நீதிமொழிகள் 25
Tamil Bible (BSI 1957) • 28 verses
1யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:
2காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.
3வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.
4வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்.
RelatedII தீமோத்தேயு 2:20-21 · நீதிமொழிகள் 17:3 · எசேக்கியேல் 22:18 · ஏசாயா 1:25-27 · மல்கியா 3:2-3 · I பேதுரு 1:7
5ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
Relatedநீதிமொழிகள் 20:8 · நீதிமொழிகள் 16:12 · சங்கீதம் 101:7-8 · ஏசாயா 16:5 · நீதிமொழிகள் 20:28 · ஏசாயா 9:7
6ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.
Relatedநீதிமொழிகள் 27:2 · நீதிமொழிகள் 16:19 · நீதிமொழிகள் 25:27 · யாத்திராகமம் 3:11 · II சாமுவேல் 7:8-17 · I சாமுவேல் 15:17
7உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.
Relatedலூக்கா 14:7-11 · I பேதுரு 5:5 · லூக்கா 18:14 · வெளிப்படுத்தின விசேஷம் 4:1 · நீதிமொழிகள் 16:19
8வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.
Relatedமத்தேயு 5:25 · நீதிமொழிகள் 17:14 · நீதிமொழிகள் 18:6 · நீதிமொழிகள் 14:12 · நீதிமொழிகள் 30:33 · II சாமுவேல் 2:26
9நீ உன் அயலானுடனேமாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.
10மற்றப்படி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன் அவமானம் உன்னைவிட்டு நீங்காது.
Relatedசங்கீதம் 119:39
11ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
12கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.
Relatedசங்கீதம் 141:5 · நீதிமொழிகள் 15:31-32 · நீதிமொழிகள் 9:8 · நீதிமொழிகள் 27:5-6 · I சாமுவேல் 25:31-34 · நீதிமொழிகள் 15:5
13கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்.
14கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி.
Relatedலூக்கா 14:11 · நீதிமொழிகள் 20:6 · யூதா 1:16 · II கொரிந்தியர் 11:13-18 · I இராஜாக்கள் 22:11 · II பேதுரு 2:15-19
15நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.
Relatedநீதிமொழிகள் 15:1 · பிரசங்கி 10:4 · நீதிமொழிகள் 16:14 · ஆதியாகமம் 32:4-21 · I சாமுவேல் 25:24-44 · I சாமுவேல் 25:14
16தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.
Relatedநீதிமொழிகள் 25:27 · எபேசியர் 5:18 · நீதிமொழிகள் 24:13-14 · ஏசாயா 7:15 · I சாமுவேல் 14:25-27 · லூக்கா 21:34
17உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே.
18பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன்.
Relatedசங்கீதம் 57:4 · நீதிமொழிகள் 12:18 · எரேமியா 9:8 · யாக்கோபு 3:6 · நீதிமொழிகள் 24:28 · எரேமியா 9:3
19ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழி புரண்ட காலுக்கும் சமானம்.
Relatedஏசாயா 36:6 · எசேக்கியேல் 29:6-7 · யோபு 6:14-20 · II நாளாகமம் 28:20-21 · II தீமோத்தேயு 4:16 · ஏசாயா 30:1-3
20மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.
Relatedரோமர் 12:15 · பிரசங்கி 3:4 · யாக்கோபு 2:15-16 · உபாகமம் 24:12-17 · ஏசாயா 58:7 · நீதிமொழிகள் 10:26
21உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.
Relatedரோமர் 12:20-21 · மத்தேயு 5:44 · நீதிமொழிகள் 24:17 · யாத்திராகமம் 23:4-5 · லூக்கா 10:33-36 · II நாளாகமம் 28:15
22அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.
23வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
Relatedரோமர் 1:30 · சங்கீதம் 15:3 · யோபு 37:22 · நீதிமொழிகள் 26:20 · II கொரிந்தியர் 12:20 · சங்கீதம் 101:5
24சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
25தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.
Relatedநீதிமொழிகள் 15:30 · ரோமர் 10:15 · சங்கீதம் 63:1 · லூக்கா 2:10-11 · யாத்திராகமம் 17:2-3 · நாகூம் 1:15
26துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும்.
Relatedஎசேக்கியேல் 34:18-19 · I சாமுவேல் 22:14-18 · I தெசலோனிக்கேயர் 2:15 · எசேக்கியேல் 32:2 · மத்தேயு 23:34-37 · மத்தேயு 26:69-74
27தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.
Relatedயோவான் 5:44 · நீதிமொழிகள் 27:2 · பிலிப்பியர் 2:3 · II கொரிந்தியர் 12:11 · II கொரிந்தியர் 12:1 · நீதிமொழிகள் 25:16
28தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS