மத்தேயு 25
Tamil Bible (BSI 1957) • 46 verses
1அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப்புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.
Relatedலூக்கா 12:35-36 · மத்தேயு 24:42-51 · வெளிப்படுத்தின விசேஷம் 19:7 · பிலிப்பியர் 2:15-16 · யோவான் 3:29 · வெளிப்படுத்தின விசேஷம் 21:9
2அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.
Relatedஎரேமியா 24:2 · I கொரிந்தியர் 10:1-5 · மத்தேயு 13:47-48 · மத்தேயு 13:19-23 · I யோவான் 2:19 · யூதா 1:5
3புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 3:15-16 · II தீமோத்தேயு 3:5 · ஏசாயா 48:1-2 · ஏசாயா 58:2 · வெளிப்படுத்தின விசேஷம் 3:1 · எபிரெயர் 12:15
4புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.
5மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.
Relatedஆபகூக் 2:3 · I தெசலோனிக்கேயர் 5:6-8 · II பேதுரு 3:4-9 · லூக்கா 20:9 · மத்தேயு 24:48 · மாற்கு 14:37-38
6நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.
7அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
Relatedலூக்கா 12:35 · II பேதுரு 3:14 · வெளிப்படுத்தின விசேஷம் 3:19-20 · வெளிப்படுத்தின விசேஷம் 2:4-5 · வெளிப்படுத்தின விசேஷம் 3:2
8புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.
Relatedநீதிமொழிகள் 13:9 · லூக்கா 12:35 · எபிரெயர் 4:1 · மத்தேயு 13:20-21 · வெளிப்படுத்தின விசேஷம் 3:9 · யோபு 8:13-14
9புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
Relatedசங்கீதம் 49:7-9 · வெளிப்படுத்தின விசேஷம் 3:17-18 · ஏசாயா 55:6-7 · எசேக்கியேல் 14:20 · ஏசாயா 55:1-3 · எசேக்கியேல் 14:14-16
10அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாணவீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.
Relatedலூக்கா 13:25 · மத்தேயு 24:44 · லூக்கா 12:36-37 · I பேதுரு 1:13 · ஆதியாகமம் 7:16 · வெளிப்படுத்தின விசேஷம் 22:20
11பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
12அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
RelatedI கொரிந்தியர் 8:3 · யோவான் 10:27 · II தீமோத்தேயு 2:19 · லூக்கா 13:26-30 · சங்கீதம் 1:6 · யோவான் 9:31
13மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
Relatedமத்தேயு 24:42-44 · வெளிப்படுத்தின விசேஷம் 16:15 · I தெசலோனிக்கேயர் 5:6 · லூக்கா 21:36 · I கொரிந்தியர் 16:13 · மாற்கு 13:33-37
14அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.
Relatedமாற்கு 13:34 · I பேதுரு 4:9-11 · ரோமர் 12:6-8 · லூக்கா 19:12-27 · எபேசியர் 4:11 · மத்தேயு 25:14-30
15அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப்போனான்.
16ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம்பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.
Relatedபிலேமோன் 1:6-7 · III யோவான் 1:5-8 · II தீமோத்தேயு 2:6 · I தீமோத்தேயு 6:17-18 · I கொரிந்தியர் 9:16-23 · ஏசாயா 23:18
17அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.
Relatedநீதிமொழிகள் 3:9-10 · எபேசியர் 5:16 · II கொரிந்தியர் 8:12 · II கொரிந்தியர் 9:11-14 · I தீமோத்தேயு 5:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:36-39
18ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.
RelatedII பேதுரு 1:8 · நீதிமொழிகள் 26:13-16 · லூக்கா 19:20 · ஆகாய் 1:2-4 · மல்கியா 1:10 · நீதிமொழிகள் 18:9
19வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.
RelatedII கொரிந்தியர் 5:10 · I கொரிந்தியர் 3:12-15 · ரோமர் 14:7-12 · மத்தேயு 18:23-24 · லூக்கா 16:1-2 · மத்தேயு 24:48
20அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
RelatedI கொரிந்தியர் 15:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:24 · யாக்கோபு 2:18 · லூக்கா 19:16-17 · கொலோசெயர் 1:29 · II தீமோத்தேயு 4:1-8
21அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
Relatedமத்தேயு 25:23 · லூக்கா 16:10 · யோவான் 12:26 · II தீமோத்தேயு 2:12 · வெளிப்படுத்தின விசேஷம் 3:21 · யோவான் 14:3
22இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
RelatedII கொரிந்தியர் 8:12 · ரோமர் 12:6-8 · II கொரிந்தியர் 8:7-8 · லூக்கா 19:18-19 · II கொரிந்தியர் 8:1-3
23அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
24ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.
Relatedலூக்கா 19:20-22 · லூக்கா 15:29 · மல்கியா 3:14-15 · எரேமியா 2:31 · எசேக்கியேல் 18:25-29 · யோபு 21:14-15
25ஆகையால், நான் பயந்து போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
RelatedII தீமோத்தேயு 1:6-7 · ரோமர் 8:15 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8 · நீதிமொழிகள் 26:13 · ஏசாயா 57:11 · II சாமுவேல் 6:9-10
26அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
27அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,
28அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.
29உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
30பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.
Relatedமத்தேயு 8:12 · மத்தேயு 22:13 · மத்தேயு 13:50 · வெளிப்படுத்தின விசேஷம் 3:15-16 · எபிரெயர் 6:7-8 · தீத்து 3:14
31அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 1:7 · II தெசலோனிக்கேயர் 1:7-8 · மத்தேயு 19:28 · யூதா 1:14 · மாற்கு 8:38 · மத்தேயு 16:27
32அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
Relatedமல்கியா 3:18 · மத்தேயு 13:49 · II கொரிந்தியர் 5:10 · சங்கீதம் 98:9 · எசேக்கியேல் 34:17-22 · மத்தேயு 3:12
33செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
Relatedசங்கீதம் 100:3 · சங்கீதம் 45:9 · யோவான் 21:15-17 · யோவான் 10:26-28 · சங்கீதம் 110:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:34-35
34அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
RelatedI பேதுரு 1:19-20 · யாக்கோபு 2:5 · வெளிப்படுத்தின விசேஷம் 21:7 · வெளிப்படுத்தின விசேஷம் 13:8 · I பேதுரு 1:3-5 · லூக்கா 12:32
35பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
RelatedI யோவான் 3:16-19 · யாக்கோபு 2:15-16 · உபாகமம் 15:7-11 · எசேக்கியேல் 18:16 · எசேக்கியேல் 18:7 · எபிரெயர் 13:16
36வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.
Relatedயாக்கோபு 1:27 · II தீமோத்தேயு 1:16-18 · எபிரெயர் 13:3 · யாக்கோபு 5:14-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:35 · யாக்கோபு 2:14-16
37அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?
Relatedமத்தேயு 6:3 · I நாளாகமம் 29:14 · I பேதுரு 5:5-6 · ஏசாயா 64:6 · I கொரிந்தியர் 15:10 · நீதிமொழிகள் 15:33
38எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?
39எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
40அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
Relatedநீதிமொழிகள் 19:17 · நீதிமொழிகள் 14:31 · மத்தேயு 10:42 · மாற்கு 9:41 · I பேதுரு 1:22 · மத்தேயு 18:5-6
41அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
RelatedII பேதுரு 2:4 · யூதா 1:6-7 · மத்தேயு 13:42 · II தெசலோனிக்கேயர் 1:9 · யோவான் 8:44 · கலாத்தியர் 3:10-13
42பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;
Relatedயாக்கோபு 2:15-24 · I கொரிந்தியர் 16:22 · II தெசலோனிக்கேயர் 1:8 · யோவான் 5:23 · மத்தேயு 12:30 · மத்தேயு 25:35
43அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.
44அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
45அப்பொழுது, அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
Relatedநீதிமொழிகள் 21:13 · நீதிமொழிகள் 17:5 · நீதிமொழிகள் 14:31 · மத்தேயு 25:40 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:5 · I யோவான் 3:12-20
46அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
📖 மத்தேயுAll 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS