெளிப்படுத்தின விசேஷம் 20:15 · ஏசாயா 2:2 · எரேமியா 19:9
4இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.
Relatedலேவியராகமம் 19:13 · எரேமியா 22:13 · உபாகமம் 24:14-15 · ரோமர் 9:29 · மல்கியா 3:5 · யோபு 24:10-11
5பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள்.
RelatedI தீமோத்தேயு 5:6 · லூக்கா 16:25 · லூக்கா 16:19 · வெளிப்படுத்தின விசேஷம் 19:17-18 · ஆமோஸ் 6:1 · எரேமியா 12:3
6நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்து நிற்கவில்லை.
RelatedI பேதுரு 2:22-23 · யோவான் 19:9-11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:32 · லூக்கா 22:51-53 · ஏசாயா 53:7 · மத்தேயு 5:39
7இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.
Relatedஎபிரெயர் 12:1-3 · யாக்கோபு 5:8-9 · யோவேல் 2:23 · கலாத்தியர் 6:9 · உபாகமம் 11:14 · கொலோசெயர் 1:11
8நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.
Relatedகலாத்தியர் 5:22 · யாக்கோபு 5:9 · சங்கீதம் 37:7 · I பேதுரு 4:7 · சங்கீதம் 27:14 · பிலிப்பியர் 4:5
9சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.
Relatedலேவியராகமம் 19:18 · I கொரிந்தியர் 4:5 · யாக்கோபு 4:11 · மத்தேயு 24:33 · மத்தேயு 6:14-15 · கலாத்தியர் 5:14
10என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
Relatedஎபிரெயர் 11:32-38 · மத்தேயு 5:11-12 · எபிரெயர் 13:7 · I தெசலோனிக்கேயர் 2:14-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:52 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:21
11இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.
Relatedயாக்கோபு 1:12 · யாத்திராகமம் 34:6 · யோபு 1:21-22 · ஏசாயா 55:6-7 · மத்தேயு 10:22 · மத்தேயு 5:10-11
12விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.
Relatedமத்தேயு 5:33-37 · மத்தேயு 23:16-22 · II கொரிந்தியர் 1:17-20 · I பேதுரு 4:8 · யாக்கோபு 3:1-2 · I கொரிந்தியர் 11:34
13உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.
Relatedசங்கீதம் 50:15 · யோனா 2:2 · எபேசியர் 5:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:24-25 · வெளிப்படுத்தின விசேஷம் 19:1-6 · வெளிப்படுத்தின விசேஷம் 5:9-14
14உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
Relatedமாற்கு 6:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:8 · மாற்கு 16:18 · II இராஜாக்கள் 4:33 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:40 · II இராஜாக்கள் 5:11
15அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
RelatedI யோவான் 5:14-16 · யாக்கோபு 5:13 · யாக்கோபு 5:16 · மத்தேயு 21:21-22 · யாக்கோபு 1:6 · மத்தேயு 17:20
16நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
Relatedஎரேமியா 29:12-13 · நீதிமொழிகள் 15:29 · மத்தேயு 21:22 · சங்கீதம் 34:15 · யோவான் 9:31 · சங்கீதம் 145:18-19
17எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
RelatedI இராஜாக்கள் 17:1 · லூக்கா 4:25 · I இராஜாக்கள் 18:1 · வெளிப்படுத்தின விசேஷம் 11:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:26
18மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.
19சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால்,
Relatedகலாத்தியர் 6:1 · மத்தேயு 18:15 · யாக்கோபு 5:20 · யூதா 1:22-23 · லூக்கா 22:32 · எசேக்கியேல் 34:16
20தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.
RelatedI பேதுரு 4:8 · நீதிமொழிகள் 10:12 · I தீமோத்தேயு 4:16 · நீதிமொழிகள் 11:30 · யாக்கோபு 5:19 · ரோமர் 11:14
📖 யாக்கோபுAll 5 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS