I தெசலோனிக்கேயர் 5
Tamil Bible (BSI 1957) • 28 verses
1சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:7 · மத்தேயு 24:36 · I தெசலோனிக்கேயர் 4:9 · மத்தேயு 24:3 · மாற்கு 13:30-32 · II கொரிந்தியர் 9:1
2இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 16:15 · II பேதுரு 3:10 · மத்தேயு 24:42-44 · வெளிப்படுத்தின விசேஷம் 3:3 · மத்தேயு 25:13 · லூக்கா 12:39-40
3சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
Relatedலூக்கா 21:34-35 · மத்தேயு 24:37-39 · லூக்கா 17:26-30 · வெளிப்படுத்தின விசேஷம் 18:7-8 · எபிரெயர் 2:3 · II தெசலோனிக்கேயர் 1:9
4சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.
RelatedI யோவான் 2:8 · உபாகமம் 19:6 · உபாகமம் 28:45 · II பேதுரு 3:10 · எரேமியா 42:16 · கொலோசெயர் 1:13
5நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
6ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.
RelatedI பேதுரு 1:13 · மத்தேயு 24:42 · லூக்கா 22:46 · I பேதுரு 5:8 · ரோமர் 13:11-14 · வெளிப்படுத்தின விசேஷம் 16:15
7தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்.
Relatedரோமர் 13:13 · I கொரிந்தியர் 15:34 · II பேதுரு 2:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:15 · தானியேல் 5:4-5 · எபேசியர் 5:14
8பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
Relatedரோமர் 13:12-13 · I பேதுரு 1:13 · எபேசியர் 6:11 · ஏசாயா 59:17 · எபிரெயர் 10:35-36 · எபிரெயர் 6:19
9தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.
RelatedI தெசலோனிக்கேயர் 1:10 · I பேதுரு 2:10 · II தீமோத்தேயு 2:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:48 · நீதிமொழிகள் 16:4 · ரோமர் 9:11-23
10நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.
Relatedரோமர் 14:8-9 · I பேதுரு 3:18 · II கொரிந்தியர் 5:15 · மத்தேயு 20:28 · எபேசியர் 5:2 · I பேதுரு 2:24
11ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.
Relatedஎபேசியர் 4:29 · ரோமர் 15:2 · எபிரெயர் 10:25 · எபிரெயர் 3:13 · I தெசலோனிக்கேயர் 4:18 · ரோமர் 14:19
12அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,
Relatedஎபிரெயர் 13:17 · எபிரெயர் 13:7 · I தீமோத்தேயு 5:17-18 · I கொரிந்தியர் 16:18 · I கொரிந்தியர் 16:16 · I கொரிந்தியர் 15:10
13அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.
Relatedமாற்கு 9:50 · எபிரெயர் 12:14 · I கொரிந்தியர் 9:7-11 · யோவான் 13:34-35 · யாக்கோபு 3:18 · கலாத்தியர் 6:6
14மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
RelatedII தீமோத்தேயு 4:2 · ரோமர் 14:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:35 · II தெசலோனிக்கேயர் 3:6-7 · ஏசாயா 35:3-4 · ரோமர் 15:1-3
15ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்யநாடுங்கள்.
RelatedI பேதுரு 3:9 · கலாத்தியர் 6:10 · லேவியராகமம் 19:18 · III யோவான் 1:11 · ரோமர் 12:17-21 · எபிரெயர் 12:14
16எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
17இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
18எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
19ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
Relatedஎபேசியர் 4:30 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51 · II தீமோத்தேயு 1:6 · I தீமோத்தேயு 4:14 · ஏசாயா 63:10 · நெகேமியா 9:30
20தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.
RelatedI கொரிந்தியர் 14:3-6 · I கொரிந்தியர் 14:1 · I கொரிந்தியர் 11:4 · I கொரிந்தியர் 14:37-39 · எண்ணாகமம் 11:25-29 · I கொரிந்தியர் 14:22-25
21எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
RelatedI யோவான் 4:1 · ரோமர் 12:2 · எபேசியர் 5:10 · லூக்கா 12:57 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11 · ரோமர் 12:9
22பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்.
RelatedII கொரிந்தியர் 6:3 · பிலிப்பியர் 4:8 · II கொரிந்தியர் 8:20-21 · I கொரிந்தியர் 10:31-33 · ரோமர் 12:17 · யாத்திராகமம் 23:7
23சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
Relatedயூதா 1:24 · I கொரிந்தியர் 1:8-9 · எபிரெயர் 4:12 · I தெசலோனிக்கேயர் 3:13 · I பேதுரு 5:10 · எபேசியர் 5:26-27
24உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
RelatedII தெசலோனிக்கேயர் 3:3 · எண்ணாகமம் 23:19 · உபாகமம் 7:9 · I கொரிந்தியர் 1:9 · II தீமோத்தேயு 2:13 · I பேதுரு 5:10
25சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
Relatedபிலிப்பியர் 1:19 · எபிரெயர் 13:18-19 · பிலேமோன் 1:22 · II கொரிந்தியர் 1:11 · எபேசியர் 6:18-20 · ரோமர் 15:30
26சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
27இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Relatedகொலோசெயர் 4:16 · II தீமோத்தேயு 4:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:13 · எண்ணாகமம் 27:23 · I தீமோத்தேயு 1:3 · I தீமோத்தேயு 5:7
28நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
📖 I தெசலோனிக்கேயர்All 5 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS