அப்போஸ்தலருடைய நடபடிகள் 8
Tamil Bible (BSI 1957) • 40 verses
1அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 22:20 · தானியேல் 3:16-18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:40 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:33 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:58 · லூக்கா 11:49-50
2தேவபக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள்.
Relatedஆதியாகமம் 50:10-11 · II நாளாகமம் 32:33 · எரேமியா 22:10 · II நாளாகமம் 35:25 · எரேமியா 22:18 · ஏசாயா 57:1-2
3சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான்.
RelatedI தீமோத்தேயு 1:13 · பிலிப்பியர் 3:6 · கலாத்தியர் 1:13 · I கொரிந்தியர் 15:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:58 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:21
4சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.
Relatedமத்தேயு 10:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:1 · I தெசலோனிக்கேயர் 2:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:35 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:2-7
5அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கித்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 6:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:40 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:35-36 · I கொரிந்தியர் 1:23 · I கொரிந்தியர் 3:11
6பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.
7அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந்திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.
Relatedமத்தேயு 10:1 · மாற்கு 16:17-18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:8-10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:16 · எபிரெயர் 2:4 · மத்தேயு 4:24
8அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:52 · சங்கீதம் 96:10-12 · லூக்கா 2:10-11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:39 · ரோமர் 15:9-12 · ஏசாயா 35:1-2
9சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:36 · யோவான் 7:18 · யாத்திராகமம் 8:18-19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:18-20 · லேவியராகமம் 20:6
10தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 13:3 · II பேதுரு 2:2 · எரேமியா 31:34 · I கொரிந்தியர் 1:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:11
11அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.
12தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:3 · மத்தேயு 28:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:41 · I பேதுரு 3:21 · ரோமர் 10:10
13அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்.
Relatedயோவான் 5:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:6-7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:11 · யோவான் 8:30-31 · லூக்கா 8:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:44
14சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.
RelatedI தெசலோனிக்கேயர் 2:13 · I தெசலோனிக்கேயர் 3:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:1 · கலாத்தியர் 2:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:19-22 · மத்தேயு 13:23
15இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38 · யோவான் 16:23-24 · யோவான் 14:13-14 · மத்தேயு 18:19 · பிலிப்பியர் 1:19
16அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:2 · மத்தேயு 28:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:5-6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:15-17 · I கொரிந்தியர் 1:13-15
17அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 19:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:6 · II தீமோத்தேயு 1:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:4 · எண்ணாகமம் 27:18
18அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
RelatedI தீமோத்தேயு 6:5 · மத்தேயு 10:8 · II இராஜாக்கள் 8:9 · எசேக்கியேல் 13:19 · II இராஜாக்கள் 5:15-16
19நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
Relatedலூக்கா 14:7-11 · மத்தேயு 18:1-3 · III யோவான் 1:9 · யோவான் 5:44 · I கொரிந்தியர் 15:8-9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:9-11
20பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38 · தானியேல் 5:17 · மத்தேயு 10:8 · வெளிப்படுத்தின விசேஷம் 18:15 · யாக்கோபு 5:3 · I தீமோத்தேயு 6:9
21உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
Relatedஎபிரெயர் 4:13 · யோவான் 21:17 · மத்தேயு 6:22-24 · சங்கீதம் 36:1 · வெளிப்படுத்தின விசேஷம் 2:23 · வெளிப்படுத்தின விசேஷம் 22:19
22ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
RelatedII தீமோத்தேயு 2:25-26 · எபிரெயர் 4:12 · தானியேல் 4:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:30 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:11 · ரோமர் 2:4
23நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
24அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
Relatedயாத்திராகமம் 8:8 · எண்ணாகமம் 21:7 · யோபு 42:8 · யாத்திராகமம் 10:17 · I இராஜாக்கள் 13:6 · யாக்கோபு 5:16
25இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 20:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:28 · லூக்கா 9:52-56 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:22-23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:5
26பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 5:19 · எபிரெயர் 1:14 · II இராஜாக்கள் 1:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23
27அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;
Relatedசங்கீதம் 68:31 · செப்பனியா 3:10 · ஏசாயா 56:3-8 · எரேமியா 38:7 · சங்கீதம் 87:4 · மத்தேயு 12:42
28ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான்.
Relatedகொலோசெயர் 3:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:25 · ஏசாயா 1:1 · II தீமோத்தேயு 3:15-17 · உபாகமம் 17:18-19 · நீதிமொழிகள் 2:1-6
29ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2-4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:22-23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:6-7 · I தீமோத்தேயு 4:1
30அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.
Relatedலூக்கா 24:44-45 · எபேசியர் 5:17 · யோவான் 5:39 · மத்தேயு 15:10 · மத்தேயு 13:23 · மத்தேயு 24:15
31அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்.
Relatedரோமர் 10:14 · சங்கீதம் 73:16-17 · ஏசாயா 29:18-19 · சங்கீதம் 25:8-9 · நீதிமொழிகள் 30:2-3 · மத்தேயு 18:3-4
32அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
Relatedஏசாயா 53:7-8 · I பேதுரு 2:21-24 · எரேமியா 51:40 · ரோமர் 8:36 · எரேமியா 11:19 · சங்கீதம் 44:11-12
33அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.
34மந்திரி பிலிப்பை நோக்கி: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
35அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.
Relatedலூக்கா 24:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:23 · மத்தேயு 5:2 · I கொரிந்தியர் 2:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:42
36இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:47 · யோவான் 3:5 · யோவான் 3:23 · தீத்து 3:5-6 · எசேக்கியேல் 36:25 · I யோவான் 5:6
37அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;
38இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.
39அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.
RelatedI இராஜாக்கள் 18:12 · II இராஜாக்கள் 2:16 · எசேக்கியேல் 8:3 · எசேக்கியேல் 43:5 · எசேக்கியேல் 11:1 · எசேக்கியேல் 11:24
40பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.
📖 அப்போஸ்தலருடைய நடபடிகள்All 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS