I கொரிந்தியர் 4
Tamil Bible (BSI 1957) • 21 verses
1இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.
RelatedI பேதுரு 4:10 · தீத்து 1:7 · I தீமோத்தேயு 3:9 · எபேசியர் 6:19 · II கொரிந்தியர் 4:5 · கொலோசெயர் 1:25-27
2மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.
Relatedமத்தேயு 25:21 · லூக்கா 12:42 · லூக்கா 16:10-12 · கொலோசெயர் 4:17 · எண்ணாகமம் 12:7 · மத்தேயு 25:23
3ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப் பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.
4என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.
Relatedசங்கீதம் 143:2 · I யோவான் 3:20-21 · சங்கீதம் 130:3 · நீதிமொழிகள் 21:2 · II கொரிந்தியர் 1:12 · சங்கீதம் 19:12
5ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
Relatedயாக்கோபு 5:7 · II கொரிந்தியர் 5:10 · I கொரிந்தியர் 3:13 · எபிரெயர் 4:13 · II கொரிந்தியர் 10:18 · ரோமர் 2:16
6சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனினிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.
RelatedII கொரிந்தியர் 11:4 · II கொரிந்தியர் 12:6 · II கொரிந்தியர் 12:19 · ரோமர் 12:3 · கொலோசெயர் 2:18 · I தெசலோனிக்கேயர் 1:5
7அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?
8இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே.
Relatedநீதிமொழிகள் 13:7 · ரோமர் 12:3 · லூக்கா 6:25 · I கொரிந்தியர் 5:6 · II கொரிந்தியர் 13:9 · கலாத்தியர் 6:3
9எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.
Relatedஎபிரெயர் 10:33 · II கொரிந்தியர் 4:8-12 · ரோமர் 8:36 · எபிரெயர் 1:14 · II கொரிந்தியர் 1:8-10 · பிலிப்பியர் 1:29-30
10நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.
RelatedI கொரிந்தியர் 2:3 · I கொரிந்தியர் 3:18 · II கொரிந்தியர் 13:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:18 · II கொரிந்தியர் 11:19
11இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.
Relatedரோமர் 8:35 · பிலிப்பியர் 4:12 · II கொரிந்தியர் 11:23-27 · மத்தேயு 8:20 · II தீமோத்தேயு 3:11 · II கொரிந்தியர் 6:4-5
12எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.
RelatedI பேதுரு 3:9 · ரோமர் 12:14 · மத்தேயு 5:11 · I பேதுரு 4:12-14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:3 · ரோமர் 12:20
13தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.
14உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
RelatedI தெசலோனிக்கேயர் 2:11 · III யோவான் 1:4 · I கொரிந்தியர் 9:15 · I கொரிந்தியர் 4:15 · கொலோசெயர் 1:28 · II கொரிந்தியர் 12:19
15கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.
Relatedகலாத்தியர் 4:19 · I கொரிந்தியர் 3:10 · I கொரிந்தியர் 9:23 · I பேதுரு 1:23 · I கொரிந்தியர் 9:14 · யாக்கோபு 1:18
16ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.
RelatedI கொரிந்தியர் 11:1 · II தெசலோனிக்கேயர் 3:9 · பிலிப்பியர் 3:17 · I தெசலோனிக்கேயர் 1:6 · எபிரெயர் 13:7 · பிலிப்பியர் 4:9
17இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.
RelatedI கொரிந்தியர் 16:10 · I தீமோத்தேயு 1:2 · I கொரிந்தியர் 7:17 · II தீமோத்தேயு 1:2 · I கொரிந்தியர் 16:1 · I கொரிந்தியர் 14:33
18நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.
19ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.
RelatedII கொரிந்தியர் 13:1-4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:21 · II கொரிந்தியர் 1:23 · I கொரிந்தியர் 14:5 · I கொரிந்தியர் 11:34
20தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.
RelatedI கொரிந்தியர் 2:4 · I தெசலோனிக்கேயர் 1:5 · II கொரிந்தியர் 10:4-5 · ரோமர் 14:17 · ரோமர் 1:16 · ரோமர் 15:19
21உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?
📖 I கொரிந்தியர்All 16 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS